மடிப்பாக்கம் ஸ்ரீ அய்யப்பன் கோயில் மகாகும்பாபிஷேகம்

0
155

மடிப்பாக்கம் ஸ்ரீ அய்யப்பன் கோயில் மகாகும்பாபிஷேகம்

சென்னை, அனைத்து சாலைகளும் சென்னை மாடிப்பாக்கத்தில் உள்ள மிகவும் பிரபலமான ஸ்ரீ அய்யப்பன் கோயிலுக்கு வழிகாட்டுகின்றன. இக்கோயிலில் 2025 ஏப்ரல் 11 காலை 8.27 மணி முதல் காலை 9.57 மணி வரை மகாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும், பெரும்பாலும், தெற்கிலிருந்து வரும் ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள், இந்த மாபெரும் ஆன்மீக நிகழ்வைக் கண்டு களிக்கும் வகையில்,  கோயிலின் நிர்வாகக் குழுவினர் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

சென்னையின் தென்பகுதியான மடிப்பாக்கத்தில், புனித 18 படிகளின் உச்சியில் உள்ள யோக பீடத்தில், மணிகண்டன் வடிவத்தில் அமர்ந்திருக்கும் ஸ்ரீ ஹரி ஹர புத்திரர், தன்னைச் சரணடையும் பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் பூர்த்தி செய்கிறார் என்பது ஐதீகம்.

இந்த மடிப்பாக்கம் கோயில் 1978 ஜூன் 6 அன்று சபரிமலையின் தாந்திரி, செங்கன்னூர் தாழமன் மடம் பிரம்மஸ்ரீ நீலகண்டரு தாந்திரி மூலம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோவிலில் பின்பற்றப்படும் அனைத்து நடைமுறைகளும், சடங்குகளும், சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோயிலைப் போன்றே செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சபரிமலையின் பரம்பரை பூசாரிகளான செங்கன்னூர் தாழமன் மடம் பிரம்மஸ்ரீ கந்தாரு மோகனாரு தந்திரி மற்றும் பிரம்மஸ்ரீ மகேஷ் தந்திரி ஆகியோரால் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. எனவே, பகவான் ஸ்ரீ அய்யப்ப பக்தர்கள் ஒன்று கூடி இதைக் காண்பது வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் வரமாகும். இந்த நிகழ்ச்சியில் பந்தளம் மகாராஜா குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாகக், கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, 100 பேர் கொண்ட செண்டை மேளம் தாளக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சியும் நடைபெறும். கேரளாவின் ‘திருச்சூர் பூரம்’ போன்ற புகழ்பெற்ற நிகழ்வுகளில் மட்டுமே இத்தகைய நிகழ்ச்சி நடைபெறுவதால்,  காண்பதற்கு அரிய காட்சியாகும்.

சபரிமலைக்குப் பிறகு, புனித 18 படிகளின் மேல் இறைவன் ஸ்ரீ அய்யப்பன் அமர்ந்திருக்கும் முதல் கோயில் மடிப்பாக்கம் ஸ்ரீ அய்யப்பன் கோயிலாகும். இக்கோயில், தாழமன் மடத்திலிருந்து சபரிமலை தாந்திரி குடும்பத்தினரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பதுடன், தினசரி பூஜைகள் தாந்த்ரீக முறைகளில் செய்யப்படுகின்றன. பக்தர்கள் இந்தக் கோயிலை உத்தர சபரி கிரிஷம் என்று அழைக்கிறார்கள்.

சுவாமியே சரணம் அய்யப்பா!