சென்னையில் உள்ள அரசு பால்வாடிகள், மழலையர் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு இலவச சுகாதாரப் பரிசோதனைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது வடபழனி சிம்ஸ் மருத்துவமனை!
- வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்!
- ‘கேர் பேர்ஸ்’ என்ற பெயரிலான இத்திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு இறுதிக்குள் 5 வயதுக்கு உட்பட்ட 10,000 குழந்தைகளுக்கு இலவசப் பரிசோதனை மேற்கொள்ள இலக்கு!
சென்னை, உலக சுகாதார தினத்தை (World Health Day) முன்னிட்டு, ‘ஆரோக்கியமான ஆரம்பம், நம்பிக்கையான எதிர்காலம்’ (Healthy Beginnings, Hopeful Futures) என்ற இந்த ஆண்டு கருப்பொருளின் அடிப்படையில், அதிநவீன சுகாதார சேவைகளுக்கான முன்னணி மருத்துவமனையாகிய வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனை (SIMS Hospitals), ‘கேர் பேர்ஸ் – எதிர்காலத்தை வளர்த்தெடுப்பது’ (Care Bears – Nurturing the Future) என்கிற குழந்தைகளுக்கான இலவச சுகாதாரப் பரிசோதனைத் திட்டத்தைத் தொடங்கியது. இந்த முயற்சி சென்னை முழுவதும் உள்ள அரசு பால்வாடிகள், மழலையர் பள்ளிகளில் படிக்கும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பயனளிக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் தொடக்க நிகழ்வில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி தலைமை வகித்து திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சி தொடக்க விழாவில் பேசிய சிம்ஸ் மருத்துவமனையின் துணைத் தலைவர் டாக்டர் ராஜூ சிவசாமி கூறுகையில், “நமது இளம் குடிமக்களின் ஆரோக்கியம் முதன்மையான ஒரு முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்பதை உலக சுகாதார தினம் ஞாபகப்படுத்துகிறது. ஒவ்வொரு குழந்தையும் வாழ்க்கையின் தொடக்கத்திலேயே தரமான நோய்த் தடுப்புப் பராமரிப்பைப் பெற தகுதியுள்ளது. ‘கேர் பேர்ஸ்’ மூலம், குழந்தைகளுக்கு ஆரோக்கியமான தொடக்கத்தை வழங்கி எதிர்கால நலனில் கவனம் செலுத்துவதில் சிம்ஸ் மருத்துவமனை பெருமை கொள்கிறது. இந்தத் திட்டம் வெறும் சுகாதாரப் பரிசோதனையைவிட மேம்பட்ட ஒன்று. குழந்தைகளுக்கான நோய்த் தடுப்பு பராமரிப்பை அனைவரும் அணுகக்கூடியதாக மாற்றுவது எங்கள் உறுதிப்பாடாகும். அடிப்படை சுகாதாரம், நல்வாழ்வைப் பொறுத்தவரை எந்தக் குழந்தையும் பின்தங்கியிருக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக குடும்பங்கள், நிறுவனங்கள், சமூகங்களின் கூட்டு நடவடிக்கைக்கு இது ஒரு தொடக்கப் புள்ளியாக அமையும்” என்றார்.
‘கேர் பேர்ஸ்’ என்பது சென்னை முழுவதும் உள்ள அரசு பால்வாடிகள், மழலையர் பள்ளிகளுடன் இணைந்து சிம்ஸ் மருத்துவமனையில் உள்ள குழந்தை மருத்துவத் துறையால் முன்னெடுக்கப்படும் ஒரு முயற்சியாகும். வழக்கமான பரிசோதனை, ஆரம்பகால நோயறிதல், ஊட்டச்சத்து வழிகாட்டுதல், பெற்றோருக்கு விழிப்புணர்வு கல்வி ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான குழந்தைப் பராமரிப்பை வழங்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சிம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த குழந்தை மருத்துவர்கள், சுகாதார நிபுணர்களைக் கொண்ட ஒரு பிரத்யேகக் குழு, திட்டத்தில் பங்கேற்கும் பள்ளிகளுக்கு மாதாந்திர ரீதியில் சென்றுவரும். 0–5 வயது குழந்தைகள் உயரம், எடை, வளர்ச்சி மைல்கற்கள், அறிவாற்றல், உணர்வுசார் நல்வாழ்வு உள்ளிட்ட வளர்ச்சி அளவுருக்கள் ஆரோக்கியமாக இருக்கின்றனவா என்று பரிசோதிக்கப்படுவார்கள். கூடுதல் மதிப்பீடுகளில் மார்பு குறைபாடுகள், பல் சுகாதாரம், கண் பார்வை, காது கேட்கும் திறன் போன்ற உறுப்புகளின் ஆரோக்கியம், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கான பரிசோதனைகள் அடங்கும்.
சுகாதார மதிப்பீடுகளுக்கு அப்பால், பெற்றோருடன் உரையாடும் விழிப்புணர்வு அமர்வுகளையும் கேர் பேர்ஸ் வழங்கும், ஆரம்பகால சுகாதாரத் தலையீட்டின் முக்கியத்துவம், குழந்தையை ஆரோக்கியமாக எவ்வாறு வளர்ப்பது என்பதில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது. இந்த அமர்வுகள் பெற்றோருக்கு தங்கள் குழந்தையின் சுகாதார பயணம் குறித்து தெளிவான முடிவுகளை எடுக்க அறிவு, தன்னம்பிக்கையை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
ஒரு நேரத்தில் ஒரு குழந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது என்கிற நோக்கத்துடன், 2025-ஆம் ஆண்டின் இறுதிக்குள் 10,000 குழந்தைகளை இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டு வருவதை இலக்காகக் கொண்டு, நோய்த் தடுப்பு சுகாதாரம், சமூக நல்வாழ்வு மீதான தன் உறுதிப்பாட்டை சிம்ஸ் மருத்துவமனை மீண்டும் வலுப்படுத்துகிறது.