பிரபல திரைப்பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், பின்னணிப் பாடகர் மனோ, கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் உள்ளிட்டோருக்கு Jeppiaar Icon Awards வழங்கப்பட்டன

0
200

பிரபல திரைப்பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், பின்னணிப் பாடகர் மனோ, கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் உள்ளிட்டோருக்கு Jeppiaar Icon Awards வழங்கப்பட்டன

சென்னை ஜேப்பியார் பல்கலைக்கழகத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான  8th Edition of “Jeppiaar Icon Awards” வழங்கும் விழா பிரமாண்டமாக நடைபெற்றது.  
 
இந்த விழாவில் திரைப்பட  இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு, “MAVERICK OF MODERN TAMIL CINEMA”  விருது வழங்கப்பட்டது. 
 
தனது மயக்கும் குரலால் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய  பின்னணிப் பாடகர் மனோவிற்கு THE MAESTRO OF MELODIES விருது வழங்கப்பட்டது.
 
 ஐபிஎல் தொடரில் CSK அணிக்காக விளையாடி வரும் விஜய் சங்கருக்கு MULTI TALENTED CRICKET MAESTRO விருது வழங்கப்பட்டது. 
 
மேலும் கட்டிடக்கலை வல்லுநர் ஜெயஶ்ரீ ரவி, யூட்யூபர் மதன் கௌரி, கல்வியாளர் முனைவர். அசோக் ஜி. வர்கீஸ், சமையல் கலை வல்லுநர் ஶ்ரீனிவாச ராஜா, நல்வாழ்வு வல்லுநர் விஜய் கருணாகரன் ஆகியோருக்கு ஜேப்பியார் பல்கலைக்கழக வேந்தர் முனைவர் ரெஜினா ஜே.முரளி  மற்றும் திரு.முரளி சுப்ரமணியன்,  செல்வி மார்க்கரெட் ரெஜினா, செல்வி மேக்லின் ரெஜினா ஆகியோர் விருதுகள் வழங்கினார்கள்.
 
விருதை பெற்றுக்கொண்ட அனைவரும், தங்கள் பரவசத்தையும், அனுபவங்களையும் வெளிப்படுத்தி பார்வையாளர்களை கவர்ந்தனர். 
 
 விழாவில் ஜேப்பியார் பல்கலைக்கழக இணை வேந்தர், இணை துணை வேந்தர், பதிவாளர், கல்லூரி முதல்வர் மற்றும் துணை முதல்வர் துறைத் தலைவர்கள், பேராசிரியர் பெருமக்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.