தரைப்படை சினிமா விமர்சனம் : தரைப்படை தகர்க்கும் ஆக்ஷன் களத்தில் கோடிகளை சுருட்ட நினைக்கும் முப்படை | ரேட்டிங்: 3/5

0
342

தரைப்படை சினிமா விமர்சனம் : தரைப்படை தகர்க்கும் ஆக்ஷன் களத்தில் கோடிகளை சுருட்ட நினைக்கும் முப்படை | ரேட்டிங்: 3/5

ஸ்டோனெக்ஸ் சார்பில் பி பி வேல்முருகன் தயாரித்திருக்கும் தரைப்படை படத்தின் திரைக்கதை, வசனம் எழுதி  இயக்கியிருக்கிறார் ராம்பிரபா.

இதில் பிரஜின், விஜய் விஷ்வா, ஜீவா தங்கவேல், சாய் தன்யா, ஆர்த்தி ஷாலினி, மோகனா ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை:​ மனோஜ்குமார் பாபு, ஒளிப்பதிவாளர்: சுரேஷ்குமார் சுந்தரம், பாடலாசிரியர்: மனோஜ்குமார் பாபு, எடிட்டர்: ராம்நாத்,ஸ்டில்ஸ்: பவேஷ் பாலன்,கலை: ரவீந்திரன், ஒப்பனை: பெர்சி அலெக்ஸ், மக்கள் தொடர்பு : நிதிஷ் ஸ்ரீராம்

மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்ற பெயரில் அதிக வட்டி தருவதாக ஆசைக்காட்டி நடுத்தர மக்களிடம் ஏமாற்றி 1000 கோடி பணத்தை தங்கக்கட்டிகளாகவும், வைரங்களாகவும் மாற்றி சுருட்டிக் கொண்டு ஒரு மோசடி கும்பல் தலைமறைவாகிறது. அந்த கும்பலைச் சேர்ந்த தலைவனிடமிருந்து அந்த ஆயிரம் கோடி இருக்கும் சூட்கேஸை பிரஜன் கைப்பற்றி அந்த தலைவனை சுட்டு விட்டு தப்பிச் சென்று விடுகிறார். இந்த விஷயத்தை கண்டறியும் ஒரு ஏமாற்று கும்பல் பணத்திற்காக எதையும் செய்ய துணியும் கேங்ஸ்டர் விஜய் விஷ்வாவை அமர்த்தி பிரஜனிடமிருந்து அந்த சூட்கேஜை கொள்ளையடிக்க வைக்கின்றனர். இந்நிலையில் சுடப்பட்ட மோசடி கும்பல் தலைவனை மும்பையில் தொழிலதிபராக இருக்கும் ஜீவா கடத்தி வந்து முதலுதவி செய்து வீட்டுச் சிறையில் அடைத்து வைக்கிறார். இந்த மோசடி கும்பல் கம்பெனியில் வேலை செய்த தந்தை மற்றும் தன் குடும்பத்தின் நிலையை கண்டுபிடிக்க ஜீவா எடுக்கும் முயற்சி வெற்றி பெற்றதா? அவர்கள் என்ன ஆனார்கள்? அதன் பின் ஜீவா எடுக்கும் முடிவு என்ன? விஜய் விஷ்வாவிடமிருந்து பிரஜன் சூட்கேஸை கைப்பற்றினாரா? பிரஜன், விஜய் விஷ்வா, ஜீவா இவர்களிடம் கை மாறும் சூட்கேஸ் யார் கையில் கிடைத்தது? அதன் பின் என்ன நடந்தது? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

பிரஜின், விஜய் விஷ்வா, ஜீவா மூவருக்கும் சரிசமமாக பங்களிப்பை கொடுத்துள்ளார் இயக்குனர். ஒருவரைக்கொருவர் ஏமாற்ற நினைத்து எடுக்கும் செயலும், ஆக்ஷன் காட்சிகள் துப்பாக்கி சத்தத்துடன் படம் முழுவதும் அனைவரையுமே மாற்றி மாற்றி சுட்டு கொன்று குவிக்கின்றனர். பிரஜின் ஆக்ரோஷம் நிறைந்த இளைஞராகவும், காதலியை கைப்பிடிக்க எடுக்கும் முயற்சியும், விஜய் விஷ்வா காதலிக்கு செலவு சேய்ய பணத்தை கொள்ளையடிக்கும் கேங்ஸ்டராக ஒரு வேனிலேயே படம் முழுவதும் வலம் வருவதும், ஜீவா ஒரு பிரம்மாண்ட வீட்டில் பத்து அடியாட்களுடன் அதிகாரம் செய்து கொண்டு, ரஜினி ஸ்டைலில் மேனரிசத்தை கடைபிடிப்பது பணத்தை கொள்ளையடிக்க வியூகம் வகுப்பது என்று அனைவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.

இவர்களின் காதலிகளாக வரும் சாய் தன்யா, ஆர்த்தி ஷாலினி, மோகனா முக்கியத்துவம் இல்லை என்றாலும் வந்து போகிறார்கள். அதிலும் விஜய் விஷ்வாவின் காதலி இறக்கும் தருவாயிலும் சிகரெட்டை பற்ற வைத்து விட்டுத்தான் இறக்கிறார்.

மிரட்டல் செல்வாவின் ஆக்ஷன் காட்சிகள் தூக்கலாகவும், துப்பாக்கி வெடிச்சத்தம் அதிகமாகவும் அதிரடியாகவும் வைத்து மிரட்டியிருக்கிறார்.

கலை இயக்குநர் ரவீந்திரன், இசையமைப்பாளர் மனோஜ்குமார் பாபு, ஒளிப்பதிவாளர் சுரேஷ்குமார் சுந்தரம், எடிட்டர் ராம்நாத் ஆகிய தொழில்நுட்ப கலைஞர்கள் தங்கள் உழைப்பை கொடுத்து சிறப்பாக செய்துள்ளனர்.

ஏமாற்றி சம்பாதித்த பணத்தை கொள்ளையடிக்க மூன்று பேர் திட்டம் போட, அந்தப்பணம் யார் கையில் கிடைத்தது? எப்படி கிடைத்தது? என்பதை காதல், ஆக்ஷன், கமர்ஷியல், செண்டிமென்ட் கலந்து துப்பாக்கி கலாச்சாரத்துடன் பரபரப்பாக திருப்பங்களுடன் திரைக்கதை, வசனத்தில் பங்களிப்பு கொடுத்து இயக்கிய ராம்பிரபாவின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில் ஸ்டோனெக்ஸ் சார்பில் பி பி வேல்முருகன் தயாரித்திருக்கும் தரைப்படை தகர்க்கும் ஆக்ஷன் களத்தில் கோடிகளை சுருட்ட நினைக்கும் முப்படை.