லெக் பீஸ் சினிமா விமர்சனம் : ‘லெக் பீஸ்’ நல்ல மெசேஜ் சொல்லும் ஜாலியான டைம்பாஸ் படம் | ரேட்டிங்: 3/5
நடிகர்கள் :
யோகி பாபு, வி.டி.வி கணேஷ், ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், ரமேஷ் திலக், மைம் கோபி, ஜான் விஜய், சரவண சுப்பையா, ஜி.மாரிமுத்து, சாம்ஸ், மதுசூதன் ராவ், ஸ்ரீநாத், மணிகண்டன்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :
இயக்கம் : ஸ்ரீநாத்
தயாரிப்பு நிறுவனம் : ஹீரோ சினிமாஸ்
தயாரிப்பு : சி.மணிகண்டன்
இசை : பிஜோர்ன் சுர்ராவ்
பாடல் வரிகள் – விக்னேஷ் ராமகிருஷ்ணன், ஷபீர் மற்றும் பிஜோர்ன்
குரல்கள் – அனிருத் ரவிச்சந்தர், பிஜோர்ன்
கதை திரைக்கதை வசனம் : எஸ்.ஏ. பத்மநாபன்
ஒளிப்பதிவு : மசானி
எடிட்டர் : இளையராஜா.எஸ்
ஸ்டண்ட்: ஷார்ப் சிவா
நடனம்: ராதிகா
வாடிக்கையாளர்: தாமோதரன்
கலை: முஜீப்
மக்கள் தொடர்பு : சதீஷ்
லெக் பீஸ் படத்தின் கதை தெருவில் கிடைக்கும் 2000 ரூபாய் நோட்டு நான்கு பேரின் வாழ்க்கையை சுற்றி எவ்வாறு பின்னப்பட்டுள்ளது என்பதுதான் கதை. இந்தப் படம் 1959-ல் ஒரு விசித்திரமான காட்சியுடன் தொடங்குகிறது, அதில் மூன்று குழந்தைகள் ஒரு மரத்தில் ஏறி அவர்களை திகைக்க வைக்கும் ஒன்றைப் பார்க்கிறார்கள். இந்தக் காட்சி படத்தின் க்ளைமேக்ஸ் உடன் தொடர்புடையது. ரமேஷ் திலக் பிரபல நடிகர்களின் குரலில் பேசும் திறமை கொண்டவர். மணிகண்டன் சவுரி முடியை விலைக்கு வாங்குபவர். ஸ்ரீநாத் பேய்களை விரட்டும் வேலை பார்ப்பவர், மற்றும் கருணாகரன் கிளி ஜோசியர். ரமேஷ் திலக், ஸ்ரீநாத், கருணாகரன், மற்றும் மணிகண்டன் நால்வரும் யதேச்சையாக சாலையில் கிடைக்கும் 2000 ரூபாய் நோட்டை காண்கிறார்கள். இந்த 2000 ரூபாய் நோட்டை எப்படி பங்கு போடுவது என்று இவர்களுக்குள் குழப்பம் ஏற்பட அதை வைத்து அருகில் உள்ள மதுகடைக்கு சென்று குடிக்க முடிவு செய்கின்றனர். பாரில் மது அருந்தும்போது, அவர்கள் தங்கள் கதைகளை ஒவ்வொன்றாகச் சொல்லத் தொடங்குகிறார்கள். தீவிரமாக ஓவ்வொருவரும் தங்கள் கதைகளை விவரிக்கும் போது இந்த நால்வரும் தங்களை அறியாமல் நண்பர்களாக ஆகிறார்கள். மது அருந்தி விட்டு 2000 ரூபாய் நோட்டை அவர்கள் கொடுக்கும் போது அந்த 2000 ரூபாய் நோட்டு கள்ள நோட்டு என தெரிய வருவதால் இவர்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. மதுபானக் கடையின் உரிமையாளரும் தாதாவுமான மொட்டை ராஜேந்திரனின் கோபத்திற்கு ஆளாகிறார்கள். மேலும் கிளி ஜோசியர் கருணாகரன் மொட்டை ராஜேந்திரனை பார்த்து இன்னும் 30 நிமிடத்தில் நீ சாகப் போகிறாய் என்று கூறகிறான். இதைக் கேட்ட மொட்டை ராஜேந்திரன் சிரித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் இன்ஸ்பெக்டர் மைம் கோபி, மாரிமுத்து மற்றும் இரண்டு போலீஸ் நண்பர்கள் மொட்டை ராஜேந்திரனை சந்திக்க வருகின்றனர். அப்போது கோபம் வந்து நான்கு பேரையும் கொலை செய்ய இருந்த மொட்டை ராஜேந்திரன் அவர்களின் கைகளை கட்டி ஒரு அறையில் அடைத்து வைக்கின்றார். தன்னை கொல்ல இந்த போலீஸ் நண்பர்கள் வந்திருப்பதை அறிந்து அவர்களுடன் துப்பாக்கி முனையில் தன்னை கொள்ள அனுப்பியது யார் என்று கேட்டுக் கொண்டிருக்கும் போது, கிளி ஜோசியர் கருணாகரன் கூறியது போல் ஹெல்மெட் அணிந்த இரண்டு இளைஞர்கள் தாதா மொட்டை ராஜேந்திரனையும் அவருடைய கூட்டாளிகளையும் சுட்டுக் கொன்று விட்டு தப்பி விடுகிறார்கள். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி சம்பவம் நடந்த இடத்தில் இருந்து இந்த 4 நண்பர்களும் தப்பி செல்கிறார்கள். நண்பர்கள் நான்கு பேரும் இந்த கொலை வழக்கில் சிக்கிக் கொள்கிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
குயில் என்ற கதாபாத்திரத்தில் மணிகண்டன், கிளி ஜோதிடராக கருணாகரன், பேய் விரட்டுபவராக ஸ்ரீநாத், பலகுரல் கலைஞராக ரமேஷ் திலக் ஆகியோர் படம் மழுக்க பார்வையாளர்களை சிரிப்பு அலையில் மகிழ வைத்துள்ளனர். இவர்களுடன் இணைந்து பார் மேலாளராக வரும் யோகி பாபு மற்றும் ரவி மரியா தோன்றும் காட்சிகளில் தங்களது அனுபவ நடிப்பால் கிளுகிளுப்பை மூட்டுகிறார்கள்.
விடிவி கணேஷ், நான் கடவுள் ராஜேந்திரன், மைம் கோபி, ஜான் விஜய், சரவண சுப்பையா, ஜி.மாரிமுத்து, மதுசூதன ராவ் என அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து திரைக்கதை கலகலப்பாக நகர உதவுகின்றனர்.
ஒளிப்பதிவாளர் மசானியின் ஒளிப்பதிவு தரமான ஒளிப்பதிவு, எடிட்டர் இளையராஜா.எஸ் மற்றும் இசையமைப்பாளர் பிஜோர்ன் சுர்ராவின் இசை மற்றும் பின்னணி இசையும் தொழில்நுட்ப ரீதியாக இவர்களது பங்களிப்பு நகைச்சுவை நிறைந்த க்ரைம் திரில்லருக்கு வலு சேர்க்கிறது.
பெண்களுக்கு எதிராக நடக்கும் நடக்கும் பாலியல் கொடுமைகளுக்கு ஒரு தீர்வுகான குற்றத் திரில்லராக திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதிய எஸ்.ஏ. பத்மநாபன் கதையை, நகைச்சுவை காட்சிகளுடன், தேர்ந்த நடிகர்களை கொண்டு, நல்லதொரு மெசேஜ் உடன் சிறப்பாக காட்சிப்படுத்தி உள்ளார் இயக்குனர் ஸ்ரீநாத்.
மொத்தத்தில் ஹீரோ சினிமாஸ் சார்பில் சி.மணிகண்டன் தயாரித்துள்ள ‘லெக் பீஸ்’ நல்ல மெசேஜ் சொல்லும் ஜாலியான டைம்பாஸ் படம்.