நிறம் மாறும் உலகில் சினிமா விமர்சனம் : நிறம் மாறும் உலகில் சிக்கித் தவிக்கும் தாயுள்ளம் | ரேட்டிங்: 3/5

0
321

நிறம் மாறும் உலகில் சினிமா விமர்சனம் : நிறம் மாறும் உலகில் சிக்கித் தவிக்கும் தாயுள்ளம் | ரேட்டிங்: 3/5

எல் கேத்தரின் ஷோபா மற்றும் லெனின் தயாரிப்பில் சிக்னேச்சர் புரொடக்சன்ஸ் மற்றும் ஜி.எஸ். சினிமா இன்டர்நேஷனல் இணைந்து வழங்க பெர்ஃபெக்ட் பிக்சர் ஸ்டுடியோஸ் வெளியீடும் நிறம் மாறும் உலகில்.

இதில் பாரதிராஜா – ராயப்பன், துளசி – அன்னக்கிளி, நட்டி – அப்துல் மாலிக், ரியோ ராஜ் – அதியன், சாண்டி – அன்பு, யோகி பாபு – நா முத்துக்குமார், வடிவுக்கரசி – குழந்தை, ஆதிரை – பரிமளம், கனிகா – பாத்திமா, லவ்லின் சந்திரசேகர் – அபி , ரிஷிகாந்த் – கண்ணன் ,ஏகன் – ராயப்பன், விக்னேஷ்காந்த் – பாலா , காவியா அறிவுமணி – மலர் ,அய்ரா கிருஷ்ணன் – மஹி , முல்லை அரசி – குழந்தை ,மைம் கோபி – மகிமை ,விஜி சந்திரசேகர் – விஜி , ஆடுகளம் நரேன் – தாஸ் , சுரேஷ் மேனன் – லால் பாய் , சுரேஷ் சக்ரவர்த்தி – கண்ணபிரான், துளசி -அம்மா, நமோ நாராயணா – மஹி அப்பா

தொழில்நுட்ப கலைஞர்கள் :இயக்குனர் – பிரிட்டோ ஜே.பி , ஒளிப்பதிவு – மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா, இசை – தேவ் பிரகாஷ் ரீகன், படத்தொகுப்பு – தமிழ் அரசன், மக்கள் தொடர்பு- யுவராஜ்

அபி (லவ்லின் சந்திரசேகர்) தாய் விஜியுடன் (விஜி சந்திரசேகர்) ஏற்பட்ட மனஸ்தாபத்தில் ஒரு வருடம் பேசாமல் இருக்கிறார். இந்நிலையில் தன் பிறந்தநாளன்று வீட்டில் நண்பர்களுடன் கொண்டியபோது கோபப்பட்டு கன்னத்தில் அறைந்த தாய் விஜியை வெறுத்து வீட்டை விட்டு வெளியேறும் அபி வெளியூரில் உள்ள தன் தோழியை சந்திக்க ரயிலில்  பயணிக்கும் போது டிக்கெட் பரிசோதகர் முத்துக்குமாரை (யோகி பாபு) சந்திக்கிறார். அபியின் மனநிலையை புரிந்து கொள்ளும் முத்துக்குமா​ர் தாய் பாசத்தின் மகிமையை உணர்த்தும் வகையில் 4 கதைகள் சொல்கிறார். இருவரின் உரையாடல்களாக நான்கு கதைகள் விவரிக்கப்படுகிறது.

மும்பையில் நிழல் உலக தாதாக்களாக இருக்கும் நட்டி மற்றும் சுரேஷ் மேனன் தொழில் போட்டியால் விரோதியாக இருக்கின்றனர். ஒரு பாலியல் தொழிலாளியான தனது தாய் பாத்திமாவின் (கனிகா) இறக்க, சிறு வயதிலிருந்தே அம்மா பாசத்திற்காக ஏங்கி தவிக்கும் தாதா அப்துல் மாலிக் (நட்டி). சாதி வேறுபாடு காரணமாக வீட்டை விட்டு ஒடி வரும் காதல் ஜோடி எதிர்பாராத விதமாக நட்டியிடம் காதலியும், சுரேஷ் மேனனிடம் காதலனும் சிக்கிக் கொள்கின்றனர். நட்டி மாட்டிக் கொள்ளும் காதலியை தன் தாயாக பாவித்து பேசிக் கொண்டிருக்கிறார்.இந்நிலையில் காதலனை வைத்து நட்டியை போட்டு தள்ள திட்டம் தீட்டுகிறார் சுரேஷ்மேனன். நட்டியின் இருப்பிடத்திற்கு வரும் காதலன் அங்கே காதலி இருப்பதை பார்க்கிறான். இரு தாதாக்களுக்கும் சண்டை நடைபெறுகிறது. இறுதியில் யார் இறந்தனர்? காதலர்கள் என்ன ஆனார்கள்? என்பதே முதல் கதை.

இரண்டு ஆண் மகன்களை பெற்ற துவரங்குறிச்சி கிராமத்தில் வசிக்கும் வயதான தம்பதி ராயப்பன் (பாரதிராஜா), அவரது மனைவி குழந்தை (வடிவுக்கரசி). தங்களது குழந்தைகளை கஷ்டப்பட்டு வளர்த்து படிக்க வைத்து வேலைக்கும் அனுப்பி வைக்கின்றனர். முதல் மகனுக்கு திருமணம் செய்து வைத்து விட, இரண்டாவது மகன் வெளியூரில் இருக்க, மாதாமாதம் இருவரும் மாற்றி மாற்றி பணம் அனுப்பி வைப்பது, பெற்றோர்களின் செலவுக்கு பத்தவில்லை. வயதான காலத்தில் பெற்றோரை கவனிக்காமல் இருப்பதும், பசியால் அவர்கள் துன்பப்படுவதும், அவர்களை அலைக்கழித்து, திட்டித் தீர்க்கின்றனர். அதன் பின் பெற்றோர்களுக்கு என்ன ஆனது? மகன்கள் பெற்றோர்களின் பாசத்தை உணர்ந்தார்களா? என்பதே இரண்டாம் கதை.

நாகப்பட்டினம், வேளாங்கண்ணி பகுதியில் கணவனை இழந்து கைக்குழந்தையுடன் பல போராட்டங்களையும் பிரச்சனைகளையும், துன்பங்களையும் சந்திக்கும் ஒரு விதவை தாய் பரிமளம் (ஆதிரை) மகன் அதியன் (ரியோ ராஜ்) கஷ்டப்பட்டு வளர்க்கிறார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அம்மாவை காப்பாற்ற நிதி திரட்ட வேறு வழி தெரியாமல் பணத்திற்காக கொலை செய்யும் அளவுக்கு செல்லும் ஒரு பாசமிகு தாய் மகன் உறவை பற்றியது மூன்றாம் கதை.

சென்னையில் உள்ள ஒரு வீட்டுவசதி வாரியத்தில் ஆட்டோ ஓட்டுனர் அன்பு (சாண்டி). அன்பு மஹியை (அய்ரா கிருஷ்ணன்) காதலிக்கிறார். நல்ல படித்த பெண் என்றாலும், அன்பு அனாதை என்பதையும், தன் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பவன் என்ற காரணத்தால் மஹி திருமணத்திற்கு சம்மதம் தெரிவத்து வீட்டிற்கு வந்து பெண் கேட்க சொல்கிறார். இந்நிலையில்   தாய் (துளசி)யுடன் வசிக்கும் மகன் வெளிநாட்டில் வேலை கிடைத்ததால் தாயை சென்னையில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு செல்கிறான். மகன், மருமகளால் கைவிடப்பட்ட துளசி  அந்த முதியோர் இல்லத்திலிருந்து வெளியேறி அன்புவின் ஆட்டோவில் பயணிக்கிறார்.  நாள் முழுவதும் பயணிக்கும் இருவருக்கும் எதிர்பாராத தாய் – மகன் பிணைப்பு உருவாகிறது. பின்னர் துளசிக்கு ஆதரவு யாரும் இல்லாததால், தன் தாயாக பாவித்து தன்னுடன் இருக்கச் சொல்கிறார்.அதன் பின் இருவரும் காதலி மஹி வீட்டிற்கு பெண் கேட்க செல்கின்றனர். புதிய உறவான அம்மாவை அறிமுகம் செய்யும் அன்பு அதற்கு எதிர்ப்பு தெரிவித்த காதலி மஹியிடம் சண்டையிட்டு செல்கிறார். அம்மா என்ற உறவுக்காக தன் காதலை தூக்கி எறிய தயாராக இருக்கும் ஆதரவற்ற இளைஞனின் நான்காவது கதை.

நான்கு விதமான கதைகளும் நான்கு விதமான வாழ்க்கையையும், உறவுகளின் அவசியத்தை உணர்வுப்பூர்வமாக விவரித்து தாய் என்ற அற்புதமான உறவின் மகிமையை அபிக்கு உணர்த்தினாரா முத்துக்குமார்? அபி தன் தாயின் அன்பை புரிந்து கொண்டு வீட்டிற்கு திரும்பி சென்றாரா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

இதில் நட்டி – அப்துல் மாலிக், கனிகா – பாத்திமா, ஆடுகளம் நரேன் – தாஸ், சுரேஷ் மேனன் – லால் பாய், காவியா அறிவுமணி – மலர், ரிஷிகாந்த் – கண்ணன், பாரதிராஜா – ராயப்பன், வடிவுக்கரசி – குழந்தை, ஏகன் – (இளம் வயது ராயப்பன்), முல்லை அரசி – (இளம் வயது குழந்தை), ஆதிரை – பரிமளம், ரியோ ராஜ் – அதியன், மைம் கோபி – மகிமை, சுரேஷ் சக்ரவர்த்தி – கண்ணபிரான், விக்னேஷ்காந்த் – பாலா, துளசி, சாண்டி – அன்பு, அய்ரா கிருஷ்ணன் – மஹி, நமோ நாராயணா ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நான்கு கதைகளின் உணர்ச்சிகரமான சம்பவங்களின் பின்னணியில் வாழ்ந்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா, படத்தொகுப்பாளர் தமிழ் அரசன், இசையமைப்பாளர் தேவ் பிரகாஷ் ரீகன் இசை மற்றும் பின்னணி இசை ஐந்து விதமான கதைகளுக்கும் தங்களின் உழைப்பை கொடுத்து மெருகேற்றியுள்ளனர்.

நான்கு கதைகளில் தாய் பாசத்தைப் பற்றி விவரிக்கும் கதைக்களமாக கொடுத்துள்ளார் இயக்குனர் பிரிட்டோ ஜே.பி. உலகத்திலேயே அம்மா தான் பெரிய பரிசு என்ற ஒரே வரியில் சொல்லிருக்கும் நான்கு கதைகளும் வௌ;வேறு சூழ்நிலைகள், வௌ;வேறு சிக்கல்கள் நிறைந்தவையாக கொடுத்து, தாயின் அன்பை புரிய வைக்க எடுக்கும் முயற்சியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் மேலோட்டமாக சொன்னது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகிறது.

மொத்தத்தில் எல் கேத்தரின் ஷோபா மற்றும் லெனின் தயாரிப்பில் சிக்னேச்சர் புரொடக்சன்ஸ் மற்றும் ஜி.எஸ். சினிமா இன்டர்நேஷனல் இணைந்து வழங்க பெர்ஃபெக்ட் பிக்சர் ஸ்டுடியோஸ் வெளியீடும் நிறம் மாறும் உலகில் சிக்கித் தவிக்கும் தாயுள்ளம்.