மர்மர் சினிமா விமர்சனம் : மர்மர் த்ரில்லிங் தராத புரியாத புதிர் | ரேட்டிங்: 2/5

0
278

மர்மர் சினிமா விமர்சனம் : மர்மர் த்ரில்லிங் தராத புரியாத புதிர் | ரேட்டிங்: 2/5

எஸ்.பி.கே பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்டாண்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் பிரபாகரன் இணைந்து தயாரித்திருக்கும் மர்மர் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஹேம்நாத் நாராயணன்.

இதில் ரிச்சி  கபூர் – ரிஷி ,  தேவ்ராஜ் ஆறுமுகம் – மெல்வின் , சுகன்யா ஷண்முகம் – அங்கிதா, யுவிகா ராஜேந்திரன் – காந்தா, அரியா செல்வராஜ் – ஜெனிபர் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவாளர்:  ஜேசன் வில்லியம்ஸ் , படத்தொகுப்பு:  ரோஹித், ஒலி வடிவமைப்பு: கேவ்வின் பிரெடெரிக் , தயாரிப்பு வடிவமைப்பு:  ஹாசினி பவித்ரா , உடை : பிரகாஷ் ராமசந்திரன், ஸ்பெஷல் மேக்கப்: செல்டன் ஜார்ஜ்  சண்​டை : ஷார்ப் ஷங்கர் , மக்கள் தொடர்பு:  ஸ்ரீவெங்கடேஷ்

மர்மர் – தமிழ் சினிமாவின் முதல் ஃபவுண்ட் புட்டேஜ் ஹாரர் படம் என்ற எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ளது. டிசம்பர் மாதம் 28ந்தேதி 2024ஆம் ஆண்டு போ@ரில் உள்ள மர்மங்கள் நிறைந்த காத்தூர் கிராமத்தில் சூன்யக்காரி மங்கை இருப்பதாகவும், சப்த கன்னிகள் நடமாட்டம் மலைப்பகுதியில் உள்ளதாக கேள்விப்படும் நான்கு யூடியூப் படைப்பாளர்கள் இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் அடங்கிய குழு மெல்வின், ரிஷி, அங்கிதா, மற்றும் ஜெனிபர் நடக்கும் வினோதமான நிகழ்வுகளை ஆவணப்படுத்தவும், உண்மையை கண்டுபிடிக்கவும் அங்கே செல்கின்றனர். மங்கை என்ற சூன்யக்காரி மனிதர்களை வேட்டையாடுவதும், முழு பௌர்ணமியன்று ஏழு சப்தகன்னிகள் ஆற்றில் குளிக்க வருவார்கள், அவர்களை பற்றி தெரிந்து கொள்ள செல்லும் மனிதர்கள் யாரும் உயிருடன் திரும்பியதில்லை என்று அங்குள்ள காத்தூர் கிராம மக்கள் மலைப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கின்றனர். ஆனால் இதைப்பற்றி கவலைப்படாமல் நால்வரும் அங்கு செல்லும் ஒவ்வொரு நொடியையும் ஒரு வீடியோ கேமராவில் பதிவு செய்து கொண்டே மலைப்பகுதிக்கு செல்கின்றனர். ஆரம்பத்தில், அவர்கள் இப்பகுதிக்கு செல்ல ஒரு உள்@ர் வழிகாட்டியை நம்பி வரும் போது அவர் எதிர்பாராத விதமாக ஒரு பாம்பு கடியால் மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது, அவரது மகள் காந்தா அவர்களுக்கு உதவ முன் வருகிறார். ஒரு சாதாரண மற்றும் சாகச வீடியோ எடுக்கும் திட்டமாகத் தொடங்கும் இந்த பயணம் ஒரு மோசமான திருப்பத்தை சந்திக்க நேரிடுகிறது. ஐந்து பேரும் தாங்கள் செல்ல வேண்டிய இலக்கை நோக்கி பயணிக்கும் போது இரவு ஆகிவிட அங்கேயே டெண்ட் போட்டு தங்குகின்றனர்.அப்பொழுது அவர்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளை அனுபவிக்கத் தொடங்குகிறார்கள் -வித்தியாசமான ஒலிகள், பேய் அடிச்சுவடுகள் சத்தம் மற்றும் இருளில் விவரிக்கப்படாத சத்தங்கள் கேட்கின்றனர். அவர்கள் ஐந்து பேரும் ஓஜா போர்டைப் பயன்படுத்தி ஆவிகளுடன் தொடர்பு கொள்ள முடிவு செய்யும் போது, விஷயங்கள் கட்டுப்பாட்டை மீறுகின்றன. பின்னர் ஆவிகள் இவர்களுடன் தொடர்பு கொண்டதா? ஐவரும் கிராம மக்கள் சொல்லியது உண்மை என்பதை அறிந்தார்களா? மங்கையையும், சப்தகன்னிகளையும் பார்த்தார்களா? இவர்கள் உயிருடன் திரும்பினார்களா? இல்லையா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

ரிச்சி  கபூர் – ரிஷி ,  தேவ்ராஜ் ஆறுமுகம் – மெல்வின் , சுகன்யா ஷண்முகம் – அங்கிதா, யுவிகா ராஜேந்திரன் – காந்தா, அரியா செல்வராஜ் – ஜெனிபர் ஆகிய ஐந்து பேரைச் சுற்றித்தான ;கதை நகர்கிறது. இவர்களின் பயணத்தில் காந்தா மற்றும் ரிஷியைத் தவிர மற்றவர்கள் செய்யும் காரியங்கள் கவர்ச்சி, கிளர்ச்சியுடன் இருக்கிறதே தவிர திகிலை ஏற்படுத்த தவறிவிட்டனர். படம் முழுவதும் குடியும், போதையும் தான் அதிகமாக காட்டப்படுகின்றன. இவர்களில் ரிஷி முதலில் தமிழை தட்டுத்தடுமாறி பேசும் போது சாதாரணமாக இருந்தாலும், பின்னர் இவரின் வெகுளித்தனமான பேச்சும், நேர்மையுடன் நடந்து கொள்ளும் விதமும், சில இடங்களில் கிண்டல் கலந்து பேசுவது படத்திற்கு சற்றே ஆறதலாக இருப்பதை உணர முடிகிறது, தன் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக செய்துள்ளார்.

ஜேசனின் ஒளிப்பதிவு பார்வையாளர்களை அடர்த்தியான வனப்பகுதிக்குள் கொண்டு சென்று வினோதமான பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதைப் போல உணர வைக்கிறது. பகல் நேரத்தில் அமைக்கப்பட்ட காட்சிகள் உலர்ந்த இலைகள் மற்றும் உயர்ந்த மரங்கள் வழியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன, அதே நேரத்தில் இரவுநேர காட்சிகள் டார்ச்ச்கள் மற்றும் ஃபயர்லைட் ஆகியவற்றை நம்பி எடுத்திருக்கும் காட்சிகள் உண்மையான அனுபவத்தை உருவாக்குகிறது. கேமிராவை கையில் பிடித்து கொண்டு செல்லும் போது ஏற்படும் தடுமாற்றத்தை உணர முடிவதால், சிலருக்கு பார்க்கும் போது அசௌகரியமாக இருக்கும்.

ஒலி வடிவமைப்பாளர் கேவ்வின் ஃபிரடெரிக் இந்த பயமுறுத்தும் விதியை மிகச்சரியாக கடைப்பிடித்துள்ளார், இயற்கையான ஒலிக்காட்சிகளைப் பயன்படுத்தி பயம் காரணியை மிருதுவான மற்றும் பேய் ஒலி வடிவமைப்பு, குறிப்பாக கிளைகளில் அடிச்சுவடுகளின் ஏற்படும் சத்தம் பதற்றத்தை உயர்த்துகிறது, திகில் நம்பமுடியாத உண்மையானதாக உணர்கிறது. படத்தின் விளக்குகள் மற்றும் வண்ண தரப்படுத்தல் வினோதமான வளிமண்டலத்தை மேலும் மேம்படுத்துகிறது, இது இருண்ட இரவுக்கு சரியான அனுபவமாக அமைகிறது. ஆனால் இந்த பயமுறுத்தல்கள் ஒரு சில காட்சிகள் மட்டுமே வந்து போவதற்குள் பொறுமையாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுத்துகிறது.

Found Footage Horror என்பது ஒரு சினிமா நுட்பமாகும், இதில் அனைத்து அல்லது கணிசமான பகுதியும் கதையில் உள்ள கதாபாத்திரங்களால் பதிவுசெய்யப்பட்ட வீடியோ பதிவுகள் பின்னர் பார்வையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. திரையில் உள்ள நிகழ்வுகள் பொதுவாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கதாபாத்திரங்களின் கேமரா மூலம் நடக்கும் சம்பவங்களை நேர்முகமாக காட்டியும், அதனை விவரிக்கும் கேமரா வர்ணனையுடன் கூடுதல் யதார்த்தமாக இருப்பதை உறுதி செய்கிறது. முதலில் அத்தனையும் வீடியோ பதிவு மூலம் எடுத்து பின்னர் அதை தொகுத்து திரைப்படமாக கொடுப்பது ஆகும். Found Footage Horror படங்கள் ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும் பரவலாக வந்திருந்தாலும், மர்மர் தமிழ் சினிமாவிற்கு முதல் அனுபவ முயற்சி. திகில் படங்கள் தமிழ் சினிமாவுக்கு புதியவை அல்ல என்றாலும், இந்த மர்மர் வித்தியாசமான அணுகுமுறையுடன் புதிய முயற்சியுடன் கொடுத்துள்ளார் இயக்குனர் ஹேம்நாத் நாராயணன். Found Footage Horror நடுங்கும் கேமிரா ஒளிப்பதிவு காரணமாக, சில பார்வையாளர்களுக்கு தலைச்சுற்றல் அல்லது குமட்டல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக முதலிலேயே சொல்லிவிடுகின்றனர். மர்மர் என்றால் முணுமுணுப்பு அதை மங்கையின் வாயிலாக பயமுறுத்த எடுக்கும் பில்டப் முயற்சி தேவையில்லாத காட்சிகள் பல மணி நேரம் தோய்வுடன் செல்வதால் திகில் நேரத்தில் பயமுறுத்த தவறி பொறுமையை சோதித்து விட்டதை உணர முடிகிறது.

மொத்தத்தில் எஸ்.பி.கே பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்டாண்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் பிரபாகரன் இணைந்து தயாரித்திருக்கும் மர்மர் த்ரில்லிங் தராத புரியாத புதிர்.