1000 முதல்வர் மருந்தகங்கள்.. வரும் 24-ம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் – அமைச்சர் பெரியகருப்பன்!
சென்னை கீழ்பாக்கத்தில் என்.வி.நடராசன் மாளிகை, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் ‘முதல்வர் மருந்தகம்’ திறப்பு விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் சத்யபிரதா சாகு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பெரியகருப்பன், “பல்வேறு பணிகள் மாவட்டம் தோறும் செய்யப்பட்டிருக்கிறது, இந்த நிலையில் ஒரு நல்ல முன்னேற்றத்தை காண முடிகிறது980 மருந்தகங்களுக்கு அனைத்து தகுதிகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு திறக்க தயாராக உள்ளது மீதமுள்ள மருந்தகங்களில் பணிகளும் விரைவில் முடியும், 2 கோடியே 20 லட்சம் குடும்பங்களோடு தொடர்புள்ள துறை இந்த துறை.” என்றார்.
மேலும் பேசிய அவர், “கடந்த ஆட்சி காலத்தில் இல்லாத அளவிற்கு வங்கி கடன்கள் பயிர் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது, வங்கி சேவையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு முன்னேறி உள்ளோம் என்று கூறிய அவர் கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் துறை செயல்பட்டு வருகிறது, முதல்வர் மருந்தகம் பொறுத்தவரை திறப்பதற்கான அனைத்து பணிகளும் தயாராக உள்ளது, முதல்வர் மருந்தகத்தை முதல்வர் 24-ஆம் தேதி திறக்க உள்ளார், முதலமைச்சரின் நேரடி பார்வையில் இந்த மருந்தகங்கள் செயல்பட உள்ளது” என்று கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது, “கூட்டுறவுத்துறை மூலம் புதிதாக ஆயிரம் முதலமைச்சர் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளதாகவும், கூட்டுறவு சங்கம் மூலம் 500 ம் , தொழில் முனைவோர் மூலம் 500 முதலமைச்சர் மருந்தகங்களும் திறக்கப்பட உள்ளதாக கூறிய அவர் ஆயிரம் முதலமைச்சர் மருந்தகங்கள் தமிழகம் முழுவதும் திறக்கப்பட உள்ளன, புதிதாக முதலமைச்சர் மருந்தகம் திறக்கும் தொழில் முனைவோர்க்கு 3 லட்சம் வரை அரசு மானியம் வழங்கும் என்றும் வரும் 24 ம் தேதி முதலமைச்சர் ஆயிரம் முதலமைச்சர் மருந்தகங்களை திறந்து வைக்க உள்ளார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் மருந்துகள் கொள்முதல் செய்யப்படும், தேவை ஏற்பட்டால் வெளிச்சந்தையிலும் மருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும் பிரதமர் மருந்தகம் உட்பட எந்த மருந்தகங்களிலும் இல்லாத விதமாக மலிவான விலையில் தரமான மருந்துகள் வழங்கப்படும் என்று கூறிய அவர் தேவையான பணியாளர்கள் இருக்கின்றனர் , தேவைப்பட்டால் புதிய பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மக்கள் தொகை, மருத்து பயன்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் முதலமைச்சர் மருந்தங்கள் அமைய உள்ளன, மதுரையில் 52 , கடலூர் -49 , கோவை -42 தஞ்சை 40 முதலமைச்சர் மருந்தங்கள் அமைய உள்ளதாகவும் சென்னையில் 37 முதலமைச்சர் மருந்தகங்கள் அமைய உள்ளன.
விரைவில் காலியாக உள்ள ரேசன் கடை பணியாளர் இடங்கள் நிரப்பப்பட உள்ளன, கூட்டுறவுத்துறை பொருட்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு வழங்க வேண்டும் என ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவிடம் கோரிக்கை விடுத்துள்ளோம், ஒன்றிய அரசு எங்கள் கோரிக்கைக்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை, ஏற்கவும் இல்லை என்று கூறினார்.