தவெக 2-ம் ஆண்டு தொடக்கவிழா! கொள்கை தலைவர்கள் சிலைகளை திறந்துவைத்து தவெக தலைவர் விஜய் மரியாதை!!
த.வெ.க. இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கட்சி அலுவலகத்தில் கொள்கைத் தலைவர்களின் சிலைகளை திறந்து வைத்த விஜய், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன. இன்று காலை 10.30 மணி அளவில் பனையூர் கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த விஜய்யை தவெகவினர் ஆராவாரத்துடன் வரவேற்றனர்.
தற்பொழுது, த.வெ.க. 2ஆம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு, கட்சி அலுவலகத்தில் உள்ள கட்சிக் கொடியை ஏற்றினார் விஜய். கொடியேற்றத்தை அடுத்து அலுவலகத்துக்குள் அமைந்துள்ள அக்கட்சியின் கொள்கை தலைவர்களான பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் சிலைகளை திறந்து வைத்தார்.
சிலைகளை திறந்து வைத்து விஜய், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து, மாணவர்களுக்கு மடிக்கணினி, பெண்களுக்கு தையல் மிஷின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை தவெக தலைவர் விஜய் வழங்க உள்ளார். மேலும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
https://x.com/i/status/1885981623860040188
இதற்கிடையில், தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி இன்று காலை தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கடிதம் எழுதிருந்தார். குறிப்பாக கடிதத்தில், “1967இல் தமிழக அரசியலில் ஆகப்பெரும் அதிர்வுடன் ஏற்பட்ட மாற்றம் போல், 2026 தேர்தலிலும் மாபெரும் மாற்றம் நிகழும் எனவும், இரட்டைப் போர் யானைகள் பலத்தோடு வாகைப்பூ மாலை சூடுவது நிச்சயம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.