ரிங் ரிங் சினிமா விமர்சனம் : ரிங் ரிங் இல்ல ரகசியங்களில் அலறும் ரிங் டோன் | ரேட்டிங்: 2.5/5
ஜெகன் நாராயணன் தயாரித்திருக்கும் ரிங் ரிங் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சக்திவேல்.
இதில் விவேக் பிரசன்னா, டேனியல் அன்னி போப், பிரவீன் ராஜா, அர்ஜுனன், சாக்ஷி அகர்வால், ஸ்வயம் சித்தா, சஹானா, ஜமுனா ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்;கள்:- ஒளிப்பதிவு -பிரசாந்த் டி எஃப் டெக், இசை வசந்த் இசைப்பேட்டை, எடிட்டிங் பிகே, கலை இயக்கம் தினேஷ் மோகன், பாடல்கள் பா. ஹரிஹரன், பிஆர்ஒ சக்திசரவணன்.
நான்கு இணை பிரியா நண்பர்களின் வாழ்வில் கைபேசியால் வரும் சிக்கல்கள், பிரச்சனைகள் பற்றிய படம் ரிங் ரிங். தியாகு( விவேக் பிரசன்னா)- சுயம் (ஸ்வயம் சித்தா), சிவா (பிரவீன் ராஜா) – பூஜா (சாக்ஷி அகர்வால்), அர்ஜுன் (அர்ஜுனன்) – இந்து (சஹானா) ஆகிய மூன்று ஜோடிகளில் திருமணமாகாதவர்கள் கதிர் (டேனியல் போப்)- காதலி ஜமுனா (ஜமுனா) மட்டுமே. சிவாவின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள மற்ற மூன்று பேரும் தங்கள் இணையுடன் கலந்துகொள்ள சென்னைக்கு வருகிறார்கள். நான்கு நண்பர்களின் சந்தோஷம், கேலி, கிண்டல் என்று கலாட்டாவாக செல்கிறது. அதன் பின் உணவு அருந்த அமரும் ஜோடிகளுக்குள் நடக்கும் உரையாடல்கள் ஒருவருக்கொருவர் மனைவிகளிடம் வெளிப்படையாக உண்மைகளை மறைக்காமல் பழகுகிறார்களா என்ற நிலைக்கு சென்று போனில் வரும் அழைப்பை ஸ்பீக்கரில் போட்டு அவர்களை சோதிக்கும் விளையாட்டை ஆட தொடங்குகின்றனர்.அதன் பின் மேஜை மேல் வைக்கும் அனைவரின் கைபேசிக்குள் வரும் குறுந்தகவல்கள் மற்றும் அழைப்புக்கள் நான்கு நண்பர்களுக்கும் பெரும் சோதனையாக அமைந்து விடுகிறது. அது என்ன? நான்கு ஜோடிகளும் தனித்தனியாக மறைக்கும் உண்மைகள் என்ன? அது தெரிந்த பிறகு நடக்கும் சம்பவங்கள் என்ன? அதற்கு பிறகு சுமூகமாக மனவருத்தம் இல்லாமல் திரும்பி சென்றார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
தியாகு( விவேக் பிரசன்னா), பூஜா (சாக்ஷி அகர்வால்), கதிர் (டேனியல் போப்),சிவா (பிரவீன் ராஜா), அர்ஜுன் (அர்ஜுனன்) ,சுயம் (ஸ்வயம் சித்தா), இந்து (சஹானா), ஜமுனா (ஜமுனா) ஆகிய முக்கிய கதாபாத்திரங்களில் விவேக் பிரசன்னாவும், டேனியல் இவர்களின் பங்களிப்பில் தான் படம் முழுவதும் செல்கிறது.
விவேக் பிரசன்னா ஆன்டிஸ்களுடன் நெருக்கமாக பழகும் தன்மை கொண்டவர், இதனால் ஏற்படும் சங்கடங்கள், அவரின் மனைவி தன் தாயை முதியோர் இல்லத்தில் சேர்க்க நினைப்பது தோழி மூலம் அறிந்து கோபப்படுவது, அதே சமயம் மனைவி ஸ்வயம் சித்தா கணவனை தவறாக நினைத்ததற்கு வருத்தப்படுவது, உண்மை தெரிந்த பின்பும் தாயிடம் விட்டுக் கொடுக்காமல் பேசுவதை பார்த்து மனநெகழ்ச்சிடைவது என்று மகிழ்ச்சி, வருத்தம் ஆகியவற்றை இருவரும் சரியாக செய்துள்ளனர்.
டேனியல் காதலி திருமணம் செய்து கொள்ள சம்மதிக்காமல் சண்டையிட்டு பிரிந்து செல்லும் போது வருத்தப்பட்டு இன்னொரு பெண்ணுடன் பழகுவது, அதன் பின் தன் தவறை உணர்ந்து காதலியிடம் மன்னிப்பு கேட்டு சேர்ந்து கொள்வது என்று தன் கதாபத்திரத்தை உள்வாங்கி நன்றாக செய்துள்ளார்.
மற்றும் சிவா தன் மனைவிக்காக செய்யும் பொருளுதவியால் வரும் சிக்கல்கள், நண்பர்களின் ஜோக்கராக வலம் வரும் அர்ஜுனனின் உண்மையான குணத்தை புரிந்து கொண்டு அதை விவரிக்கும் மனைவியாக சஹானாவின் பங்களிப்பு சிறப்பு.
ஒளிப்பதிவு பிரசாந்த் டி எஃப் டெக், இசை வசந்த் இசைப்பேட்டை, எடிட்டிங் பிகே , கலை இயக்கம் தினேஷ் மோகன், பாடல்கள் பா. ஹரிஹரன் ஆகிய தொழில்நுட்ப கலைஞர்கள் ஒரே வீட்டில் நடக்கும் சம்பவங்களை உரையாடல்கள் மிகுதியாக இருக்கும் காட்சிகளை அழகாக தொகுத்து சுவாரஸ்யம் குiறாயமல் கொடுத்துள்ளனர்.
எல்லோருக்குள்ளும் ஒரு ரகசியம் கட்டாயம் இருக்கும். அதன் அடிப்படையில் காதலன்-காதலி, அண்ணன்-தங்கை, பெற்றோர், கணவன்-மனைவி என்று பலரின் குடும்பத்தில் இருக்கும் உறவுகளின் ரகசியத்தை அறிந்து கொண்டால் விபரீத விளைவுகள் நிச்சயம் ஏற்படும், மற்றவர்களிடம் இதை மறைத்தால் நேசிப்பவர்களுக்கு சந்தோஷம் ஏற்படும் என்ற நிலை இருந்தால் அது தவறில்லை என்பதை நகைச்சுவை கலந்து தோய்வு ஏற்படாதபடி சுட்டிக்காட்டும் படமாக இயக்கியுள்ளார் சக்திவேல். கைபேசியை வைத்து வெளியான சில படங்களின் தழுவலாக இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சக்திவேல். ஒரே இடத்தில் நடக்கும் சம்பவங்களை உரையாடல்களுடன் கடத்தி அவர்களின் உணர்ச்சிகளையும், சுயரூபத்தையும் சிறப்பாக காட்ட முயற்சித்த இயக்குனரின் பங்களிப்பு சிறப்பு.
மொத்தத்தில் ஜெகன் நாராயணன் தயாரித்திருக்கும் ரிங் ரிங் இல்ல ரகசியங்களில் அலறும் ரிங் டோன்.