காதலிக்க நேரமில்லை சினிமா விமர்சனம் : காதலிக்க நேரமில்லை நவயுக நாகரிக ஹைகூ காதல்கவிதை | ரேட்டிங்: 3.5/5

0
507

காதலிக்க நேரமில்லை சினிமா விமர்சனம் : காதலிக்க நேரமில்லை நவயுக நாகரிக ஹைகூ காதல்கவிதை | ரேட்டிங்: 3.5/5

ரெட் ஜெயண்ட் மூவிஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எம்.செண்பக மூர்த்தி, ஆர்.அர்ஜுன் துரை ஆகியோர் தயாரித்திருக்கும் காதலிக்க நேரமில்லை படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கிருத்திகா உதயநிதி.

இதில் ரவி மோகன், நித்யா மேனன், யோகி பாபு, வினய் ராய், டிஜே பானு, ஜான் கொக்கன், லால், லட்சுமி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, வினோதினி, ரோகன் சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :-இசை : ஏ ஆர் ரஹ்மான், ஒளிப்பதிவு : கேவெமிக் ஆரி, பாடலாசிரியர் : சினேகன், விவேக், மஷ_க் ரஹ்மான், கிருத்திகா நெல்சன், எடிட்டர் : லாரன்ஸ் கிஷோர்,நடனம் : ஷோபி பால்ராஜ், சாண்டி, லீலாவதி ,தயாரிப்பு வடிவ​மைப்பாளர் : லதா நாயுடு, கலை இயக்குனர் : சண்முகராஜா, தயாரிப்பு நிர்வாகி : ஈ.ஆறுமுகம், விநியோக மேலாளர் : சி.ராஜா, ஒலி வடிவமைப்பாளர் : விஜய் ரத்தினம், ஒலிக்கலவை : ரஹமத்துல்லா, விளம்பர வடிவமைப்பாளர் : கோபி பிரசன்னா, ஸ்டில்ஸ் : ஆர் எஸ் ராஜா, ஆடை வடிவமைப்பாளர் : கவிதா ஜே, திவ்யா லக்ஷனா, ஒப்பனை : ராஜ் கென்னடி,விஎஃப்எக்ஸ்: ஆர்.ஹரிஹரசுதன், டப்பிங் இன்ஜினியர் : என். வெங்கட பாரி, வசனங்கள் : சஜித் அலி, மக்கள் தொடர்பு-ஏய்ம் சதீஷ்.

பெங்க@ரில் கட்டமைப்பு பொறியாளராக பணி புரியும் சித்தார்த் (ரவி மோகன்) கூட்டு குடும்பத்தில் வாழ்ந்தாலும் திருமணத்தின் மீதும்  குழந்தைகள் மீதும் விருப்பம் இல்லாதவர். அவருடைய உயிர் நண்பர்கள் ஒரின சேர்க்கையாளரான சேது (வினய்) குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஆசைப்படுபவர் மற்றும் இன்னொரு நண்பர் கவுடா (யோகி பாபு). சேதுவின் வற்புறுத்தலால் விந்தணு சேமிப்பு மருத்துவமனை ஒன்றில் சேதுவுடன் சேர்ந்து சித்தார்த் மற்றும் கவுடா தங்கள் விந்தணுவை சேகரித்து வைக்க ஏற்பாடு செய்கிறார்கள். இதனிடையே தன் காதலி நிருபமாவின் (டி.ஜே. பானு);வற்புறுத்தலால் சித்தார்த் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து நிச்சயத்திற்கு நாள் குறிக்கிறார். இந்நிலையில் காதலி நிருபமாவிடம் ஏற்படும் சிறு தகராறு நிச்சயதார்த்தத்தில் காதலி வராமல் நின்று போகிறது. இதனால் விரக்தியாகும் சித்தார்த் மிகவும் மனமுடைந்து போனாலும் தனது வேலையில் கவனம் செலுத்த முயல்கிறார். மறுபுறம், கட்டிடக் கலைஞர் ஸ்ரேயா (நித்யா மேனன்) மற்றும் கரண் (ஜான் கொக்கன்) இருவரும் நான்கு ஆண்டுகளாக காதலிக்க இருவரும் முறைப்படி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தாலும், விசா நோக்கங்களுக்காக தங்கள் குடும்பத்தினருக்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொள்கிறார்கள். அதன் பிறகு நடக்கும் சம்பவம் ஸ்ரேயாவிற்கு பேரதர்ச்சியாகிறது. காதல் கணவர் தனது உயிர் தோழியுடன் படுக்கையில் இருப்பதை தற்செயலாக கண்ட பின் அவரிடமிருந்து பிரிந்து செல்கிறாள். ஆண்கள் மேல் வெறுப்பு ஏற்பட்டாலும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பும் ஸ்ரேயா ஐவிஎஃப் மூலம் கருத்தரிக்க முடிவு செய்து அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்கிறார். இறுதியில் சிகிச்சை மூலம் கருத்தரிக்க, இதற்கு பெற்றோர்கள் எதிர்க்க, வீட்டை விட்டு வெளியேறி தன் சித்தியுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். பெங்க@ரில் சித்தார்த்தும், ஸ்ரேயாவும் கட்டடக்கலை கருத்தரங்கு கண்காட்சியில் சந்திக்க நேரிட நண்பர்களாகி பின்னர் பிரிகின்றனர். எட்டு வருடங்களுக்கு பிறகு ஸ்ரேயாவின் மகன் மூலம் ஏற்படும் சண்டையில் இருவரும் சந்திக்க நேரிடுகிறது. மீண்டும் இவர்கள் நட்பு துளிர் விடும் போது, சித்தார்த்தின் காதலி நிருபமா வந்து சேர்கிறார். சிங்கிள் பெற்றோராக இருப்பது மிகவும் சிரமம் என்பதை தன் மகனின் நடவடிக்கையில் இருந்து புரிந்து கொள்கிறார் ஸ்ரேயா. அதன் பின் என்ன நடந்தது? இருவரின் வாழ்வில் நடக்கும் குழப்பங்கள் என்ன? அதனை எப்படி சரி செய்தார்கள்? இருவரும் இறுதியில் எடுத்த முக்கிய முடிவு என்ன? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

சித்தார்த்தாக ரவி மோகன் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம். திருமணம், குழந்தை என்பதில் ஈடுபாடு இல்லாதவராக, தொழில் மற்றும் நண்பர்களுடன் அரட்டை, கேளிக்கைகளில் ஆர்வமுள்ளவராக வித்தியாசமான கண்ணோட்டத்தில் இருக்கிறது. தொழிலில் தான் நினைத்ததை சாதிக்க துடிக்கும் இளைஞராக இருந்தாலும் இறுதியில் நியாயத்திற்கு கட்டுப்பட்டு எடுக்கும் முடிவில் நிதானமானவராக தெரிகிறார். ஸ்ரேயாவின் மேல் ஈர்ப்பு ஏற்பட்டாலும் அதை காட்டிக்கொள்ளாமல் உதவி செய்வதிலும் சரி, ஸ்ரேயா மகனிடம் சண்டையிட்டு பின்னர் சமாதானம் செய்து பழகுவதிலும் சரி தன் பங்களிப்பை சரியாக செய்து கண்ணியமாக நடந்து கொண்டு நேர்;த்தியான மேம்;பட்ட காதலுடன் நடிப்பில் அசத்துகிறார்.

ஸ்ரேயாவாக நித்யா மேனன் தான் படத்தின் முதகெலும்பு. ஒவ்வொரு காட்சியிலும் நாகரீக உலகின் இளைஜியாக, தைரியம், தன்னம்பிக்கையுடன் எடுக்கும் முடிவு, அதற்காக தன் பெற்றோரையே விட்டுச் செல்வது, சிங்கிள் மதராக மகனை வளர்த்தாலும், மகனின் தந்தை ஏக்கத்திற்கு சரியான காரணத்தை சொல்ல முடியாமல் தவிப்பது, சித்தார்த்தை பிடித்திருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் முடிந்த வரை காதலை மறைத்து வாழ்வது என்று தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒவ்வொரு இடத்திலும் க்யூட் முகபாவனைகள் துள்ளலுடன் ரசிக்கும்படி உள்ளது.

நண்பராக சில காட்சிகளில் யோகி பாபு, ஒரினச்சேர்க்கையாளராக தன் விருப்பத்தை தைரியமாக சொல்லி, நினைத்தவாரே தைரியமாக திருணம் செய்து கொள்ளும் நண்பராக வினய் ராய், மாடல் காதலியாக சித்தார்த்தின் ஜோடியாக டிஜே பானு, ஸ்ரேயாவின் காதல் கணவராக ஜான் கொக்கன், சித்தார்த்தின் தந்தையாக சில காட்சிகள் என்றாலும் சிங்கிள் தந்தையாக தன் கஷ்டத்தை சொல்லும் லால், மகளின் முடிவை கடைசி வரை சகித்துக் கொள்ள முடியாத ஸ்ரேயாவின் தாயாக லட்சுமி ராமகிருஷ்ணன், தந்தையாக பாடகர் மனோ, சித்தியாக வினோதினி, கச்சிதமாக பொருந்தும் ஸ்ரேயாவின் துறுதுறு மகனாக ரோகன் சிங் மற்றும் பலர் படத்தின் புது முயற்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.

முற்போக்கு சிந்தனை நிறைந்த கதைக்களத்திற்கு ஏற்ற காதல் பாடல்களை ஏ ஆர் ரஹ்மான் தன் இசையால் ரசிகர்களை வசீகரித்து இழுத்துள்ளார்.  சினேகன், விவேக், மஷ_க் ரஹ்மான், கிருத்திகா நெல்சன் ஆகிய அனைவரின் பாடல் வரிகள்; இளம் ஜோடிகளின் ரிங்டோனாக மாறிவிட்டது எனலாம்.

சென்னை, பெங்களூரு, கட்டிடங்கள், மருத்துவமனை, காரில் லாங் டிரைவ் அழகியல் மற்றும் ரிச்சான காட்சிகளில் மெய்மறக்க செய்துள்ளார்  ஒளிப்பதிவாளர் கேவெமிக் ஆரி.

இருவரின் வாழ்வியலை தனித்தனியாகயமைத்து அதை ஒரே நேர்கோட்டில் இணைத்து அதை தெளிவாக கொடுத்துள்ளார் எடிட்டர் லாரன்ஸ் கிஷோர்.

எதிர்மாறான எண்ணங்கள் கொண்ட இருவருக்கும் இருக்கும் ஒற்றுமை தொழில் மட்டுமே, அவர்களின் பாதைகள் குறுக்கிட்டாலும் விதியால் பிரிந்து மீண்டும் இணையும் போது ஏற்படும் மாற்றம் என்ன என்பதை திரைக்கதையாக்கி அதில் விந்தணு வங்கி, ஐவிஎஃப் சிகிச்சை, தன்னார்வ குழந்தை இல்லாமை, ஆண்கள் துணை இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்வது, ஒற்றைப்பெற்றோர் சந்திக்கும் பிரச்சனை, ஒரே பாலின திருமணம், திருமண பந்தத்தில் செல்லாமல் லிவிங் டுகதராக வாழ்வது என்று பல சிக்கலான விஷயங்களை தொட்டு இன்றைய இளைய சமூதாயத்தின் காதல் கண்ணோட்டத்தை கண்ணாடி போல் பிரதிபலித்து வித்தியாசத்தையும், துல்லியத்துடன் தைரியமாக இயக்கியுள்ளார் கிருத்திகா உதயநிதி. இறுதி வரை குழந்தையின் தந்தை யார் என்று இருவருக்கும் தெரியாமல் சஸ்பென்சை தக்க வைத்துள்ளதற்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எம்.செண்பக மூர்த்தி, ஆர்.அர்ஜுன் துரை ஆகியோர் தயாரித்திருக்கும் காதலிக்க நேரமில்லை நவயுக நாகரிக ஹைகூ காதல்கவிதை.