சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டி தலைமையிலான  குட் டீட்ஸ் கிளப்பின் பொங்கல் மற்றும் லோஹ்ரி பண்டிகையில் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் மனைவி அருணா மற்றும் மகன்  அகில் விஸ்வநாதன்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்

0
177
சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டி தலைமையிலான  குட் டீட்ஸ் கிளப்பின் பொங்கல் மற்றும் லோஹ்ரி பண்டிகையில் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் மனைவி அருணா மற்றும் மகன்  அகில் விஸ்வநாதன்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சென்னை வேளச்சேரியில் உள்ள பார்க் ஹயாத் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற பொங்கல் மற்றும் லோஹ்ரி கொண்டாட்டங்கள், சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டி நிறுவிய குட் டேட்ஸ் கிளப் மூலம் நடத்தப்பட்டது.
 ஒவ்வொரு மாதமும் தனித்தன்மையுடன் தொண்டுகள் செய்து புகழ் பெற்ற  இந்த கிளப், கலாச்சாரம், பரிவு மற்றும் சமூகத்தை ஒன்றிணைப்பதன் மூலம்,  தேவைப்படுபவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
அந்த வகையில் இந்த மாதம்  மனதிற்கு நெருக்கமான ஒரு செயலை கிளப் செயல்படுத்தி உள்ளது.
 வளர்ந்து வரும் கலைஞரான செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதனின்  ஆனந்தின் மகன், அகில் விஸ்வநாதன்,  நரம்பியல் பாதிப்பு கொண்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு, உதவிடும் வகையில் தனது படைப்புகளான பிளாக் பிரிண்ட்கள் மற்றும் கலை வடிவமைப்புகளைக் கொண்ட தனித்துவமான ஆடைகளை ஏலத்தில் விட்டு, அதன் மூலம் கிடைக்கும் வருவாய் அனைத்தையும் அந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளின் மேம்பாட்டுற்காக வழங்கினார்.
அப்போது அவரது  தாயார் அருணா விஸ்வநாதன் சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டி மற்றும் வினய்  உடனிருந்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
 இதனுடன் தி குட் டீட்ஸ் கிளப் சார்பிலும்  மாதாந்திர பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது.
 இந்த நல்ல நிகழ்வில், பொங்கல் மற்றும் லோஹ்ரி பண்டிகை கொண்டாட்டமும் கலாச்சார நிகழ்வுகளும் அரங்கேறின. இதில் பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.