தமிழ்நாடு முழுவதும் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்.. வருண் குமார் ஐ.பி.எஸ் DIG ஆக பதவி உயர்வு!
தமிழகத்தில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 3 ஏடிஜிபிக்களுக்கு டிஜிபிக்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஆயுதப்படை ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கி அதே பொறுப்பில் டிஜிபியாக நீடிப்பார்.
நிர்வாகப் பிரிவு ஏடிஜிபி வெங்கடராமன் டிஜிபியாக பதவி உயர்வு கிடைத்து அதே பொறுப்பில் நீடிப்பார்.
தலைமையிட ஏடிஜிபி வினித் தேவ் வாங்கிடே டிஜிபி யாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபி கல்பனா நாயக், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்ட SP., யாக இருந்த வருண் குமார் ஐ.பி.எஸ் DIGயாக பதவி உயர்வு பெற்று திருச்சி சரக DIGயாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை காவல் கிழக்கு இணை ஆணையராக இருந்த சரோஜ் குமார் காவல்துறை தலைமையக இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை காவல் மேற்கு இணை ஆணையராக இருந்த விஜயகுமார் ஐபிஎஸ் கிழக்கு இணை ஆணையராக நியமனம்.