‘கொள்கைக் கருவூலம் பேராசிரியப் பெருந்தகையின் புகழைப் போற்றுவோம்’ : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!

0
97

‘கொள்கைக் கருவூலம் பேராசிரியப் பெருந்தகையின் புகழைப் போற்றுவோம்’ : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது உடன்பிறவா சகோதரரும், 75 ஆண்டு காலம் உயிர் நண்பராக இருந்தவரும், தமிழகத்தின் முதிர்ந்த அரசியல்வாதியும், தி.மு.க. அரசின் அமைச்சரவையில் பல்வேறு காலகட்டங்களில் நிதி, கல்வி, சுகாதாரம், சமூக நலத்துறை அமைச்சராகப் பணியாற்றியவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்தவரும், 2001 – 2006 ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவரும், 8 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவருமான உயர்திரு. பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் 102 வதுபிறந்தநாள் விழா நாள் இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதளப்பதிவில், “கழகத்திற்கும் கலைஞருக்கும் நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம் தூண்போல உடன் நின்ற உறுதியும் தொலைநோக்கும் கொண்டவர் இனமானப் பேராசிரியர் அவர்கள்!

“தமிழ்ப்பற்றோடு சுரணையும் உள்ளவன்தான் திராவிடன்” என இனமான வகுப்பெடுத்து – கொள்கைக் கருவூலமாகவும் விளங்கும் பேராசிரியப் பெருந்தகையின் புகழைப் போற்றுவோம்!” எனத் தெரிவித்துள்ளார்.