எமக்கு தொழில் ரொமன்ஸ் விமர்சனம் : எமக்கு தொழில் ரொமன்ஸ் புன்னகை ததும்பும் காதல் கலாட்டா | ரேட்டிங்: 2.5/5

0
262

எமக்கு தொழில் ரொமன்ஸ் விமர்சனம் : எமக்கு தொழில் ரொமன்ஸ் புன்னகை ததும்பும் காதல் கலாட்டா | ரேட்டிங்: 2.5/5

எம்.திருமலை தயாரித்திருக்கும் எமக்கு தொழில் ரொமன்ஸ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பாலாஜி கேசவன்.

இதில் அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா, ஊர்வசி, அழகம் பெருமாள், எம்.எஸ்.பாஸ்கர், பகவதி பெருமாள், படவா கோபி ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் : இசையமைப்பாளர்: நிவாஸ் கே பிரசன்னா, ஒளிப்பதிவு இயக்குனர்: கணேஷ் சந்திரா, படதொகுப்பாளர்: ஐ.ஜெரோம் ஆலன், கலை இயக்குனர்: எஸ்.ஜெயச்சந்திரன், பாடலாசிரியர்: மோகன் ராஜன், நடன இயக்குனர்: தஸ்தா, ஆடை வடிவமைப்பாளர்: பிரவீன் ராஜா, ஒப்பனை: பி.எஸ்.குப்புசாமி,ஒலிப்பதிவு : ஜி.தரணிபதி, ஸ்டில்ஸ் : டி.ராமமூர்த்தி, விஎஃப்எக்ஸ் மற்றும் டிஐ: கலசா ஸ்டுடியோஸ், வண்ணம்: ரகுராமன், எஸ் எஃப் எக்ஸ்: ராஜசேகர்.கே, வடிவமைப்பு: நவின் குமார், விஎஃப்எக்ஸ் தயாரிப்பாளர்: நரேஷ்குமார் பாபு, தயாரிப்பு நிர்வாகி : டி.கணேசன், பிஆர்ஒ: சதீஷ் ஏஐஎம்

உமாசங்கர் (அசோக் செல்வன்) ஒரு உதவித் திரைப்பட இயக்குனர், அவர் பணியாற்றிய ஒரு படத்தின் மாபெரும் தோல்வியால் தவிக்கிறார். இந்நிலையில் தொழில் காரணங்களுக்காக டெல்லிக்கு மாறத் திட்டமிட்டிருக்கும் செவிலியரான லியோவை (அவந்திகா மிஸ்ரா) பார்க்க காதல் மலர, அவரிடன் நண்ப​ராக பழகி பின்னர் காதலர்களாக வலம் வருகின்றனர். உமா தனது நண்பர் ஒருவருக்கு உதவ முடிவு செய்யும் போது உற்சாகமான காதல் வாழ்க்கையில் தடை ஏற்பட்டு விரிசலடைகிறது. பின்வரும் குழப்பம், பிரச்னைகளை எப்படி உமாபதி சமாளித்தார்? காதல் மோதல் தீர்ந்ததா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

இளமை காதல் ததும்ப அசோக் செல்வன் நகைச்சுவையுடன், காதலுக்காக பொய் சொல்லி சமாளிப்பது என்று தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ளார்.

காதலியாக அவந்திகா மிஸ்ரா அசோக் செல்வனுக்கு ஈடு கொடுத்து நடித்து ரசிக்கும்படி செய்துள்ளார்.

கோபக்கார அப்பாவாக அழகம் பெருமாள், நகைச்சுவையில் ரகளை செய்யும் அம்மாவாக ஊர்வசி,  நண்பர்களாக வரும் பக்ஸ், விஜய் வரதராஜ் மற்றும் சில காட்சிகள் என்றாலும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் அனுபவ நடிப்பால் முத்திரை பதிக்கின்றனர்.

நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் இளையராஜா இசையையும் அளவாக சேர்த்து அசத்தியுள்ளார்.

ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா இளமையான கதை திரைக்கதையின் தன்மையை உள்வாங்கி  ஈடுகொடுத்து ரசிக்கும்படி காட்சிகளை அமைத்துள்ளார்.

ஏற்கனவே பார்த்து ரசித்த படங்களின் எதிர்பார்த்த காட்சிகள் என்றாலும் காதலை மையப்படுத்தி முழுக்க பொழுதுபோக்கு படமாக நகைச்சுவையில் ரசிக்கும்படி கொடுத்து அனுபவமிக்க நடிகர்களை களமிறக்கி உணர்ச்சிகள் நிறைந்த அம்சங்களுடன் கலகலப்புடன் இயக்கியுள்ளார் பாலாஜி கேசவன்.

மொத்தத்தில் எம்.திருமலை தயாரித்திருக்கும் எமக்கு தொழில் ரொமன்ஸ் புன்னகை ததும்பும் காதல் கலாட்டா.