
கிரி டிரேடிங் ஏஜெண்சி பிரைவேட் லிமிடெட், FICCI அமைப்பின் பன்முகத்தன்மை, சம வாய்ப்பு மற்றும் மகளிற்கான அதிகார பகிர்விற்கான விருதால் கௌரவிக்கப்பட்டது
சென்னை, நம் பாரத திருநாட்டில் ஆன்மீகம் மற்றும் திருவிழாக்களுக்கு தேவைப்படும் அனைத்து பொருட்கள் விற்கும் முன்னணி நிறுவனமான கிரி டிரேடிங் ஏஜெண்சி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு, FICCI அமைப்பின் மிக உயரிய விருதான “தலைமைப் பொறுப்புகளில் பெண்களின் முக்கிய பங்களிப்பிற்கான 2024” ஆண்டிர்கானா விருதை, இந்தியாவின் தலைநகரான புது தில்லியில் நடந்த விழாவில், வழங்கப்பட்டுள்ளது.
இந்த பெருமைமிகு விருது, தலைமை மற்றும் மேலாண் பதவிகளில் மகளிரின் முக்கிய பங்களிப்பு,முன்னேற்றம், சம வாய்ப்புகள் போன்றவற்றில், கிரி நிறுவனத்தின் தொடர் முயற்சிகள் மற்றும் பங்களிப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது. கிரி நிறுவனத்தில் பணியாளர்களில் பெரும்பங்கு வகிப்பது பெண்களே ஆவர். கிரி, தனது செயல்பாட்டில், தலைமை மற்றும் உயர் நிர்வாகப் பதவிகளில் பெண்களுக்கென்று தனித்துவமான வாய்ப்புக்களை உருவாக்கி வருவதில் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் செயல்பட்டு வருகின்றது.

1. Mr. Anish Shah, President, FICCI
2. Ms. Abha Dalmia, co-founder of FICCI Ladies Organisation
3. Ms. Sharada Prakash, Director & Chairman of Management Committee, GIRI
4. Ms. Priyanka Deshmukh, IT Delivery Head, GIRI GIRI Trading Agency Private Limited
5. Ms. Thamizhamuthu Pari, Senior Public Relations Executive, GIRI Trading Agency Private Limited
கிரியின் இயக்குநர் திருமதி. சாரதா பிரகாஷ் அவர்கள் கூறுகையில், “நாங்கள் இந்த விருதை பெறுவதில் மிக்கப் பெருமை கொள்கிறோம். இந்த விருதானது எங்களது பணியிடங்களில் பெண்களின் பங்களிப்பிற்கு முக்கியத்துவத்தை உறுதி செய்ததற்காகவும், பணியாளர்கள் அனைவரையும் சமமாக நடத்தி, ஒருங்கிணைத்து வளர்ச்சி பாதையை மேம்படுத்தி சென்றுகொண்டிருப்பதற்காகவும் வழங்கப்பட்ட ஒரு சிறந்த அங்கீகாரமாகும் “. கிரியின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்களிப்பாக இருப்பது, எங்களது பணியாளர்களின் புதுமை மற்றும் பன்முகத்தன்மையே ஆகும். இந்த அங்கீகாரம் எங்களின் பன்முகத்தன்மைக்கும், பெண் பணியாளர்களின் உயர்விற்கும், மேன்மைக்கும் ஏற்ற சூழ்நிலையை உருவாக்குவதற்கு எங்களை மேலும் ஊக்குவிக்கின்றது.”
கிரி, ஒரு மிகச்சிறந்த பன்முகத்தன்மையை கொண்ட பணியாளராக தன்னை தக்கவைத்துக்கொண்டு, பெண் ஊழியர்களின் வளர்ச்சி மற்றும் உயர்விற்கு உறுதுணையாக இருப்பதற்கு இந்த விருது பிரதிபலிக்கின்றது.