நிறங்கள் மூன்று சினிமா விமர்சனம் : நிறங்கள் மூன்று மனிதர்களின் நிழல் நிஜ முகங்களின் முப்பரிமாண சங்கமம் | ரேட்டிங்: 2.5/5
ஐங்கரன் இன்டர்நேஷனல் சார்பில் கே.கருணாமூர்த்தி தயாரித்திருக்கும் நிறங்கள் மூன்று படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கார்த்திக் நரேன்.
இதில் அதர்வா, சரத்குமார், துஷ்யந்த் ஜெயபிரகாஷ், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு டிஜோ டாமி, இசை ஜேக்ஸ் பெஜாய், எடிட்டிங் ஸ்ரீஜித் சாரங். மக்கள் தொடர்பு டைமண்ட் பாபு, சுரேஷ் சந்திரா, அப்துல் ஏ.நாசர், டி.ஒன்.
உயர்நிலை பள்ளியில் படிக்கும் மாணவர் ஸ்ரீPக்கு (துஷ்யந்த் ஜெயபிரகாஷ்) பார்வதி (அம்மு அபிராமி) மீது காதல். பார்வதியின் ஆசிரியர் தந்தை வசந்த் (ரஹ்மான்) மீது ஸ்ரீக்கு நன்மதிப்பு உண்டு. ஏனெனில் ஸ்ரீக்கு ஆசிரியர் மட்டுமல்ல ஸ்ரீPயின் குடும்ப பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்கும் நல்ல நண்பராகவும் பழகுகிறார். ஒரு நாள் ஸ்ரீ பார்வதியிடம் தன் காதலை சொல்ல மறுநாள் பார்வதி காணாமல் போகிறாள். இதனால் அதிர்ச்சியாகும் ஸ்ரீ தன் நண்பன் மற்றும் ஆசிரியருடன் சேர்ந்து பார்வதியை தேடுகிறான். சினிமா இயக்குனராகும் கனவோடு பல சினிமா நிறுவனங்களில் முயற்சி செய்தும் வாய்ப்பு கிடைக்காமல் விரக்தியில் போதையில் திளைத்து தவிக்கும் வெற்றி (அதர்வா).வெற்றியின் தந்தை செல்வம் (சரத் குமார்) ஒரு ஊழல் நிறைந்த காவலர். குடும்ப பிரச்சனை காரணமாக தந்தையும் மகனும் தனித்தனியே வசிக்கிறார்கள். இந்நிலையில் செல்வத்திற்கும் அமைச்சரின் மகனுக்கும் பகை ஏற்படும் சம்பவங்கள் நடக்கிறது. அமைச்சரின் மகன் அதற்காக செல்வத்தின் மகன் வெற்றியை பழி வாங்க நினைக்கிறான். அதே சமயம் வெற்றியின் ஒரு கதையை திருடி பிரபல இயக்குனர் படம் எடுக்க, அந்த கதை தன்னுடையது என்பதை நிரூபிக்கும் கதை புத்தகம் வீட்டில் திருடு போகிறது. இதனால் வெற்றி மனஉளைச்சல் ஏற்பட்டு போதையில் தவிக்கிறார். நண்பர்களுடன் சேர்ந்து இயக்குனரை பார்க்க செல்கின்றனர். அதன் பின் என்ன நடந்தது? திருடு போன கதை புத்தகத்தை மீட்டார்களா? யார் சொல்லி எடுக்கப்பட்டது? அந்தக் கதைப்புத்தகம் யாரிடம் இருந்தது? பார்வதியை யார் கடத்தினார்கள்? காரணம் என்ன? பார்வதி கிடைத்தாரா? நல்லவராக தெரிபவரின் முகங்களின் நிறம் என்ன? என்பதே படத்தின் ஒரே இரவில் நடக்கும் மூன்று கதைக்களத்தை ஒரே நேர்கோட்டில் இணைக்கும் க்ளைமேக்ஸ்.
அதர்வா வெற்றியாக இயக்குனர் ஆசை, போதை பொருளுக்கு அடிமையாகி மயக்கத்தில் திளைப்பது, கத்துவது, தன் உழைப்பை திருடும் இயக்குனர் மீது கோப்படுவது, தந்தை மீது வெறுப்பை காட்டுவது என்று சில இடங்களில் மிகையான நடிப்பை வழங்கியது போல் உணர முடிகிறது.
காவல் துறை அதிகாரியாக சரத்குமார் நெகடிவாக காட்டப்பட்டாலும் அவரின் உன்னத உள்ளத்தை அறிந்து கொள்ளும் போது ரசிக்கலாம்.
பள்ளி மாணவனாக துஷ்யந்த் ஜெயபிரகாஷ், நல்லாசிரியராக காட்டப்படும் ரஹ்மானின் இன்னொரு முகம், அம்மு அபிராமி, உமா பத்மநாபன் ஆகியோர் சிறப்பாக செய்துள்ளனர்.
ஒளிப்பதிவு டிஜோ டாமி, இசை ஜேக்ஸ் பெஜாய், எடிட்டிங் ஸ்ரீஜித் சாரங் ஆகிய அனைவருமே ஒரே இரவில் நடக்கும் சம்பவங்கள், அதை நேர்த்தியாக கொடுத்த விதம் அருமை.
இயக்குனர் கார்த்திக் நரேன் கதாபாத்திரங்களையும் அவற்றின் நோக்கங்களையும் முதல் பாதி முழுவதிலும் சொல்கிறார். முதல் பாதியில் வெளிப்படுத்தாத காரணங்களை இரண்டாம் பாதியில் வெளிப்படுத்தி முதன்மை கதாபாத்திரங்களின் வௌ;வேறு குணாதியங்களை அறியும் வண்ணம் ஒன்றிணைத்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் ஹைப்பர்லிங்க் கதையாக கொடுத்துள்ளார். ஒரே இரவில் அனைவரையும் இணைக்கும் சம்பவங்களில் வெளிப்படும் அவர்களின் உண்மை முகங்களும் நிறங்களும் இந்த தொடர்பில்லாத சம்பவங்களுடன், கதாபாத்திரங்களும் அவர்களின் விருப்பங்களும் தேவைகளும் என்ன என்பதை தெளிவாக இறுதியில் நேர்கோட்டில் இணைத்து புதிருக்கான விடைகளை விவரிக்கிறார் இயக்குனர் கார்த்திக் நரேன். அதே சமயம் தேவையில்லாமல் போதைப்பொருள் பயன்படுத்தும் காட்சிகள் அதிகமாக காட்டப்படுவதை தவிர்த்திருக்கலாம்.
மொத்தத்தில் ஐங்கரன் இன்டர்நேஷனல் சார்பில் கே.கருணாமூர்த்தி தயாரித்திருக்கும் நிறங்கள் மூன்று மனிதர்களின் நிழல் நிஜ முகங்களின் முப்பரிமாண சங்கமம்.