ஒரே நாளில் 6 முருகன் கோயில் தரிசனம்.. சிறப்பு ஆன்மீக சுற்றுலா பேருந்து இயக்கம் – முழு விவரம்!

0
203

ஒரே நாளில் 6 முருகன் கோயில் தரிசனம்.. சிறப்பு ஆன்மீக சுற்றுலா பேருந்து இயக்கம் – முழு விவரம்!

அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் சார்பில் 6 அருள்மிகு முருகன் கோவில்களை ஒரே நாளில் தரிசிக்கும் வகையில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு சுற்றுலா பேருந்து 2024 அக்டோபர் 3வது வாரம் முதல் இயக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. விரைவில் துவங்கப்படவுள்ள இச்சிறப்பு ஆன்மீக சுற்றுலா பேருந்து இயக்கம் தொடர்பாக அறநிலையத்துறை மற்றும் போக்குவரத்துக்கழக அலுவலர்களுக்கு இடையேயான ஆலோசனை கூட்டம், நிர்வாக இயக்குநர் இரா.பொன்முடி தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் நிர்வாக இயக்குநர் இரா.பொன்முடி பேசியதாவது, “பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்கவும், போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களின் வழிக்காட்டுதலின்படியும் இச்சிறப்பு பேருந்து விரைவில் இயக்கப்படவுள்ளது.

சிறப்பு சுற்றுலா பேருந்து கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு ஒரே நாளில்,

* எண்கண் அருள்மிகு. சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் (திருவாரூர் மாவட்டம்),

* சிக்கல் ஶ்ரீ சிங்காரவேலன் ஆலயம்,

* பொரவச்சேரி அருள்மிகு கந்தசாமி திருக்கோவில்,

* எட்டுக்குடி அருள்மிகு. சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் (நாகப்பட்டிணம் மாவட்டம்),

* ஏரகரம் ஆதி சுவாமிநாதசுவாமி திருக்கோவில்,

* சுவாமிமலை அருள்மிகு. சுவாமிநாதசுவாமி திருக்கோயில்

– ஆகிய ஆறு கோவில்களையும் தரிசனம் செய்வதற்கு ஏதுவாக ஆறுமுருகன் திருத்தலம் சுற்றுலா பேருந்து இயக்கப்படவுள்ளது.