அகர்வால் ரிலிஃப் அண்ட் எஜுகேஷனல் டிரஸ்ட்டின் 50 ஆண்டு விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த், துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, அறக்கட்டளை தலைவர் ஹரிஷ் குமார் சங்கி, நிர்வாக அறங்காவலர்  முராரிலால் சோந்தாலியா, பொன்விழா தலைவர் பி.பி. ஜுன்ஜுன்வாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

0
218
அகர்வால் ரிலிஃப் அண்ட் எஜுகேஷனல் டிரஸ்ட்டின் 50 ஆண்டு விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த், துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, அறக்கட்டளை தலைவர் ஹரிஷ் குமார் சங்கி, நிர்வாக அறங்காவலர்  முராரிலால் சோந்தாலியா, பொன்விழா தலைவர் பி.பி. ஜுன்ஜுன்வாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அகர்வால் ரிலிஃப் அண்ட் எஜுகேஷனல் டிரஸ்ட்(ARET) கல்வி, சமூக சேவை ஆகியவற்றில் தங்களது அர்ப்பணிப்பின் 50வது ஆண்டைக்  குறிக்கும் வகையில்  பொன்விழா கொண்டாடியது. 1974 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த அறக்கட்டளை, தரமான கல்வியை வழங்குவதற்கும் சமூக கூட்டமைப்பை ஊக்குவிப்பதற்கும் பல்வேறு செயல்பாடுகளை கையிலெடுத்து வெற்றி கண்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த பொன்விழா நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான  ராம்நாத் கோவிந்த், துக்ளக் இதழின் ஆசிரியர்  எஸ். குருமூர்த்தி உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
சிறப்பு விருந்தினர்களை வரவேற்று உரையாற்றிய ARET தலைவர் ஹரிஷ் குமார் சங்கி, ராம்நாத் கோவிந்த்  அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி சிறப்பித்தார். பொன்விழா தலைவர் பி.பி. ஜுன்ஜுன்வாலா துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு மரியாதை செய்தார்.
ஏ. ஆர். இ. டி ஒவ்வொரு குழந்தைக்கும், அவர்களது பின்னணியைப்   பொருட்படுத்தாமல், தரமான கற்றலுக்கான வாய்ப்பு  இருப்பதை உறுதி செய்கிறது. அறக்கட்டளையின் நிறுவனங்கள் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும், வெவ்வேறு கற்றல் தேவைகளைக் கொண்ட மாணவர்களை ஆதரிக்கிறது. மேலும் முழுமையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு வளர்ப்பு சூழலை வழங்குகிறது. கடந்த ஐந்து தலைமுறைகளாக மாணவர்கள் கல்வி மற்றும் தனிப்பட்ட முறையில் சிறந்து விளங்கும் ஒரு உள்ளடக்கிய சூழ்நிலையை வளர்ப்பதில் அறக்கட்டளை குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்துள்ளது.
100 மாணவர்களுடன் நிறுவப்பட்ட இந்த அறக்கட்டளை இப்போது அதன் நிறுவனங்களில் 5,500 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வியை வழங்குகிறது. பல்துறை  கற்பித்தல் தொழில்நுட்பங்கள் மற்றும் பாடநெறி வளர்ச்சிக்கு வலுவான முக்கியத்துவம் அளித்து அதிநவீன கற்றல் சூழல்களை வழங்குகிறது. ஏ. ஆர். இ. டி. யின் பள்ளிகள்  தேர்வுகளில் தொடர்ந்து நூறு சதவீத தேர்ச்சியை வழங்கி வருகின்றன.
நிர்வாக அறங்காவலர்  முராரிலால் சோ ந்தாலியா உரையாற்றும் போது, , சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக,  சிறப்புமிக்க பாரம்பரியத்தை தொடர அறக்கட்டளை உறுதியளிப்பதாகக் குறிப்பிட்டார். மேலும்  டி. எஸ். ஏ. வி. யில் ஒரு தொடக்கப் பள்ளியையும், அதிநவீன பள்ளி ஆடிட்டோரியத்தையும் அமைப்பதாக அறக்கட்டளை சார்பில் உறுதியளித்ததோடு,  இந்த பொன்விழா ஆண்டு பல பள்ளிகளுக்கிடையேயான வினாடி வினா, விளையாட்டு மற்றும் பிற போட்டிகளுடன் கொண்டாடப்படும் என்றும் தெரிவித்தார்
தொலைநோக்கு பார்வையின் ஒரு பகுதியாக அறக்கட்டளை மாதவரத்தில் புதிய சிபிஎஸ்இ பள்ளிகளைக் கட்டுவதன் மூலமும், தற்போதுள்ள வசதிகளை மேம்படுத்துவதன் மூலமும், அனைத்து வளாகங்களிலும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் மூலமும் அதன் வரம்பை விரிவுபடுத்துகிறது. அணுகக்கூடிய, உள்ளடக்கிய மற்றும் உயர்தர கல்வியை வழங்குவதில் ஏஆர்இடி அர்ப்பணிப்புடன் உள்ளது, அதே நேரத்தில் பேரழிவு நிவாரண முயற்சிகள் மற்றும் சிஎஸ்ஆர் திட்டங்கள் மூலம் அதன் தொண்டு நடவடிக்கைகளைத் தொடர்கிறது.
கல்வியின் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட சமூகத்தை உருவாக்குவதற்கான தனது பணியை மேலும் மேம்படுத்த அறக்கட்டளை பாடுபட்டு வருவதால், பொன்விழா கொண்டாட்டம் கடந்த 50 ஆண்டுகால சாதனைகள் மற்றும் எதிர்காலத்திற்கான புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியவற்றை குறிக்கும் வகையில் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.
உண்மையான வெற்றி என்பது, நல்ல மனிதராக இருப்பது மட்டுமே; நல்ல மனிதரால் தான் சமமான சமுதாயத்தை உருவாக்க முடியும் -நல்ல மனிதர்களை ஆசிரியர்கள் தான் உருவாக்க முடியும் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேச்சு
நிகழ்ச்சியில் பேசிய அவர்,கல்வி மட்டுமே ஒருவரால் மற்றொருவருக்கு கொடுக்க முடிந்த செல்வம், நான் எனது கிராமத்தில் துவக்க நிலை பள்ளியில் மட்டுமே பயில இயன்றது, ஆனால் அதற்கு மேல் நான் தொடர வேண்டும் என்றால் 6 கிலோ மீட்டர் பயணித்து தான் படிக்க வேண்டும். சுட்டெரிக்கும் வெயிலில் அதனை பொருட்படுத்தாமல் நான் பயணித்து படித்தேன். கல்வி பயிலும் போது நிறைய சவால்களை நான் எதிர்கொள்ள நேர்ந்தது. இன்று இந்த நிலையில் இருப்பதற்கு காரணம் நான் கற்ற கல்வி மட்டுமே.
கல்வியின் முக்கியத்துவம் மிகவும் பெரிது. இந்திய மக்கள் தொகையில் இன்று 24 சதவிகித பேர் 14 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். 50 சதவிகித பேர் 25 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் கையில் தான் நம் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பொறுப்பு உள்ளது. முற்போக்கு சிந்தனை உள்ள இளைஞர்களால் மட்டுமே முற்போக்கு சிந்தனை கொண்ட நாட்டை உருவாக்க முடியும். பொதுவாகவே நம்முடைய கல்வி முறை என்பது மனப்பாடம் செய்வதை தாண்டி, ஏன், எதற்கு என்று கேள்வி எழுப்பக்குடிய மாணவர்களாக உருவாக்க வேண்டியது என்பது நமது ஆசிரியர்களின் பொறுப்பு. அதற்கு மிக முக்கியமானதாக கற்பிப்பதில் புதிய கண்ணோட்டம் மற்றும் மாணவர்களுக்கான எதிர்கால சிந்தனைகள் குறித்த கற்பிப்பு பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுத்திடல் வேண்டும்.
கற்பிப்பதில் நவீன கல்வி முறையான டிஜிட்டல் தொழில் முறையை பயன்படுத்தி, மாணவர்களின் திறனை மேம்படுத்தப்பட்ட ஒரு அனுபவத்தை, ஆசிரியர்கள் கொண்டு சேர்க்க வேண்டும். ஒரு நல்ல பள்ளி கட்டிடமும், வசதி வாய்ப்புகள் நிறைந்த வகுப்பறைகள் மட்டுமே, நல்லதொரு கல்வியை கொடுப்பதற்கான அடையாளம் இல்லை. நல்ல கல்வியை கொடுப்பதற்கு திறன்மிக்க ஆசிரியர்கள் மட்டுமே போதுமானவர்கள். சிறந்த மாணவர்களை உருவாக்குவதே சிறந்த ஆசிரியர்கள் தான்
ஆசிரியர் மட்டுமே மாணவரை நல்ல மனிதராக உருவாக்க முடியும். நல்ல எண்ணங்களுடன் உழைப்பை செலுத்தி மாணவர்கள் நல்ல மனிதர்களாக உருவெடுக்க வேண்டும். நல்ல மனிதரால் மட்டுமே நல்ல அப்பா, அம்மா, நண்பர் மற்றும் நல்ல தொழிலதிபர் என பல பரிமாணங்களில் உருவெடுக்க முடியும்.
எதிர்காலத்தில் மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டியது, எதை கற்க வேண்டும், எதை கற்க கூடாது, எதை கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான். இக்காலத்தில் உலகினுடைய தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு நாடாக இந்தியா இருந்து வருகிறது. மற்ற நாடுகளும் இந்தியாவை எதிர்பார்க்கிறது.
அதன் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் தூணாக நம் மாணவர்கள் இருப்பார்கள் என நம்புகிறேன். வளர்ந்த இந்தியாவை உருவாக்க கூடிய பொறுப்பு இப்போதைய மாணவர்களுக்கு உள்ளது. நிச்சயம் வளர்ந்த இந்தியாவை உருவாக்க நம் மாணவர்கள் பெரும் பங்கு வகிப்பார்கள் என நான் நம்புகிறேன், என் வாழ்த்துகளும் தெரிவிக்கிறேன்.
துக்ளக்  குருமூர்த்தி பேசியது:- தற்போதைய கல்வி நிறுவனங்கள் வேலை தேடுபவர்களை உருவாக்காமல் வேலை கொடுப்பவர்களை உறக்க உருவாக்க வேண்டும். படித்த இளைஞர்கள் பிற நிறுவனங்களிடம் வேலை தேடி செல்லாமல் சுயதொழில் தொடங்க முன்வர வேண்டும்.
ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாணவர்கள் அவர்களின் கால்களை கழுவும் வழிமுறை பல ஆண்டுகளாக நமது நாட்டில் பின்படுத்தப்படுகிறது. இது போன்ற வழிமுறைகளால் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையான உறவு மேலும் இணக்கம் ஆகிறது.  ஆனால் தற்போது வழிமுறைகளை பின்பற்றக் கூடாது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த உலகம் என்பது மனிதர்களுக்கு மட்டுமில்லாமல் அனைத்து ஜீவராசிகளுக்கும்  உரிமையானது என்கிற கொள்கை  இந்தியா அதை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.
 தமிழகத்தில் வட இந்திய சமுதாயத்தினர் பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர் ஆனால் ஒரு சில அரசியல் காரணங்களால் அவர்கள் செய்யும் சேவை மக்களுக்கு தெரிவதில்லை. ஆகையால் இனி வரும் நாட்களில் அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்
நமது கல்வி முறையை ஒரே நாளில் மாற்றி விட முடியாது அதற்கு அரசின் பங்களிப்பு மிகவும் முக்கியம்.  அவர்களை எதிர்பார்க்காமல் கல்வி நிறுவனங்களும் தனித்தனியாக அவர்களை மேம்படுத்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்