சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புதிய கருத்தரிப்பு மையமான ஸ்பிரவுட்டை மாண்புமிகு சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார்!

0
281

சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புதிய கருத்தரிப்பு மையமான ஸ்பிரவுட்டை மாண்புமிகு சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார்!

l  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் – ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ. திருகேசெல்வப்பெருந்தகை சிறப்பு விருந்தினராக் கலந்து கொண்டார்.

 சென்னை, சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் (Saveetha Medical College Hospital – SMCH) இனப்பெருக்க உதவி நுட்பங்களுக்கான (Assisted Reproductive Techniques) புதிய மையமாகிய சவீதா கர்ப்ப புத்துணர்வு மற்றும் கருப்பை சிகிச்சை மையத்தை – ஸ்பிரவுட் (SPROUT) தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மாண்புமிகு மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான திரு. கே. செல்வப்பெருந்தகை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். சவீதா இன்ஸ்டிட்டியூட் ஆஃப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்சஸ் (Saveetha Institute of Medical and Technical Sciences) கல்வி நிறுவனத்தின் நிறுவனர் – வேந்தர் டாக்டர் என்.எம். வீரய்யன் தலைமை வகித்தார். இணை வேந்தர் டாக்டர் தீபக் நல்லசாமி, சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் ஜே. குமுதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ஸ்பிரவுட் மையத் தொடக்கம் குறித்து டாக்டர் வீரய்யன் கூறுகையில், “குடும்பத்தின் தொடர்ச்சி, மக்கள்தொகை சமநிலை, உணர்வு சார்ந்த திருப்தி, உளவியல் நல்வாழ்வு, உயிரியல் மற்றும் மருத்துவ முக்கியத்துவம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக மனித இனத்துக்கு கருவுறுதல் முக்கியமானதாக ஆகிறது. ஆனால் பல்வேறு காரணங்களால் அனைத்து தம்பதிகளும் இயற்கையாகவே பெற்றோராக மாற முடிவதில்லை. ஏறக்குறைய 10-15% தம்பதிகள் ஒரு வருட கூட்டுவாழ்வின் முடிவில் மலட்டுத்தன்மையை அனுபவிப்பத தெரியவருகிறது. அவர்களில் 10% பேருக்கு நவீன மருத்துவத்தின் அடிப்படையான இனப்பெருக்க நுட்பம் சார்ந்த உதவி தேவைப்படுகிறது. பெற்றோரின் கனவுகளை நனவாக்கும் வகையில் கருவுறுதல் சிகிச்சையின் வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஸ்பிரவுட்டை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம்” என்றார்.

ஸ்பிரவுட்டில் வழங்கப்படும் சேவைகள் குறித்து மேலும் அவர் கூறுகையில், “இந்தப் புதிய மையத்தில் கருப்பையக கருவூட்டல் (Intrauterine Insemination), சைரோ பிரிசர்வேஷன் (Cryopreservation), ஐ.சி.எஸ்.ஐ. (ICSI), இன் விட்ரோ ஃபெர்டிலைசேஷன் – செயற்கைக் கருத்தரிப்பு (In vitro-fertilisation – IVF), எம்ப்ரியோ பயாப்சி (Embryo Biopsy), லேசர் உதவி கருத்தரித்தல் (Laser-assisted Hatching), பிரி இம்பிளான்டேஷன் ஜெனிடிக் டயக்னாசிஸ் (Preimplantation Genetic Diagnosis) ஆகிய வசதிகள் உள்ளன. இனப்பெருக்க ஆரோக்கியத்திற்குத் தேவைப்படும் முழுமையான அணுகுமுறையை  நாங்கள் உறுதிசெய்யவுள்ளோம். மதிப்பீடு, பரிசோதனைகள், தலையீடுகள் மட்டுமல்லாமல், முன் சிகிச்சை ஆலோசனைகளையும்  வழங்கவுள்ளோம். ஏனெனில் தம்பதிகள் கடினமான காலங்களைக் கடப்பதற்கு உளவியல் ஆலோசனை தேவைப்படலாம். எங்கள் இனப்பெருக்க உதவி நுட்ப சார்ந்த சேவைகள் தொடர்பான வெளிப்படைத்தன்மை மற்றும் தம்பதியினரின் தகவல்களின் ரகசியத்தன்மையைப் பேணுவதற்கான நெறிமுறைகள் உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்படும்” என்று குறிப்பிட்டார்.

தனியாகச் செயல்படும் இனப்பெருக்க உதவி நுட்பங்களுக்கான மையங்களைவிட ஸ்பிரவுட் அதிக மதிப்பைப் பெறுகிறது. ஏனெனில் இது ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் மகப்பேறியல், மகளிர் நோயியல் மருத்துவத் துறைகளைக் கொண்டுள்ளது. அத்துடன் ஒரே கூரையின் கீழ் உள்ள பிற துறைகளிடம் இருந்து கிடைக்கும் ஆதரவு, நோயாளிகளுக்கான தரமான சேவைகள் கிடைப்பது, விரிவான சுகாதார வசதியைப் பெறுவதை உறுதிசெய்யும். சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் பெண் நோயியல் துறையானது, பெண்களை பராமரிக்கத் தேவைப்படும் அனைத்து மேம்பட்ட வசதிகளுடன் நன்கு நிறுவப்பட்டுள்ளது. இது ஹை டிபெண்டன்சி யூனிட் (High Dependency Unit), ஐ.சி.யு. பேக் அப் (ICU Back-up), 24×7 ரத்தம் ஏற்றும் வசதிகளுடன் கூடிய பிரசவ அறையைக் கொண்டுள்ளது. புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் பால் வங்கி (Milk Bank), ஹை ஃபிரீகுவென்சி வென்ட்டிலேட்டர் (High Frequency Ventilators), முன்கூட்டியே பிறந்த குழந்தைகளுக்கான பராமரிப்பு ஆதாரங்கள் போன்றவை உள்ளன. இலவச மகப்பேறு மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்திற்காக இந்த மருத்துவமனை தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், மரபணு கோளாறுகள், உடற்கூறியல் அசாதாரணங்கள் மற்றும் வயது தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பல காரணிகளால் கருவுறாமை ஏற்படலாம். பாரம்பரிய முறைகள் தோல்வியுற்ற நிலையில் செயற்கை கருத்தரிப்பு (IVF), கருப்பையக கருவூட்டல் (IUl), கேமிட் அல்லது கரு தானம் (Gamete or Embryo Donation) போன்ற இனப்பெருக்க உதவி நுட்பங்கள் கருத்தரிப்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் இலக்கு சார்ந்த தலையீடுகளை வழங்குகின்றன. செயற்கைக் கருத்தரிப்பு என்பது பொதுவாக ‘சோதனை குழாய் குழந்தை’ என்று அழைக்கப்படுகிறது, இது உடலுக்கு வெளியே ஒரு விந்தணுவுடன் ஒரு முட்டையை கருத்தரிக்க வைத்து, பின்னர் கருப்பைக்கு கருவை மாற்றும் நுட்பம். விந்தணுக்களின் தரம் குறைவதால் ஏற்படும் ஆண் மலட்டுத்தன்மை முதல் ஃபலோபியன் குழாய்கள் அடைத்துக் கொள்வதால் ஏற்படும் பெண் மலட்டுத்தன்மை வரை பல்வேறு கருவுறுதல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதில் இந்த நுட்பம் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. தகுந்த தீர்வுகளை வழங்குவதன் மூலம், தனிநபர்கள் – தம்பதிகள் கருத்தரிப்பதற்கான தடைகளை கடக்கவும், கருவுறாமை சார்ந்த உணர்ச்சி சார்ந்த பிரச்சினைகள், உடல் அம்சங்களை நிர்வகிக்கவும் இனப்பெருக்க உதவி நுட்பங்கள் உதவுகின்றன.