கொழும்புவில் நடைபெற்ற அத்லெட்டிக் சாம்பியன்ஷிப்.. வெற்றி பெற்ற வீரர்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து..!

0
231

கொழும்புவில் நடைபெற்ற அத்லெட்டிக் சாம்பியன்ஷிப்.. வெற்றி பெற்ற வீரர்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து..!

கொழும்புவில் இம்மாதம் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெற்ற ‘பத்தாவது மாஸ்டர் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் – ஸ்ரீலங்கா 2024’ எனும் போட்டியில் இந்தியா சார்பில் பங்குபற்றி வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டிற்கான பத்தாவது மாஸ்டர் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டி இலங்கை தலைநகர் கொழும்புவில் மே மாதம் 25 மற்றும் 26 ஆகிய இரண்டு திகதியில் நடைபெற்றது.  இதன் போது இந்தியாவிலிருந்து பங்கு பற்றிய வீரர் எம். செண்பகமூர்த்தி மற்றும் சுரேஷ் காசிநாதன், வீராங்கனைகள் ஜேசு எஸ்தர் ராணி மற்றும் ஆர். பிரமிளா ஆகியோர் பல்வேறு தடகள போட்டிகளில் வெற்றி பெற்றனர்.

இதில் எம். செண்பக மூர்த்தி 100 மீ  ஓட்டப்பந்தயத்தில் இரண்டாமிடத்தையும், 200 மீ ஓட்டப்பந்தயத்தில் மூன்றாமிடத்தையும், கலப்பு தொடர் ஓட்ட போட்டியில் முதலிடத்தையும் பெற்றார்.

மற்றொரு வீரரான சுரேஷ் காசிநாதன் 100 மீ ஓட்டப்பந்தயத்தில் மூன்றாமிடத்தையும், 200 மீ ஓட்டப்பந்தயத்தில் மூன்றாமிடத்தையும், கலப்பு தொடர் ஓட்ட போட்டியில் முதலிடத்தையும் பிடித்தார்.

வீராங்கனை யேசு எஸ்தர் ராணி பெண்களுக்கான 100 மீ ஓட்டப்பந்தயத்தில் மூன்றாமிடத்தையும், 200 மீ ஓட்டப்பந்தயத்தில் மூன்றாமிடத்தையும், நீளத் தாண்டுதலில் மூன்றாமிடத்தையும், கலப்பு தொடர் ஓட்ட போட்டியில் முதலிடத்தையும் வென்றார்.

மற்றொரு வீராங்கனையான ஆர். பிரமிளா நூறு மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாமிடத்தையும் , நீளத் தாண்டுதல் பிரிவில் இரண்டாமிடத்தையும், கலப்பு தொடர் ஓட்ட போட்டியில் முதலிடத்தையும் பிடித்தார்.

இந்த நான்கு வீரர்கள் – வீராங்கனைகள், சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்தை பெற்றனர்.

வெற்றி பெற்ற வீரர்கள் விவரம் :

M Shenbagamoothy

100mts – 2nd place
200mts- 3rd place
Mixed Relay – 1st

Suresh Kasinathan

100- 3rd
200- 3rd
Mixed Relay – 1st

Jesu Esther Rani

100- 3rd
200- 3rd
Long jump 3rd
Mixed Relay 1st

R Pramila

100- 2nd place
Long jump – 2nd place
Mixed Relay – 1st