புகழ்பெற்ற மகளிர் மருத்துவ நிபுணரான Dr. Shobha Giresh Gynaec and Aesthetic Centre சென்னை அண்ணாநகரில் மருத்துவத் துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவமுள்ள மருத்துவர் ஸ்ரீவத்சன் விஜயராகவன் திறந்து வைத்தார்
மருத்துவர் ஷோபா கிரீஷ், MBBS, MS (OG), 15 ஆண்டுகளுக்கும் மேல் மருத்துவ சேவையில் ஈடுபட்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர். ஸ்பந்தனா சர்ஜிகல்ஸ், சென்னை ஹெல்த் ஃபவுண்டேஷன் மற்றும் தேஜா மருத்துவமனை ஆகியவற்றில் ஆலோசகராகப் பணியாற்றும் அவர், பெண்களுக்கான cosmetic Gynaecology திறன் பெற்றவர். அவரை அணுகும் நோயாளிகளுக்கு சிறந்த முறையில் நம்பிக்கையளித்து, இன்முகத்துடன் சிகிச்சை அளிப்பதில் பெயர் பெற்றவர்.
டாக்டர் ஷோபா கிரீஷின் சர்வதேச பங்களிப்புகள், பத்திரிகைகளில் எழுதப்பட்ட கட்டுரைகள், உலக அளவில் மகளிர் மருத்துவப் பராமரிப்பை மேம்படுத்துவதற்கான அவரது அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகின்றன. அந்த வகையில் இந்த புதிய நவீன Dr. Shobha Giresh Gynaec and Aesthetic Centre விரிவான சுகாதார சேவைகளுக்கான களத்தை பயனாளிகளுக்கு வழங்க உள்ளது.

Dr. Shobha Giresh Gynaec and Aesthetic Centre பிளாட் பி, தரை தளம், பிளாட் எண். 1419, ஜமால்ஸ் ஷியாம் விலாஸ், 13வது மெயின் ரோடு, பாரதி காலனி, எச் பிளாக், டெம்பிள் வியூ காலனி, அண்ணாநகர், சென்னை என்ற இடத்தில் வசதியாக அமைந்துள்ளது. பிரீமியம் ஹெல்த்கேர் மற்றும் அழகியல் தீர்வுகளைத் தேடும் அனைவரையும் இந்த மையம் அன்புடன் வரவேற்கிறது.