மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்பட விமர்சனம் : மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி நவீன யுக நகைச்சுவை கலந்த கலர்ஃபுல் காதல் கலாட்டா ​| ரேட்டிங்: 3.5/5

0
369

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்பட விமர்சனம் : மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி நவீன யுக நகைச்சுவை கலந்த கலர்ஃபுல் காதல் கலாட்டா | ரேட்டிங்: 3.5/5

வி.வம்சி கிருஷ்ணா, பிரமோத் தயாரித்திருக்கும் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மகேஷ் பாபு பச்சிகொல்லா.

இதில் அனுஷ்கா ஷெட்டி, நவீன் பாலி ஷெட்டி, முரளி ஷர்மா, அபினவ் கோமதம், நாசர், சோனியா தீப்தி, ஜெயசுதா, துளசி, பத்ரம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:-இசையமைப்பாளர்: ரதன், ஒளிப்பதிவாளர்: நீரவ் ஷா,எடிட்டிங் : கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ், மக்கள் தொடர்பு – யுவராஜ்.

இங்கிலாந்து ஹோட்டலில் மாஸ்டர் செஃப்; அன்விதா ரவாலி ஷெட்டி (அனுஷ்கா ஷெட்டி) தன் தாயுடன் வசிக்கிறார். சிறு வயதிலிருந்தே தாயின் அரவணைப்பில் வளர்ந்ததால் அவர் பட்ட துன்பத்தைப் பார்த்து காதல், திருமணம் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார். திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தும் தாயின் பேச்சை கேட்காமல் இருக்கிறார். அதன் பின் புற்றுநோய் பாதிப்பில் தாய் இறக்க தனிமையை உணர்கிறார். வாழ்க்கையில் தனிமையில் இருக்க முடியாமல் அன்வி தோழமைக்கு ஒரு குழந்தையைப் பெற முடிவு செய்கிறார்.இங்கிலாந்தில் பரவலாக காணப்படும் திருமணம் செய்யாமல் விந்து தானம் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்கிறார். அதனால் இந்தியாவிற்கு வரும் அன்விதா ஐயூஐ (விந்து தானம் செய்பவர்) மூலம் அதைச் செய்ய விரும்புகிறார். தனக்கு பிடித்த மாதிரி விந்து தானம் செய்பவர் இருக்க வேண்டும் என்று பல வழிகளில் தேடுகிறார். பட்டதாரியும் ஸ்டாண்ட் அப் காமெடியன் சித்து பாலா ஷெட்டியை (நவீன் பாலி ஷெட்டி) கண்டுபிடிக்கிறார். சித்துவிடம் நட்பை வளர்த்து அவருடைய குணாதியங்கள் பழக்க வழக்கங்கள் பற்றி தெரிந்து கொள்கிறார்.சித்து அன்விதாவின் நோக்கங்களை அறியாமல் வயது வித்தியாசம் கூட பார்க்காமல் உண்மையாக காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். இந்நிலையில் அன்விதாவின் உண்மையான நோக்கம் தெரிந்து அதிர்ச்சியாகிறார். பின்னர் அன்விதாவிடம் இருந்து பிரிந்து செல்கிறார். ஒரு கட்டத்தில் சித்து அன்விதாவை மறக்க முடியாமல் தவிக்கிறார். அதன் பின் சித்து எடுக்கும் முடிவு என்ன? அன்விதாவிடம் விந்து தானம் செய்ய ஒப்புக் கொண்டாரா? சித்துவின் காதல் என்னவானது? அன்விதா தன் பிடிவாதத்தை விட்டுக் கொடுத்தாரா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

அனுஷ்கா ஷெட்டி அன்விதாவாக சமையல் வல்லுநராக பிடித்த மாதிரி வாழ்க்கை வாழும் மாடர்ன் பெண்ணாக வலம் வருகிறார். தன் தாயின் ஆசையை நிறைவேற்ற எடுக்கும் முடிவு வித்தியாசமான கோணத்தில் அணுகி அதை நிறைவேற்ற எடுக்கும் மெனக்கடல் அதனால் ஏற்படும் சங்கடங்கள், சந்தோஷ தருணங்கள் ஆகியவற்றை கண் முன்னே நிறுத்தி அழகுடன் அழுத்தமான நடிப்புடன்; சிறப்பாக செய்து அசத்தியுள்ளார்.

நவீன் பாலி ஷெட்டி சித்துவாக ஸ்டாண்ட் அப் காமெடி படம் முழுவதும் செய்து கலகலக்க வைத்துள்ளார். ஒரு கதாநாயகன் படம் முழுவதும் ஸ்டாண்ட் அப் காமெடியனாக நடித்திருக்கும் முதல் ஹீரோவும் இவர் தான். நகைச்சுவை வசனங்கள், பெற்றோரிடம் செய்யும்; குறும்புகள், அன்விதாவிடம் காதல், அது வேற மாதிரி பரிசோதனை என்ற தெரியாமல் செய்யும் அலப்பறைகள், பின் காதலியை தேடும் பயணம் என்று படம் முழுவதும் தன்னுடைய ஈர்க்கக்கூடிய பேச்சாற்றல் மூலம் அனைவரையும் தன் வசப்படுத்திவிடுகிறார் நவீன்.

முரளி ஷர்மா, அபினவ் கோமதம், நாசர், சோனியா தீப்தி, ஜெயசுதா, துளசி, பத்ரம் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர்: ரதன் படத்திற்கு அளவான இசை கொடுத்துள்ளார், ஒளிப்பதிவாளர்: நீரவ் ஷா அழகான ஷாட்கள் வாவ் போட வைக்கின்றன,எடிட்டிங் : கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் கச்சிதம்.

கதைக்கேற்ற படத்தலைப்பு அம்சமாக பொருந்துகிறது. வயது, காதல் திருமண பந்தம் ஏதுவும் பார்க்காமல் குழந்தை பெற்றெடுக்கும் புதிய பாணியை இந்தப்படத்தில் புகுத்தி அதில் நகைச்சுவை கலந்து சுவாரஸ்யமாக இயக்கியிருக்கிறார் மகேஷ் பாபு பச்சிகொல்லா. ஜாக்கிரதையாக திரைக்கதையை கையாண்டு கச்சிதமாக கொடுத்து அனைவரும் ரசிக்கும் வண்ணம் விரசம் இல்லாமல் இயக்கியிருப்பதில் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார் இ;யக்குனர் மகேஷ் பாபு பச்சிகொல்லா.

மொத்தத்தில் வி.வம்சி கிருஷ்ணா, பிரமோத் தயாரித்திருக்கும் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி நவீன யுக நகைச்சுவை கலந்த கலர்ஃபுல் காதல் கலாட்டா.