டிக்கிலோனா விமர்சனம்

0
122

டிக்கிலோனா விமர்சனம்

கே.ஜே.ஆர் ஸ்டியோஸ், சோல்ஜர்ஸ் பாக்டரி சார்பில் கொட்டப்பாடி ஜே. ராஜேஷ் மற்றும் கே.எஸ். சினிஷ் தயாரிப்பில் வந்திருக்கும் படம் டிக்கிலோனா.
இதில் சந்தானம்,  அனகா, ஷ்ரின் கான்ச்வாலா, ஹர்பஜன் சிங், அருண் அலெக்சாண்டர், மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி, ஆனந்த்ராஜ், மூனீஷ்காந்த், ஷாரா, சித்ரா லட்சுமணன், பிரசாந்த் ஆகியோர் நடிக்க எழுதி இயக்கியிருக்கிறார்  கார்த்தி யோகி.
தொழில் நுட்ப கலைஞர்;கள்:- ஒளிப்பதிவாளர்-அர்வி, இசை-யுவன் சங்கர் ராஜா, ஆர்ட்- ராஜேஷ் ஆரோக்கயஸ்வாமி, எடிட்டர்-ஜோமின், ஸ்டண்ட்-தினேஷ்சுப்ராயன், உடை-கீர்த்திவாசன், நடனம்-ஷெரிஃப், பாடல்கள்-கவிஞர்; வாலி, அருண்ராஜா, காமராஜ், கார்த்திக், சரவெடி சரண், தயாரிப்பு மேற்பார்வையாளர்-டி.முருகேசன், கதை-பாரதி, பிஆர்ஒ-யுவராஜ்.

காதல் திருமணம் செய்து கொள்ளும் சந்தானம், மனைவி மற்றும் மாமனார் இம்சை தாங்க முடியாமல் தவிக்கிறார். தன்னுடைய வாழ்நாள் ஆசையான ஹாக்கி வீரராக ஆக முடியாமல், லைன்மேனாக மின்சார வாரியத்தில் பணி புரிகிறார். மின்சாரம் சரி செய்வதற்காக மனநல காப்பகத்திற்கு செல்ல, அங்கே டைம் டிராவல் மெஷினை காண்கிறார். அதை இயக்கும் விஞ்ஞானிகள் உதவியுடன் கடந்த காலத்திற்கு சென்று திருமணத்தை நிறுத்த முடிவு செய்கிறார். அவ்வாறு தான் நினைத்ததை முடித்தாரா? கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு வந்து சேர்ந்தாரா? மனiவியின் அருமையை புரிந்து கொண்டாரா? என்பதே மீதிக்கதை.

இதில் சந்தானம் தனக்கே உரித்தான நக்கல், நய்யாண்டியுடன் அக்மார்க் முத்திரை பதித்து திறம்பட நடித்திருக்கிறார். இவருடன் அனகா, ஷ்ரின் கான்ச்வாலா ஆகியோர் ஜோடிகளாக களமிறங்கி பயணித்துள்ளனர்.

இவர்களுடன் அருண் அலெக்சாண்டர், மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி, ஆனந்த்ராஜ், மூனீஷ்காந்த், ஷாரா, சித்ரா லட்சுமணன் என அனைவரும் கொடுக்கப்பட்ட பங்கை சரிவர செய்திருக்கிறார்கள்.  படத்துக்கு துளியும் சம்பந்தம் இல்லாத ஹர்பஜன் சிங் சிறப்பு தோற்றத்தில் வந்து போகிறார்.

அர்வியின் ஒளிப்பதிவும், யுவன் சங்கர் ராஜாவின் இசையும் படத்திற்கு கை கொடுத்துள்ளது.

எழுத்து இயக்கம்-கார்த்திக் யோகி. டைம் டிராவல் மிஷினில் தன் வாழ்க்கையை மாற்ற நினைக்கும் இளைஞன், மாறினால் ஏற்படும் இன்னல்களையும், மாற்றமில்லாத வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை உணர்ந்து வாழத் தொடங்குகிறான் என்பதை காமெடியோடு விஞ்ஞான ஆராய்ச்சி கலந்து கலகலப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் யோகி.

மொத்தத்தில் டிக்கிலோனா அனைவரும் பார்த்து ரசிக்கலாம்.