ஷங்கர் – ராம் சரண் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பூஜையுடன்  துவக்கம்

0
189

ஷங்கர் – ராம் சரண் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பூஜையுடன்  துவக்கம்

இயக்குநர் ஷங்கர் – ராம் சரண் இணையும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இன்று பூஜையுடன் தொடங்கியது.

’இந்தியன் 2’படப்பிடிப்பு சர்ச்சையில் இருப்பதால் இயக்குநர் ஷங்கர் ‘ராம் சரண் 15’ படத்தை சமீபத்தில் அறிவித்தார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.

ஜானி மாஸ்டர் கொரியோகிராஃபி செய்கிறார். தமன் இசையமைக்கிறார். ராம் சரண் இரட்டை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு நாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இன்று ‘ராம் சரண் 15’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது.

பூஜையில், இயக்குநர் ராஜமெளலி, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நடிகை கியாரா அத்வானி, தயாரிப்பாளர் தில் ராஜு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அந்தப் புகைப்ப்டங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

பூஜை என்னவோ ஷங்கர் படத்திற்குதான். ஆனால், புஜை புகைப்படங்களையே மிஞ்சும் அளவுக்கு நடிகர் ரன்வீர் சிங்கின் ஹேர் ஸ்டைல்தான் ஒட்டுமொத்தமாக அனைவரையும் ஈர்ப்பதாக இணையவாசிகள் கூறுகின்றனர்.

ரன்வீர் கபூர் ‘அந்நியன்’ படத்தின் ரீமேக்கில் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.