ஆஸ்திரேலியா, மண்டல சிவில் கடல்சார் பாதுகாப்பில் தனது அர்ப்பணிப்பை உறுதி செய்யும் வகையில்  நடவடிக்கைகளை மேம்படுத்துகிறது!

0
235

ஆஸ்திரேலியா, மண்டல சிவில் கடல்சார் பாதுகாப்பில் தனது அர்ப்பணிப்பை உறுதி செய்யும் வகையில்  நடவடிக்கைகளை மேம்படுத்துகிறது!

 சென்னை, சிவில் கடல்சார் பாதுகாப்பிற்கான ஆஸ்திரேலியாவின் உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தி இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் கடல் எல்லைக் கட்டளை கமாண்டர்/கமாண்டர் ஜாயின்ட் ஏஜென்சி டாஸ்க் ஃபோர்ஸ் (Commander Maritime Border Command/Commander Joint Agency Task Force (COMMBC/CJATF),), இறையாண்மை செயல் எல்லைப் பிரிவு அதிகாரி (Operation Sovereign Borders), ராயல் ஆஸ்திரேலியன் நேவி (RAN) ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ்-சின் (Justin Jones) இந்திய வருகையின் மூலம் ஆஸ்திரேலியாவின் கடல்சார் பாதுகாப்பு உறுதிப்பாடு மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 இந்த பயணத்தின் போது, அக்டோபர் 14 முதல் 20 வரை, ரியர் அட்மிரல் ஜோன்ஸ் [Rear Admiral Jones], டெல்லியில் நடந்த ஆசிய கடலோர காவல்படை அமைப்புகளின் தலைவர்கள் கூட்டத்தில் (HACGAM) பங்கேற்றார். சிவில் கடல்சார் பாதுகாப்பில் இந்த மண்டலத்தில் உள்ள நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவின் உத்தி சார் கூட்டு நாடுகளுடனான பிரதிநிதிகளுடனான சந்திப்புகள் இத்தகைய உறவுகளின் வலிமையையும், தொடர்ந்து பேச்சு நடத்துதல் மற்றும் தகவல் பகிர்வுக்கான திறனையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தன.

“ஆசிய கடலோர காவல்படை அமைப்புகளின் தலைவர்கள் கூட்டத்தின் மூலமாக (HACGAM), ஆஸ்திரேலியா, ஆசிய பிராந்தியத்தில் உள்ள அனைத்து முக்கிய கடலோர காவல் முகமைகளுடன் நீண்டகால உறவுகளை ஏற்படுத்தி அதை வலுப்படுத்தவும் சிவில் கடல்சார் பாதுகாப்பு விஷயங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது” என்று ரியர் அட்மிரல் ஜோன்ஸ் கூறினார்.

“சட்டபூர்வமான வர்த்தகம் மற்றும் பயணத்தை எளிதாக்குவதற்கும், கடல்சார் குற்றங்களைத் தடுப்பதில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் உதவும் வகையிலான நல்லுறவுகளை ஆஸ்திரேலியா எவ்வாறு மதிக்கிறது என்பதை இந்த பயணம் எடுத்துக்காட்டுகிறது.” என்று அவர் தெரிவித்தார்.

“கடலில் நடைபெறும் குற்றங்களை எதிர்த்துப் போராடி அவற்றைத் தடுப்பதற்கு இந்த மண்டலத்தில் உள்ள அனைத்து கூட்டு செயல்பாட்டு நாடுகளுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கு ஆஸ்திரேலியா உறுதிபூண்டுள்ளது. ஆள் கடத்தல் மூலமாக பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பற்றியும் அவர்களது வாழ்க்கை மற்றும் அவர்களது நலனிலும் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு, எந்த அக்கறையும் இல்லை. இது போன்ற குற்றங்களைத் தடுப்பதில் ஆஸ்திரேலியா அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது” என்றும் அவர் கூறினார்.

ஆஸ்திரேலியா சமீபகாலமாக சிவில் கடல்சார் பாதுகாப்பில் இலங்கையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கடல்வழி ஆட்கள் கடத்தல் (மனிதக் கடத்தல்) முயற்சிகளைத் தடுக்க இலங்கை கடற்படை அயராது உழைத்ததால் கடத்தல் மூலமாக ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்ற 183 பேரை ஆஸ்திரேலியா பாதுகாப்பாக திருப்பி அனுப்பியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் அரசு அண்மையில் மாறியிருந்தாலும், ஆள் மற்றும் மக்கள் கடத்தலுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் வலுவான கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை.

“ஆஸ்திரேலியாவை சட்ட விரோதமாக கடல்வழியாக அடைய விரும்பும் கப்பல்களை நாங்கள் தடுத்து நிறுத்துகிறோம். மேலும் கப்பலில் உள்ளவர்களை அவர்கள் புறப்படும் இடம் அல்லது சொந்த நாட்டிற்குப் பாதுகாப்பாக திருப்பி அனுப்புகிறோம். தேவைப்பட்டால், அவர்களை மண்டல செயலாக்க நாட்டிற்கு அனுப்பி வைப்போம்” என்று ரியர் அட்மிரல் ஜோன்ஸ் கூறினார்.

“சமீபத்தில் கேரளாவில் இருந்து படகு மூலமாகச் சட்டவிரோதமாக இடம்பெயர முயன்ற பலர் கைது செய்யப்பட்டதை நாங்கள் அறிவோம். நபர்களை கடத்தும் குற்றவியல் வர்த்தகத்தை தடுப்பதற்கான மிக முக்கிய நடவடிக்கையை எடுத்ததற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நான் பாராட்டுகிறேன்.” என்றும் அவர் தெரிவித்தார்.

“இந்த மண்டலம் எதிர்கொள்ளும் இந்த வகையான கடல்சார் பாதுகாப்பு சவால்களில் எங்கள் நட்பு நாடுகளுடன் ஆழமான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதில் நான் உறுதியுடன் இருக்கிறேன்.” என்று ஆஸ்திரேலிய ராயல் நேவியின் ரியர் அட்மிரல் ஜோன்ஸ் கூறினார்.

ALSO READ: