36 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பையை வென்று அர்ஜெண்டினா சாதனை! அர்ஜென்டினாவுக்காக தொடர்ந்து விளையாடுவேன் லியோனல் மெஸ்சி!!
அர்ஜென்டினா அணி 3வது முறையாக நேற்று (டிசம்பர் 18) கால்பந்து உலககோப்பையை 4 கோல் அடித்து வென்றது. சுமார் 36 ஆண்டுகளுக்குப்பிறகு மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது
22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் கடந்த மாதம் 20-ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றுடன் நடையை கட்டியது.
எதிர்பார்க்கப்பட்ட ‘நம்பர் ஒன்’ அணியும், 5 முறை சாம்பியனுமான பிரேசில், கால்இறுதியில் குரேஷியாவிடம் மண்ணை கவ்வியது. லீக், நாக்-அவுட் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜெண்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் – அர்ஜெண்டினா அணிகள் இன்றிரவு கத்தாரின் லுசைல் ஐகானிக் மைதானத்தில் மல்லுகட்டுகின்றன.
இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் இந்த இறுதி யுத்தத்தில் யார் வெற்றி பெற்றாலும் அது அவர்கள் வெல்லும் 3-வது உலகக் கோப்பையாக அமையும். தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அர்ஜென்டினா அணி தொடக்க லீக்கில் சவுதி அரேபியாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தாலும், அதன்பின்னர் சுதாரித்துக் கொண்டு அசுரவேக எழுச்சியோடு வீறுநடை போடுகிறது.லீக் சுற்றில் மெக்சிகோ, போலந்து அணியுடனான அடுத்தடுத்த ஆட்டத்தில் எதிரணியை கோல் அடிக்க விடாமல் வீழ்த்தி பட்டியலில் முதலிடம் பிடித்து நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்தது அர்ஜெண்டினா.
நாக் அவுட் சுற்றில் ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்த அர்ஜெண்டினா, காலிறுதியிலும் அதே கர்ஜனையை தொடர்ந்தது. பலம் வாய்ந்த நெதர்லாந்து அணியை காலிறுதியில் எதிர்கொண்ட அர்ஜெண்டினா, பெனால்டி ஷூ அவுட் முறையில் வெற்றி கண்டு 6வது முறையாக அரையிறுதிபோட்டிக்குள் அடியெடுத்து வைத்தது.
உலகக்கோப்பை அரையிறுதியில் தோல்வியையே சந்திக்காத அணி என்ற வரலாற்றை தொடர குரேஷியாவுடன் மல்லுக்கட்டியது அர்ஜெண்டினா. மெஸ்ஸியின் மாயாஜாலம் அரையிறுதியில் கைகொடுக்க எதிரணியை கோல் அடிக்க விடாமல், 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்ட அர்ஜெண்டினா, 6வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து சாதனை படைத்தது.
மறுபுறம், நடப்பு சாம்பியன் என்ற கம்பீரத்துடன் அர்ஜெண்டினாவை மிரட்ட காத்திருக்கிறது பிரான்ஸ். மீண்டும் மகுடம் சூடும் முனைப்பில் களமிறங்கிய பிரான்ஸ் அணியில் பென்சமா, போக்பா போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாதது பின்னடைவாக பார்க்கப்பட்டாலும், நான் இருக்கிறேன் என அணியின் நம்பிக்கையை மும்மடங்கு உயர்த்தினார் இளம் நாயகன் எம்பாப்பே. ஆஸ்திரேலியா, டென்மார்க் அணிகளை வீழ்த்தி முதல் அணியாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது பிரான்ஸ் அணிக்கு கூடுதல் உத்வேகத்தை கொடுத்தது. போலந்து அணிக்கு எதிரான நாக் அவுட் சுற்றில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ், காலிறுதியில் பலம் வாய்ந்த இங்கிலாந்தை 2-1 என வீழ்த்தி 7வது முறையாக அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. அரையிறுதியில் ஆப்ரிக்க நாடான மொராக்கோவை 2-0 என எளிதாக சாய்த்த பிரான்ஸ் அணி 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில், 4 கோல் அடித்து அர்ஜெண்டினா வெற்றி பெற்றுள்ளது. சுமார் 36 ஆண்டுகளுக்குப்பிறகு மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது.
போட்டி நடைபெற்ற 23வது நிமிடத்தில் மெஸ்ஸி கோல் அடித்தார். அதனை அடுத்து 36-வது நிமிடத்தில் டிமரியா கோல் அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் 2-0 என அர்ஜென்டினா அணி முன்னிலையில் இருந்த நிலையில், அடுத்து நடைபெற்ற ஆட்டத்தின் இறுதி சில நிமிடங்களில் அடுத்தடுத்து 2 கோள்களை அடித்து பிரான்ஸ் அணியினர் அதிர்ச்சி கொடுத்தது.
90 நிமிட ஆட்ட நேர முடிவில் இரண்டு அணிகளும் 2-2 கோல் கணக்கில் சம நிலையில் இருந்ததை அடுத்து, போட்டி கூடுதல் நேர ஆட்டத்திற்கு சென்றது. அதில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த நிலையில், போட்டி பெனால்டி கிக் முறைக்கு சென்றது. இதில் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா அணி வென்றது.
அர்ஜென்டினாவுக்காக தொடர்ந்து விளையாடுவேன்: லியோனல் மெஸ்சி
வெற்றிக்குப்பின்ற அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்சி கூறியதாவது: உலகக் கோப்பையை வெல்வதை தனது வாழ்நாள் லட்சியமாக கருதினேன். உலகக்கோப்பையை வென்றது மகிழ்ச்சியளிக்கிறது. தனது நாட்டிற்காக தொடர்ந்து விளையாடுவேன். இன்னும் சில போட்டிகளை அனுபவிக்க விரும்புகிறேன்.