த்ரீ எக்ஸ் த்ரீ எனப்படும் அணிக்கு மூன்று பேர் வீதம் விளையாடும் கூடைப் பந்தாட்டத்தின் தேசிய சாம்பியன்ஷிப் சென்னையில் தொடங்கியது – தமிழ்நாடு ஆடவர் அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது

0
181
த்ரீ எக்ஸ் த்ரீ எனப்படும் அணிக்கு மூன்று பேர் வீதம் விளையாடும் கூடைப் பந்தாட்டத்தின் தேசிய சாம்பியன்ஷிப் சென்னையில் தொடங்கியது – தமிழ்நாடு ஆடவர் அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது
 தமிழ்நாடு கூடைப்பந்து சம்மேளனம் ஆதரவில் இந்திய கூடைப்பந்து சம்மேளனம் நடத்தும் இப்போட்டியில் ஆடவர் பிரிவில் 30 மாநில அணிகளும் மகளிர் பிரிவில் 26 மாநில அணிகளும் பங்கேற்றுள்ளன.
லீக் மற்றும் நாக்கவுட் அடிப்படையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் மின்னொளியில் போட்டிகள் நடைபெறுகின்றன. இன்று  நடைபெற்ற முதல் சுற்றில் 72 போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு அணி உத்தரகாண்ட் அணியை 21க்கு 9 என்ற புள்ளிக் கணக்கில் எளிதாக வென்றது. மணிப்பூர் அணியை தெலங்கானா அணி  21 க்கு 5 என்கிற கணக்கிலும், பீஹார் அணியை கேரளா அணி 21க்கு 3 என்கிற கணக்கிலும் வென்றன. அதேபோல் நாகாலாந்து அணியை கர்நாடக அணி 22 க்கு 8 என்கிற கணக்கிலும், அந்தமான் நிகோபார் அணியை தெலங்கானா அணி 22 க்கு 7 என்கிற புள்ளி கணக்கிலும் வெற்றி கொண்டன. மகளிர்  பிரிவில் தமிழநாடு பீகார் அணியை 21க்கு 3 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்தது. தெலங்கானா அணி, மத்திய பிரதேச அணியை 19க்கு 13 என்கிற கணக்கிலும், டெல்லி அணி கர்நாடக அணியை 18 க்கு 10 என்கிற கணக்கிலும், பாண்டிச்சேரி அணி ஆந்திரா அணியை 12 க்கு 9 என்கிற புள்ளி கணக்கிலும் லீக் சுற்றில் தோற்கடித்தன.
இரண்டாவது சுற்றில் தமிழ்நாடு ஆடவர் அணியும், பீகார் ஆடவர் அணியும் மோதின ஆட்டத்தின் முடிவில் 21-13 என்கிற புள்ளி கணக்கில் பீகார் அணியை தமிழ்நாடு ஆடவர் அணி வீழ்த்தியது இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மகளிர் அணிக்கும் குஜராத் மகளிர் அணிக்கும் போட்டி நடைபெற்றது இதில் தமிழ்நாடு மகளிர் அணி 19 புள்ளிகள் பெற்றது ஆனால் குஜராத் அணியோ 14 புள்ளிகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவியது .
தமிழ்நாடு ஆண்கள் அணி இரவு நடைபெற்ற 3வது லீக் போட்டியில்    21-15 என்ற புள்ளிக் கணக்கில்  கேரளா அணியை வீழ்த்தி, முதலாவது அணியாக காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.