தென்னிந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் கௌரவத் தலைவராக சினேகா நாயர் தேர்வு

0
204

தென்னிந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் கௌரவத் தலைவராக சினேகா நாயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இந்திய பள்ளிகள் கிரிக்கெட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் சுனில்குமார் அறிவிப்பு

இந்திய பள்ளிகள் கிரிக்கெட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர் சுனில் குமார் கூறுகையில்
S.C.F.I உடன் இணைந்த தென்னிந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் கெளரவத் தலைவராக சினேகா நாயரை ஒருமனதாக கமிட்டியால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

கௌரவத் தலைவராக சினேகா நாயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது அவரது ஆற்றலுக்கான அங்கீகாரம் மட்டுமல்லாமல் பல்வேறு நபர்களின் போட்டிகளுக்கு இடையே அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் இது அவரது திறமைக்கு கிடைத்த பொறுப்பாகும் என கூறினார்.மேலும் தமிழ்நாடு மாநிலத்திற்கும் இவரது தேர்வு பெருமை சேர்க்கும் விஷயமாகும். எனவே தமிழகம் முழுவதிலும் இருந்து மகத்தான பாராட்டுக்களையும் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.

தென்னிந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் கெளரவத் தலைவராக திருமதி சினேகா நாயரின் பதவியேற்பு விழா ஜூன் 26, 2022 அன்று சென்னை ஐடிசி கிராண்ட் சோழாவில் நடைபெற உள்ளதாகவும் இந்நிகழ்ச்சியில் பிரபல அரசியல்வாதிகள், மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர் எனக் கூறினார்