டாடா ஸ்டீல் செஸ் இந்தியா 4வது பதிப்பு பெண்கள் போட்டியை அறிமுகப்படுத்துகிறது

0
221

டாடா ஸ்டீல் செஸ் இந்தியா 4வது பதிப்பு பெண்கள் போட்டியை அறிமுகப்படுத்துகிறது

நவம்பர் 29 முதல் டிசம்பர் 4, 2022 வரை கொல்கத்தாவில் நிகழ்ச்சியை நடத்த உள்ளது

சென்னை, டாடா ஸ்டீல் செஸ் இந்தியாவின் 4வது பதிப்பு, பெண்கள் போட்டியின் அறிமுகத்துடன் இன்று அறிவிக்கப்பட்டது. இந்த திறந்தவெளி போட்டியானது இப்போது மூன்று பதிப்புகளாக உள்ளது. மேலும் அதன் நான்காவது பதிப்பில், டிஎஸ்சிஐ பெண்கள் போட்டி அதே வடிவத்தில் -ரேபிட் மற்றும் பிளிட்ஸ் கொண்டிருக்கும். இந்த போட்டி நவம்பர் 29 முதல் டிசம்பர் 4, 2022 வரை கொல்கத்தாவில் நடைபெறும்.

சிறந்த சர்வதேச கிராண்ட்மாஸ்டர்கள், சிறந்த இந்திய ஆண் மற்றும் பெண் கிராண்ட்மாஸ்டர்கள், இளம் இந்திய திறமையாளர்கள் மற்றும் போட்டியின் தூதர் மற்றும் ஆலோசகர் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் இந்த ஆண்டு போட்டியை மேம்படுத்துவார்கள். விளையாட்டு வரலாற்றில் முதன்முறையாக, ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவின் பரிசு நிதி சமமாக இருக்கும்.

உக்ரைனை சேர்ந்த அன்னா மற்றும் மரியா முஸிசுக், ஜார்ஜியாவை சேர்ந்த நானா ஜாக்னிட்ஸே மற்றும் போலந்தை சேர்ந்த அலினா காஷ்லின்ஸ்கயா ஆகியோர் பங்கேற்பதை ஏற்கனவே உறுதிப்படுத்திய மகளிர் கிராண்ட்மாஸ்டர்கள் ஆவர். இந்திய செஸ் சூப்பர் ஸ்டார்களான கோனேரு ஹம்பி மற்றும் ஹரிகா துரோணவல்லி ஆகியோருடன் வளர்ந்து வரும் நட்சத்திரம் வைஷாலி ஆர் -ஆகியோர் சென்னையில் சமீபத்தில் முடிவடைந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலம் வென்ற அணியில் இடம் பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் டாடா ஸ்டீல் செஸ் இந்தியாவின் தூதர் திரு. விஸ்வநாதன் ஆனந்த் பேசுகையில், இன்று செஸ் ஒரு முக்கிய விளையாட்டாக கருதப்படுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். டாடா ஸ்டீல் செஸ் இந்தியா போன்ற போட்டிகள் மூலம் நமது இளம் வீரர்கள் சர்வதேச கிராண்ட்மாஸ்டர்களுடன் போட்டியிடுவது உண்மையில் புதிய சாம்பியன்களை உருவாக்குவதற்கு உதவுகிறது. இன்று, இந்தியா செஸ் பவர் ஹவுஸாக கருதப்படுகிறது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் விளையாட்டில் சிறந்து விளங்குகிறார்கள். ஆண்கள் பிரிவிற்கு சமமான பரிசு தொகையுடன் பெண்கள் போட்டியை அறிமுகப்படுத்தியது வரவேற்கத்தக்க நடவடிக்கை மற்றும் ஒரு சிறந்த முன்முயற்சியாகும். மேலும் இது செஸ் ஆர்வலர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று நாங்கள் நம்புகிறோம். செஸ் சமமான விளையாட்டாக இருக்க வேண்டும்..”

நிகழ்ச்சியில் பேசிய டாடா ஸ்டீல் கார்ப்பரேட் சர்வீசஸ் துணை தலைவர் சாணக்யா சௌத்ரி கூறுகையில், இந்த ஆண்டு டாடா ஸ்டீல் செஸ் இந்தியாவில் பெண்கள் போட்டி தொடர் தொடங்கப்படவுள்ளது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஃபிடேயின்இயர் ஆஃப் தி உமன் இன் செஸ்என்பதை விட இதை தொடங்க சிறந்த ஆண்டு எதுவாக இருக்கும். இந்த நிகழ்வின் மூலம் இளம் இந்திய திறமையாளர்கள் சிறந்த சர்வதேச கிராண்ட்மாஸ்டர்களுக்கு எதிராக விளையாட வாய்ப்பு கிடைக்கும். டாடா ஸ்டீல் செஸ் இந்தியா என்பது டாடா ஸ்டீல் இன் தொடர்ச்சியான மற்றும் நனவான முயற்சியின் ஒரு பகுதியாகும், அதே நேரத்தில் அர்த்தமுள்ள செயல்பாடுகள் மூலம் சமூகங்களுடன் இணைந்து சமமான மற்றும் மாறுபட்ட சூழலை உருவாக்குகிறது. கடந்த ஆண்டுகளில் நாங்கள் பெற்ற உற்சாகம் மற்றும் பங்கேற்பால் நாங்கள் ஊக்குவிக்கப்படுகிறோம், மேலும் இந்த உலகத் தரம் வாய்ந்த செஸ் போட்டியை இன்னும் சிறப்பாக நடத்துவதில் உறுதியாக இருக்கிறோம்.

டாடா ஸ்டீல் செஸ் இந்தியாவில் பெண்கள் பிரிவில் அறிமுகமானதற்கு திருமதி. டானியா சச்தேவ் மகிழ்ச்சி தெரிவித்தார். டாடா ஸ்டீல் செஸ் இந்தியா மூலம் பரிசுத் தொகையில் சமத்துவத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், விளையாட்டை ஒரு தொழிலாக கொள்ள அதிக பெண்களை ஊக்குவிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

ஏஐசிஎஃப் கௌரவ செயலாளர் திரு. பாரத் சிங் சவுகான் கூறுகையில், “செஸ் போட்டியை ஊக்குவிப்பதற்காக ஒரு தேசிய அமைப்பாக உள்ள நாங்கள், நாட்டு மக்களிடம் இருந்து இந்த விளையாட்டின் மீதான மறுமலர்ச்சி மற்றும் புதிய ஆர்வத்தை காண்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். சமீபத்தில் நடந்து முடிந்த செஸ் ஒலிம்பியாட், இந்தியாவில் செஸ் மீதான முக்கியத்துவம் அதிகரித்து வருவதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். கடந்த சில ஆண்டுகளாக, டாடா ஸ்டீல் செஸ் இந்தியா இந்த விளையாட்டை பிரபலப்படுத்தவும், செஸ் போட்டியை நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு செல்லவும் உதவுகிறது. மேலும் இந்த ஆண்டு பெண்களுக்கான போட்டிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. 

சில ஆண்டுகளுக்கு முன்பு, டாடா ஸ்டீலின் ஆதரவுடன் இந்தியாவில் உலகளாவிய செஸ் போட்டியை ஏற்பாடு செய்ததன் மூலம் செஸ் போட்டியை ஊக்குவிக்கும் முயற்சியை கேம்ப்ளான் எடுத்தது. இன்று, டிஎஸ்சிஐ நிகழ்வில் பெண்கள் போட்டியையும் சேர்க்க முடிந்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நாட்டின் குடிமக்கள் மத்தியில் செஸ் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதை காண்பது ஊக்கமளிக்கிறது. இதுபோன்ற உலகளாவிய போட்டிகளை நடத்துவதன் மூலம் நாட்டின் விளையாட்டு வளர்ச்சிக்கு நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்.” என்று கேம்ப்ளான் இயக்குனர் திரு. ஜீத் பானர்ஜி தெரிவித்தார்.