சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டைமெட்ராஸ் இண்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடைபெற்ற ஃபார்முலா 4 ( 14 முதல் 16 வயது) சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் 3 பேர் வெற்றி பெற்றனர்

0
157
சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டைமெட்ராஸ் இண்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடைபெற்ற ஃபார்முலா 4 ( 14 முதல் 16 வயது) சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் 3 பேர் வெற்றி பெற்றனர்.
ரேசிங் ப்ரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்  நடத்திய இந்தியன் ரேசிங் ஃபெஸ்டிவல் 2023 நடைபெற்ற இந்தியன் ரேசிங் லீக் மற்றும்  ஃபார்முலா 4 சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று தொடங்கின.
இன்று நடைபெற்ற  ஃபார்முலா 4 சாம்பியன்ஷி பந்தயத்தில் இந்திய வீரர்களான காட் ஸ்பீட் கொச்சி அணியின் அக்ஷய் போஹ்ரா, ஸ்பீட் டிமான் டெல்லி அணியின் ரோஷன்  ராஜீவ், ஹைதராபாத் பிளாக் பேர்டு அணியின் ஷஹான் அலி மோஹ்சின் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
நாளை நடைபெறும் போட்டிகளின் அடுத்த சுற்று நவம்பர்  30 முதல் டிசம்பர் 3 வரை நடைபெற உள்ளன. இறுதிப்போட்டிகள் சென்னையின் மையத்தில் உள்ள தீவுத்திடலில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள 3.5 கிலோமீட்டர் நீளமுள்ள சர்க்யூட்டில் நடைபெற உள்ளது.
இந்தியா மற்றும் தெற்காசியாவில் இரவுப் பந்தயம் மற்றும் ஸ்ட்ரீட் சர்க்யூட் முதன்முறையாக இங்கு நடத்தப்பட உள்ளன.  இந்த இறுதிப்போட்டிகள் டிசம்பர் 9 மற்றும் 10 ஆம்  தேதிகளில் நடைபெற உள்ளன.   ஆண்கள் மற்றும் பெண்கள் குழு அடிப்படையிலான சாம்பியன்ஷிப்பில் போட்டியிடும் இந்தியாவின் ஒரே மோட்டார் ஸ்போர்ட்ஸ் லீக் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வீரர்கள் பங்கேற்கின்றனர் .
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த RPPL நிர்வாக இயக்குநர் அகிலேஷ் ரெட்டி ,  2 நாட்கள் கார் பந்தயத்தில் உலகம் முழுவதும் இருந்து வீரர்கள், குறிப்பாக அதிக அளவில் ஐரோப்பியர்கள் பங்கேற்பதாக தெரிவித்தார்.  40 சதவீதம் இந்திய வீரர்களும் பங்கேற்கின்றனர்.
இந்தியாவில் முதல் முறையாக Street Circuit மற்றும் இரவு பந்தயம் நடைபெறுவதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த பந்தயம் நடைபெற காரணமாக இருக்கும் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றியும் தெரிவித்தார்.