Paytm | பேடிஎம் ஆப்-ஐ ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கியது கூகுள்

0
416

Paytm | பேடிஎம் ஆப்-ஐ ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கியது கூகுள்

Paytm | Google Play Stroe | பேடிஎம் ஆப் ஆன்லைன் விளையாட்டுகளிலும், ஆன்லைன் சூதாட்டங்களிலும் வாடிக்கையாளர்களை பங்குபெறச் செய்ததாக கூகுள் குற்றம்சாட்டியுள்ளது.

சூதாட்ட விதிமுறை கொள்கைகளை மீறியதாக இந்தியாவின் பிரபல டிஜிட்டல் பண பரிவர்தணை செயலியான பேஎடிஎம்-ஐ கூகுள் நிறுவனம் தனது ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கி உள்ளது.

இந்தியாவின் டிஜிட்டல் பணபரிவர்தனை செயலியான பேடிஎம்-ஐ 50 மில்லியனுக்கு அதிகமானோர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். பேடிஎம் செயலி சில்லறை கடைகள் முதல் பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் பேடிஎம் செயலியை கூகுள் நிறுவனம் தனது ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கி உள்ளது. சூதாட்டங்களை ஊக்குவிக்கும் ஆன்லைன் கேசினோக்கள் மற்றும் பிற சூதாட்ட பயன்பாடுகளுக்கு ப்ளே ஸ்டோர் தடை செய்துள்ளது.

பேடிஎம் ஆப் ஆன்லைன் விளையாட்டுகளிலும், ஆன்லைன் சூதாட்டங்களிலும் வாடிக்கையாளர்களை பங்குபெறச் செய்ததாக கூகுள் குற்றம்சாட்டியுள்ளது. மேலும் எந்தவொரு செயலியும் தங்களது பயனாளர்களை இதர இணையதளங்களில் பந்தயங்களில் பங்கேற்கச் செய்து அவர்களுக்கு பணமும், ரொக்கப் பரிசுகளும் வழங்கினால் அது கூகுளின் விதிமுறையை மீறிய செயல் என்று விளக்கமளித்துள்ளது.

கூகுளின் விதிமீறும் செயல்களில் மீண்டும், மீண்டும் ஈடுபடுவதாக புகார் வந்ததையடுத்து ப்ளே ஸ்டோரிலிருந்து பேடிஎம் நீக்கப்பட்டுள்ளது. ஆனால் Paytm money மற்றும் Paytm Mall உள்ளிட்ட செயலிகள் ப்ளே ஸ்டோரில் இயங்கி கொண்டு தான் உள்ளது.