சாதாரண விருப்பத்திலிருந்து வெளியேறி உலக அளவில் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக மாறுவதற்கு நாம் லட்சியம் கொள்ள வேண்டும் – கல்வித்துறை குறித்து குடியரசு துணைத்தலைவர்

0
158

சாதாரண விருப்பத்திலிருந்து வெளியேறி உலக அளவில் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக மாறுவதற்கு நாம் லட்சியம் கொள்ள வேண்டும் – கல்வித்துறை குறித்து குடியரசு துணைத்தலைவர்

புதுதில்லி,

பொருளாதாரம் மற்றும் தொழில்துறைக்கு ஊக்கமளிக்க அறிவுசார் சொத்துரிமையின் கீழ் கண்டுபிடிப்பு உரிமையை அமலாக்குவதில் பல்கலைக்கழகங்கள் அதி முக்கியத்துவம் அளிப்பது அவசியம் என்று குடியரசு துணைத்தலைவர் திரு எம். வெங்கய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார். சிறந்த ஆராய்ச்சி முடிவுகளுக்கு தொழில்துறை – கல்வி நிறுவனங்கள் இடையேயான இணைப்புகளை வலுப்படுத்துவது அவசியம் என்று அவர் கூறினார்.

சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் 69-வது பட்டமளிப்பு விழாவில் இன்று உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர் சாதாரண விருப்பத்திலிருந்து வெளியேற வேண்டும் என்றும் நாம் சாதித்தவற்றிலிருந்து திருப்தி அடையக் கூடாது என்றும் கூறினார்.  உலக அளவில் உள்ள 10 சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று என்பதை நோக்கி பஞ்சாப் பல்கலைக்கழகம் முன்னேற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஆசிரியர்களுக்கு தொடர்ச்சியான தொழில்முறை மேம்பாட்டு  சூழலை  பல்கலைக்கழகங்கள் உருவாக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த திரு நாயுடு, நவீன ஆராய்ச்சிகளில் துறை பேராசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் நவீன ஆராய்ச்சி மூலம், அறிவுப் புரட்சியில் பல்கலைக்கழகங்கள் முன்னணியில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய குடியரசு துணைத்தலைவர் பல்கலைக்கழகங்களுக்கும் அரசுக்கும் இடையே நெருக்கமான உரையாடல் நிகழ்ந்தால்தான் முக்கியமான கொள்கைகளை உருவாக்க முடியும் என்று கூறினார்.

உலகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த மாணவர்கள் தங்களின் அறிவைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட குடியரசு துணைத்தலைவர், தேசம் எதிர்கொள்ளும் பல சவால்களுக்கு தீர்வு காண ஆக்கப்பூர்வமாக பணியாற்ற வேண்டும் என்றார். “உயர்ந்த நோக்கத்துடன் உங்களுக்கும் தேசத்திற்கும் பிரகாசமான எதிர்காலத்தை கட்டமைக்க உங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலம், வெற்றியும், நிறைவும் தொடர்ந்து வரும்” என்று மாணவர்களிடம் அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் முதன்மை அறிவியல்  ஆலோசகர், பேராசிரியர் அஜய் குமார் சூத் உள்நாட்டிலேயே தடுப்பூசி தயாரிப்பதில் முன்னோடியாக விளங்கிய டாக்டர் கிருஷ்ணா எல்லா, திருமதி சுசித்ரா எல்லா ஆகியோருக்கும் குடியரசு துணைத்தலைவர் கவுரவ பட்டம் வழங்கினார்.  மேலும், கல்வித்துறையில் பேராசிரியர் ஜே எஸ் ரஜ்புத், இந்திய மருந்துத் துறையில் ஆச்சார்ய கொட்டேச்சா  விளையாட்டுத்துறையில், திருமதி ராணி ராம்பால், இலக்கியத்துறையில் பேராசிரியர் ஜக்பீர் சிங், ஆகியோருக்கு பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் ரத்ன விருதுகளை அவர் வழங்கினார். இந்தியாவின் பல துறைகளைச் சேர்ந்த சிறப்புள்ள திறமையாளர்கள் கவுரவிக்கப்படுவதற்காக இந்தப் பல்கலைக்கழகத்தைப் பாராட்டிய குடியரசு துணைத்தலைவர் மற்ற பல்கலைக்கழகங்களும் இந்த உதாரணத்தை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பஞ்சாப் ஆளுநர் திரு பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பகவந்த் மான், ஹரியானா ஆளுநர் திரு பண்டாரு தத்தாத்ரேயா,  முதலமைச்சர் திரு மனோகர் லால், மத்திய தொழில், வர்த்தகத்துறை இணை அமைச்சர் திரு சோம் பிரகாஷ், பஞ்சாப் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ராஜ்குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.