ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கொண்ட 14 குழந்தைகள் ‘உலக சாதனை நீச்சல் பயணத்தில்’ சாதனைகளை உருவாக்கத் தயாராகி, கமல்ஹாசனை சந்தித்து ஆசி பெற்றனர்

0
136
ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கொண்ட 14 குழந்தைகள் ‘உலக சாதனை நீச்சல் பயணத்தில்’ சாதனைகளை உருவாக்கத் தயாராகி, கமல்ஹாசனை சந்தித்து ஆசி பெற்றனர்

ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கொண்ட 14 குழந்தைகள் ‘உலக சாதனை நீச்சல் பயணத்தில்’ சாதனைகளை உருவாக்கத் தயாராகி வருகின்றனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கான “YADHAVI SPORTS ACADEMY – CHENNAI” ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கொண்ட 14 குழந்தைகள் வரலாற்று சிறப்புமிக்க நீச்சல் பயணத்தில் பங்கேற்கும் ஓர் அற்புதமான முயற்சியை ஏற்பாடு செய்துவருகிறது. கடலூரிலிருந்து சென்னை வரையிலான 165 கி.மீ தூரத்தை 4 நாட்களில் கடந்து செல்ல உள்ளார்கள். ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கொண்ட குழந்தைகளின் இந்த தனித்துவமான பயணம் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் யூனியன் (World Records Union), ஆசியா புக் ஆஃப் ரெக்காரட்ஸ் (Asia Book of Records) மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் (India Book of Records) ஆகியவற்றால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 01.02.2024 அன்று தமிழகத்தின் கடலூரில் நடைபெறும் கொடியேற்று விழாவுடன் இந்தப் பயணம் தொடங்கவிருக்கிறது. இந்த பயணம் 04.02.2024 ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை மெரீனா கடற்கரையில் முடிவடையும்.

இந்த சாதனைப்பயணத்தில் கலந்துகொள்ளவிருக்கிற குழந்தைகள்  தலைவர் நம்மவர். திரு.கமல்ஹாசன் அவர்களை சந்தித்து ஆசி பெற்றனர். மயில்வாகனன், P.R.பால் நியூலின் மற்றும்  Sp.சண்முகம் முதலானோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.