93-வது தமிழ்நாடு மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி – அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்

0
169

93-வது தமிழ்நாடு மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி – அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்

தமிழ்நாடு தடகள சங்கம் 15-ம் தேதி முதல் வரும் 17-ம் தேதி வரை நடத்தும் 93-வது தமிழ்நாடு மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளை சென்னை நேரு விளையாட்டரங்கில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார். 

விளையாட்டு வீரர்களின் குறைகளைப் போக்க விரைவில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்படும் என்றும், எந்த குறையாக இருந்தாலும் அரசுக்கு தெரியப்படுத்தினால் உடனுக்குடன் அது நிவர்த்தி செய்யப்படும் என்றும் சுற்றுச்சூழல், கால நிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தடகள சங்கம் நடத்தும் 93-வது தமிழ்நாடு மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளை சென்னை நேரு விளையாட்டரங்கில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்.

15-ம் தேதி முதல் வரும் 17-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 2,000-க்கும் மேற்பட்ட இளைய, மூத்த தடகள வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த போட்டிகளில் வெற்றி பெற்று தேர்வாகும் வீரர்கள், அடுத்ததாக தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் விளையாட உள்ளனர்.

நிகழ்வை துவக்கி வைத்து பேசிய அமைச்சர் மெய்யநாதன், தமிழ்நாட்டில் விளையாட்டு நகரம் அமைப்பதற்கான நிலம் தேர்வு செய்யும் பணிகள் தொடங்கி உள்ளதாகவும், தமிழ்நாட்டில் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள், சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளை இனி தொடர்ந்து நடத்துவதற்கான ஏற்பாடுகளை அரசு முன்னெடுத்துவருவதாகவும் கூறினார்.

விளையாட்டுத்துறையின் மீது முதலமைச்சர் தனி கவனம் செலுத்துவதற்கும், அவர் தொடர்ந்து இளமையாக இருப்பதற்கும் விளையாட்டின் மீது அவருக்குள்ள ஆர்வமே காரணம் என்றும் அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.

அடுத்த 6 மாத காலத்துக்குள் வெளிநாட்டு பயிற்சியாளர்களை தமிழ்நாடு அழைத்து வந்து, இங்குள்ள அனைத்து வகையான விளையாட்டு வீரர்களுக்கும் பயிற்சி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பேசிய அமைச்சர் மெய்யநாதன், 15 நாட்களுக்குள் விளையாட்டு வீரர்களின் குறைகளை கேட்பதற்கான கட்டுப்பாட்டு மையம் திறக்கப்படும் என்றும் என்ன குறை இருந்தாலும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக அது நிவர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், விளையாட்டு வீரர்களுக்கு இலவச பயிற்சி வழங்கும் திட்டம், தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் முழு செலவையும் அரசே ஏற்பது உள்ளிட்ட திட்டங்களையும் அரசு விரைந்து செயல்படுத்த உள்ளதால், விளையாட்டு வீரர்கள் அனைவரும் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதை இலக்காக வைத்து உழைக்க வேண்டும் என்று அமைச்சர் மெய்யநாதன் கேட்டுக்கொண்டார்.

நிகழ்வில் எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ. பரந்தாமன், தமிழ்நாடு தடகள சங்க தலைவர் தேவாரம், செயலாளர் லதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Any details regarding the event log onto https://tnathleticassociation.com/