48ம் ஆண்டு நினைவுநாள்: பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

0
178

48ம் ஆண்டு நினைவுநாள்: பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: தந்தை பெரியாரின் 48-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

பெரியார் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி வணங்கினார்.

அவருடன் எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, ஆ.ராசா, தயாநிதி மாறன், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, துணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, எம்.எல்.ஏ.க்கள் உதயநிதி ஸ்டாலின், தாயகம் கவி, ஏ.எம்.வி. பிரபாகரராஜா.

சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நே.சிற்றரசு, பகுதி செயலாளர் மதன் மோகன், முன்னாள் பகுதி செயலாளர் சுரேஷ்குமார், பகுதி துணை செயலாளர் சேப்பாக்கம் சிதம்பரம் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

திராவிட கழக தலைவர் கி.வீரமணி சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் திராவிடர் கழக துணை தலைவர் கலிபூங்குன்றன், பொதுச்செயலாளர் அன்புராஜ், பொருளாளர் குமரேசன், வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி உள்ளிட்ட ஏராளமானோர் மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர் கி.வீரமணி தலைமையில் அனைவரும் அமைதி ஊர்வலமாக அங்கிருந்து நடந்து வந்து வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்கு வந்தனர். அங்கு கி.வீரமணி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார். அவருடன் துணை பொதுச்செயலாளர் சத்ரியன் வேணுகோபால் உள்ளிட்ட நிர்வாகிகளும் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.