12வது ஹாக்கி இந்தியா தேசிய சீனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற தமிழக வீரர்கள்: விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்து
12வது ஹாக்கி இந்தியா தேசிய சீனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக ஹாக்கி வீரர்களை விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் சந்தித்து வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார் அவருடன் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு அமைப்பின் தலைவர் சேகர் மனோகரன் உடன் இருந்தனர்
12வது ஹாக்கி இந்தியா தேசிய சீனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டிகள் போபாலில் கடந்த ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 17 தேதி வரை நடைபெற்றது இப்போட்டியில் தமிழக வீரர்கள் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றனர்.
பதக்கம் வென்ற வீரர்களை எழும்பூர் SDAT மேயர் இராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் தமிழக சுற்றுச்சூழல் துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் SDAT மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கிற்கு வருகை தந்து தமிழக சீனியர் ஆண்கள் அணி வீரர்கள், தலைமை பயிற்சியாளர், உதவி பயிற்சியாளர் , மேலாளர் மற்றும் பிசியோதெரபிஸ்ட் ஆகியோரை பாராட்டி வாழ்த்தினார் அப்பொழுது ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு அமைப்பின் தலைவர் சேகர் மனோகரன் உடன் இருந்தார்
மேலும் இந்நிகழ்ச்சியின் போது அங்கு பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த தமிழக சீனியர் பெண்கள் மற்றும் தமிழக அணியுடன் பயிற்சி போட்டிக்காக வந்திருந்த ஹரியானாவைச் சேர்ந்த சீனியர் பெண்கள் அணிகளையும் சந்தித்து அவர்கள் பங்கேற்கவிருக்கும் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தார்,
மேலும் ஹாக்கி இந்தியா அமைப்பின் சார்பாக துறைகளுக்கு இடையேயானஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக போலீஸ் அணியின் மூன்று வீராங்கனைகளையும் அமைச்சர் வாழ்த்தினார்.
இநிகழ்ச்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு அமைப்பின் தலைவர் சேகர் மனோகரன், பொருளாளர் ராஜராஜன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரிகள், மற்றும் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு அமைப்பின் மற்ற நிர்வாகிகள் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.