வீடூர் அணையில் 50 ஆயிரம் நன்னீர் இறால் குஞ்சுகள் விடப்பட்டது

0
303

வீடூர் அணையில் 50 ஆயிரம் நன்னீர் இறால் குஞ்சுகள் விடப்பட்டது

விழுப்புரம், செப்.21-–

வீடூர் அணையில் 50 ஆயிரம் நன்னீர் இறால் குஞ்சுகள் விடப்பட்டது.

விக்கிரவாண்டி அருகே வீடுர் அணையின் நீர்த்தேக்கம் உள்ளது. இந்த நீர்த்தேக்கம் இப்பகுதியில் உள்ள உள்நாட்டு பங்கு மீன்பிடிப்பு செய்யும் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வாழ்வாதாரமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் உள்ளூர் பங்கு மீன்பிடிப்பு மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வீடூர் அணையின் நீர்த்தேக்கத்தில் நன்னீர் இறால் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை கலந்து கொண்டு 50 ஆயிரம் நன்னீர் இறால் குஞ்சுகளை வீடுர் அணையின் நீர்த்தேக்கத்தில் விட்டார். தொடர்ந்து அணையில் நிரம்பியுள்ள நீரின் கொள்ளளவினையும், அணையிலுள்ள மதகு பகுதிகளையும், நீர் மட்டம் எந்த அளவு இருக்கிறது என்பதையும் அவ்வப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வரும்படி மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை கேட்டுக் கொண்டார்.

திண்டிவனம் சப்-கலெக்டர் டாக்டர் அனு, கடலூர் மீன்வளத்துறை மண்டல துணை இயக்குனர் காத்தவராயன், உதவி இயக்குனர் நித்தியா பிரியதர்ஷினி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜவகர், உதவி பொறியாளர் ஞானசேகரன், திண்டிவனம் தாசில்தார் ராஜசேகர், மயிலம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சேகரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, மீன் பிடிப்போர் சங்க நிர்வாகிகள் பிரகாஷ், ராஜதுரை, அன்பு ஆகியோர் உடனிருந்தனர்.