வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பை வரவேற்கிறேன் – ஓ.பி.சி இடஒதுக்கீடு தீர்ப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி

0
357

வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பை வரவேற்கிறேன் – ஓ.பி.சி இடஒதுக்கீடு தீர்ப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மத்திய அரசுக்கு வழங்கப்படும் மருத்துவ இடங்களில் இதர பிறப்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று தமிழக அரசு, தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தன.

அந்த வழக்கில், ‘மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட இடங்களில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு சட்ட ரீதியான எந்த தடையும் இல்லை. இதுதொடர்பாக, மத்திய அரசு மூன்று மாதங்களில் முடிவு எடுக்கவேண்டும்’ என்று தீர்ப்பளித்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துவருகின்றனர்.

இதுகுறித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் பதிவில், ‘சமூகநீதி காத்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் சிறப்பாக மக்கள் பணியாற்றும் அம்மாவின் அரசு எடுத்த சட்ட ரீதியான நடவடிக்கையினால், மருத்துவ படிப்பில் OBC மாணவர்களின் சேர்க்கைக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வரவேற்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.