ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

0
367

ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

ராமர் கோயில் பூமி பூஜைக்காக அயோத்தி வந்தடைந்த பிரதமர் மோடி, அங்குள்ள பத்தாம் நூற்றாண்டு கோயிலான அனுமன் கர்கி கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.

அங்கு பிரதமர் மோடிக்கு வெள்ளிக் கிரீடம் பரிசளிக்கப்பட்டது. அவருடன் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் வந்தார்.

அதனைத் தொடர்ந்து ராம்லல்லா விராஜ்மன் என்ற குழந்தை ராமர் கோயிலில் பாரிஜாத (இரவு பூக்கும் மல்லிகை) மலர்ச்செடியை மோடிநட்டார்.

இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜையில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, 40 கிலோ எடை கொண்ட வெள்ளியிலான செங்கலை அடிக்கல் நாட்டினார்.
இதில், முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், கவர்னர் ஆனந்தி பென் படேல், ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், ஆர்.எஸ்.எஸ். துணைத்தலைவர் பையாஜி ஜோஷி, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், மாநில முன்னாள் முதல்-மந்திரி கல்யாண் சிங், பாபா ராம்தேவ் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள், பா.ஜ.க. தலைவர்கள், சாமியார்கள் என முக்கிய பிரபலங்களும் ராமர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்றனர்.