யாசகம் கேட்போர் குறித்த ஆய்வு: தமிழ்நாட்டில் புள்ளி விவரம்

0
84

யாசகம் கேட்போர் குறித்த ஆய்வு: தமிழ்நாட்டில் புள்ளி விவரம்

புதுதில்லி, நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் திரு வீரேந்திர குமார் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் 4,13,670 யாசகம் கேட்போர் மற்றும் இடம் மாறிக்கொண்டே இருப்பவர்கள் உள்ளனர்.

“ஸ்மைல்- விளிம்புநிலை தனிநபர்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் தொழில்முனைவுக்கான ஆதரவு” என்ற திட்டத்தை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் உருவாக்கியுள்ளது.

‘யாசகம் கேட்பதில் ஈடுபடும் நபர்களின் விரிவான மறுவாழ்வுக்கான மத்தியத் துறை திட்டம்’ இதன் துணை திட்டமாகும். யாசகம் கேட்கும் செயலில் ஈடுபடும் நபர்களுக்கான நல நடவடிக்கைகள் உட்பட பல விரிவான நடவடிக்கைகளை இந்தத் திட்டம் உள்ளடக்கியது. மறுவாழ்வு, மருத்துவ வசதிகள், ஆலோசனைகள், அடிப்படை ஆவணங்கள், கல்வி, திறன் மேம்பாடு, பொருளாதார இணைப்புகள் மற்றும் பலவற்றில் இத்திட்டத்தின் வாயிலாக கவனம் செலுத்தப்படுகிறது.

இந்தியாவில் மொத்தமுள்ள 4,13,670 யாசகம் கேட்போரில் 2,21,673 பேர் ஆண்கள் என்றும் 1,91,997 பேர் பெண்கள் என்றும் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 6814 யாசகம் கேட்போரில் 3789 பேர் ஆண்கள், 3025 பேர் பெண்கள் ஆவர். புதுச்சேரியில் மொத்தமுள்ள 99 யாசகம் கேட்போரில் 54 பேர் ஆண்கள் என்றும் 45 பேர் பெண்கள் ஆவர்.