மழையில் ஆய்வு செய்த முதல்வரிடம் ஆசிர்வாதமும் அன்பளிப்பும் பெற்ற புதுமணத் தம்பதி

0
95

மழையில் ஆய்வு செய்த முதல்வரிடம் ஆசிர்வாதமும் அன்பளிப்பும் பெற்ற புதுமணத் தம்பதி

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மூன்றாம் நாளாக மழை பாதிப்புகளை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மழை வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்துகொண்டிருந்த முதல்வரிடம் திருமணம் நடைபெற்றுக்கொண்டிருந்த புதுமணத் தம்பிதிகள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தமிழகம் முழுக்க மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை வெள்ளக்காடாக மிதக்கிறது. இதனால், முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னை முழுக்க களத்தில் இறங்கி மழை பாதிப்புப் பகுதிகளை பார்வையிட்டு வருகிறார்.

நேற்று காலை வடசென்னை மகாகவி பாரதியார் நகரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த கௌரிசங்கர் மகாலட்சுமி தம்பதிக்கு அன்று தான் திருமணம் நடைபெற்று மணக்கோலத்தில் இருந்தனர். அவர்களை பார்த்த முதல்வர் காரில் இருந்து இறங்கி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அன்பளிப்பு கொடுத்தார். மணமக்களும் முதலமைச்சர் காலில் விழுந்து மரியாதை பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வின் போது அமைச்சர் சேகர்பாபு உடனிருந்தார்.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மூன்றாம் நாளாக மழை பாதிப்புகளை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். வில்லிவாக்கம், மதுரவாயல், விருகம்பாக்கம் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறார். மருத்துவ முகாம்களை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்குகிறார்.

சென்னை கொளத்தூரில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, நிவாரண உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நீர் நிலைகளை ஆய்வு செய்து, மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் நீரை வெளியேற்றும் பணிகளை விரைவுபடுத்தவும் அறிவுறுத்தல் வழங்குகிறார்.