மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 100 மட்பாண்டம் தயாரிக்கும் மின்சார சக்கரங்களை காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத்தின் மட்பாண்டர்களுக்கு அதிகாரமளித்தல் திட்டத்தின் கீழ் விநியோகித்தார்

0
275

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 100 மட்பாண்டம் தயாரிக்கும் மின்சார சக்கரங்களை காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத்தின் மட்பாண்டர்களுக்கு அதிகாரமளித்தல் திட்டத்தின் கீழ் விநியோகித்தார்.

புதுதில்லி, ஜுலை 25, 2020

மட்பாண்டம் தயாரிக்கும் விளிம்பு நிலை சமூகத்தை “சுயசார்பு” உடையதாக மாற்றுவதற்கான முயற்சியை மையமாகக் கொண்டு, மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா 100 பயிற்சி பெற்ற 100 கைவினைஞர்களுக்கு 100 மட்பாண்டம் தயாரிக்கும் மின்சாரச் சக்கரங்களை காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத்தின் (KVIC) மட்பாண்டர்களுக்கு அதிகாரமளித்தல் திட்டத்தின் கீழ் விநியோகித்தார். திரு அமித் ஷா தனது நாடாளுமன்றத் தொகுதியில் (காந்திநகர் மக்களவைத்) மட்பாண்டம் தயாரிக்கும் மின்சாரச் சக்கரங்களை புதுதில்லியில் இருந்து காணொளிக் காட்சி மூலம் விநியோகித்தார்.

மட்பாண்டர்களுக்கு அதிகாரமளித்தல் திட்டத்தைப் (Kumhar Sashaktikaran Yojana) பாராட்டிய உள்துறை அமைச்சர், இந்த முயற்சி, மட்பாண்டம் தயாரிக்கும் விளிம்பு நிலை சமூகத்தை வலுப்படுத்துவதில் நீண்ட தூரம் செல்லுவதுடன் உற்பத்தித்திறனை மேம்படுத்த தொழில்நுட்பத்தை இணைத்து, பாரம்பரிய மட்பாண்டக் கலைகளைப் புதுப்பிக்கும். மட்பாண்டத் தயாரிப்பில் KVIC பயிற்சி பெற்ற ஐந்து மட்பாண்டம் தயாரிப்பவர்களுடன் அவர் உரையாடியதுடன் அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு மட்பாண்டம் தயாரிக்கும் மின்சார சக்கரங்கள் மற்றும் பிற உபகரணங்களையும் வழங்கினார்.

“நமது மட்பாண்டம் தயாரிப்பவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். மத்தியில் உள்ள மோடி அரசு எப்போதும் விளிம்பு நிலை சமூகத்தின் சிறந்த வாழ்வாதாரத்திற்காக அக்கறை கொண்டுள்ளது. மின்சார சக்கர விநியோகம் என்பது குஜராத் மக்களுக்கு நமது பிரதமர் அளித்த பரிசு. இது அவர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதுடன் அவர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் ”என்று திரு. அமித் ஷா கூறினார்.

“நாட்டின் பாரம்பரிய கலையை வலுப்படுத்துவது பிரதமர் திரு நரேந்திர மோடி ஜியின் கனவு, சுயசார்பு இந்தியாவை உருவாக்க அனைவரும் தங்கள் திறமையை பங்களிக்க வேண்டும். இந்த முடிவுக்கு மோடி அரசு ஏற்கனவே முன்மாதிரியான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அவர் மேலும், KVICஇன் மட்பாண்டர்களுக்கு அதிகாரமளித்தல் திட்டம் இந்த திசையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்,” என்று கூறினார்.