பருவநிலை மாற்ற மாநாடு COP26-ல் பிரேசில், தென்னாப்ரிக்கா, இந்தியா மற்றும் சீனாவின் சார்பில் அறிக்கை அளித்த அமைச்சர் பூபேந்தர் யாதவ்

0
108

பருவநிலை மாற்ற மாநாடு COP26-ல் பிரேசில், தென்னாப்ரிக்கா, இந்தியா மற்றும் சீனாவின் சார்பில் அறிக்கை அளித்த அமைச்சர் பூபேந்தர் யாதவ்

புதுதில்லிநவம்பர் 1, 2021

கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் ஐ.நா பருவநிலை மாற்ற மாநாட்டில், பிரேசில், தென்னாப்ரிக்கா, இந்தியா மற்றும் சீனா நாடுகளை உள்ளடக்கிய BASIC அமைப்பின் சார்பில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் அறிக்கை தாக்கல் செய்தார்.

COP26 சுமார் ஓராண்டு காலம் தாமதமாக நடைபெற்றாலும், இதில் சம்பந்தப்பட்ட நாடுகள் ஏற்கனவே, தங்களது நாட்டில் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளை செயல்படுத்த தொடங்கிவிட்டதை சுட்டிக்காட்டிய அவர். பாரீஸ் உடன்படிக்கை விதிமுறைப் புத்தகம் COP26-ல் முடிவுக்கு வருவதாக தெரிவித்தார்.

எதிர்காலத்தில் குறைந்த அளவிலான கார்பன் வெளியேற்றத்தை உருதி செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார். கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பால் வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வுகாண வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

பருவநிலை மாற்றம் தொடர்பான இலக்குகளை அடைவதற்கு, வளரும் நாடுகளுக்கு 2009-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 100 பில்லியன் டாலர் வழங்குவது என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வளரும் நாடுகள் தவரிவிட்டதாகவும் திரு பூபேந்தர் யாதவ் தெரிவித்தார்.

ஐ.நா நடவடிக்கைகளில் வெளிப்படையான, உள்ளடக்கிய, உறுப்பு நாடுகள் தெரிவிக்கும் கருத்தொற்றுமை அடிப்டையிலான தன்மை தான் பன்னாட்டு நடைமுறைகளுக்கு வெற்றியை தேடித்தரும் என்றும் அவர் கூறினார். பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் BASIC அமைப்பு தனது வாக்குறுதியை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், தலைமை பொறுப்பில் இருப்பவர்களுடன் இனைந்து ஆக்கப்பூர்வமாக பாடுபடும் என்றும் அவர் தெரிவித்தார்.