“தமிழ் மொழி வளர்ச்சிக்கு தொண்டாற்றிய 21 தமிழறிஞர்கள்”: விருது வழங்கிச் சிறப்பித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

0
115

“தமிழ் மொழி வளர்ச்சிக்கு தொண்டாற்றிய 21 தமிழறிஞர்கள்”: விருது வழங்கிச் சிறப்பித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 21 தமிழறிஞர்களுக்கு விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தி வழங்கிவருகிறது. அவ்வகையில் தமிழ்நாடு அரசின் விருதாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கி, கௌரவித்தார்

விருது பெற்றவர்கள் விவரம் வருமாறு:

“பேரறிஞர் அண்ணா விருது – நாஞ்சில் சம்பத்

மகாகவி பாரதியார் விருது – பாரதி கிருஷ்ணகுமார்

பாவேந்தர் பாரதிதாசன் விருது – புலவர் செந்தலை கவுதமன்

சொல்லின் செல்வர் விருது – சூர்யா சேவியர்

சிங்காரவேலர் விருது – கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம்

தமிழ்த்தாய் விருது – மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்

அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது – முனைவர் இரா.சஞ்சீவிராயர்

சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது – உயிர்மை திங்களிதழ்

தேவநேயப்பாவாணர் விருது – முனைவர் கு.அரசேந்திரன்

உமறுப்புலவர் விருது – நா.மம்மது

கி.ஆ.பெ. விருது – முனைவர் ம.இராசேந்திரன்

கம்பர் விருது – பாரதி பாஸ்கர்

ஜி.யு.போப் விருது – ஏ.எஸ்.பன்னீர்செல்வம்

மறைமலையடிகள் விருது – சுகி.சிவம்

இளங்கோவடிகள் விருது – நெல்லைக் கண்ணன்

அயோத்திதாசப் பண்டிதர் விருது – ஞான.அலாய்சியஸ்”

ஆகியோர் பெற்றனர். மேலும் இவ்வாண்டு முதல் விருது பெற்ற ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகை ரூ.1,00,000/- லிருந்து ரூ.2,00,000/- உயர்த்தியும் மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம், விருதுக்கான தகுதியுரை ஆகியன வழங்கி பொன்னாடை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கௌரவித்தார்.