சென்னையில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு – 60 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன

0
122

சென்னையில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு – 60 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன

சென்னை, தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் அவ்வபோது முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக அரசு நடத்தி வருகிறது. இதற்கிடையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய், அபுதாபி சென்று 6 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொழில் முதலீடுகளை ஈர்த்து வந்தார்.

இந்த நிலையில் தமிழக அரசு இன்று தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துகிறது. சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் 60 ஒப்பந்தகள் கையெழுத்தாக உள்ளதாகவும், 70 ஆயிரம் கோடிக்கும் மேல் முதலீடுகள் கிடைக்கும் என்றும் தொழில் துறை தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் 21 புதிய தொழில் திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார் என்றும், இது தவிர 12 முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.