கோவிட்19 தொடர்பான பல்வேறு பொருள்களுக்கான புதிய தொழில்நுட்பங்கள் பற்றி, குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கான இணையவழிக் கருத்தரங்கம்

0
298

கோவிட்19 தொடர்பான பல்வேறு பொருள்களுக்கான புதிய தொழில்நுட்பங்கள் பற்றி, குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கான இணையவழிக் கருத்தரங்கம்

நீர் சுத்திகரிப்புத் தொழில்நுட்பத்திற்கு சிறப்பு கவனம்

09 ஆகஸ்ட் 2020:

மத்திய அறிவியல் தொழிலக ஆராய்ச்சிக் குழுமமும், மத்திய இயந்திரப் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனமும் (Council of Scientific and Industrial Research – CSIR – Central Mechanical Engineering Research Institute – CMERI) இணைந்த அமைப்பின் இயக்குநர் பேராசிரியர் டாக்டர் ஹரிஷ் ஹிரானி, பாட்னாவில் உள்ள குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவன (டி ஐ) இயக்குநர் விஷ்வ மோகன் ஜா ஆகியோர் கோவிட்-19 தொடர்பாக சி எஸ் ஐ ஆர் – சி எம் இ ஆர் ஐ வடிவமைத்துள்ள சமீபத்தியத் தொழில்நுட்பங்கள் குறித்தும், குறிப்பாக நீர் சுத்திகரிப்புத் தொழில் நுட்பங்கள் குறித்தும்,7 ஆகஸ்ட் 2020 அன்று நடைபெற்ற இணையவழிக் கருத்தரங்கில் விவாதித்தனர்.

மத்திய அறிவியல் தொழிலக ஆராய்ச்சிக் குழுமமும், மத்திய இயந்திரப் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனமும் வடிவமைத்துள்ள பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்தும், இந்த அமைப்புகளில் உள்ள அனைத்து பொறியியல் தீர்வுகள், வசதிகள் குறித்தும், குறு, சிறு, நடுத்தரத்தொழில் துறையினருக்கு எடுத்துக் கூறுவதே இந்த இணையவழிக் கருத்தரங்கின் முக்கியமான நோக்கமாகும்.

மத்திய அறிவியல் தொழிலக ஆராய்ச்சிக் குழுமம், மத்திய இயந்திரப் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் தொழில்நுட்ப உள்ளீடுகள் குறித்து பேராசிரியர் ஹிரானி ஆழ்ந்த, பகுத்தாய்வு முறையிலான, முழுமையான விளக்கமளித்தார்.

குடிமைக் கழிவு மேலாண்மை அதிகாரிகளுக்கு அதிக அளவில் பிரச்சினையை உருவாக்கும், ஒரு முறை பயன்படுத்திய பின் தூக்கி எறிந்து விடக்கூடிய ஏராளமான அளவிலான முகக் கவசங்களை அகற்றுவதற்கு கணிசமாக உதவக்கூடிய கருவி, பிளாஸ்மா ஆர்க் மருத்துவ கழிவு அகற்றும் அமைப்பு. இன்டெலி எம் ஏ எஸ் டி; மருத்துவமனை கவனிப்பு உதவி ரோபோட்டிக் கருவி; தொடுகையற்ற சோப்பு, நீர் வெளியேற்றும் கருவி; தொற்று வராமல் தடுப்பதற்கான பேட்டரியால் இயங்கும் தெளிப்பான்கள்; ஆக்சிஜன் கான்சன்ட்ரேட் கொண்ட இயந்திர மயமாக்கப்பட்ட செயற்கை சுவாசக் கருவிகள்; ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன. இந்தப் பொருள்கள் குறு சிறு நடுத்தரத் தொழில் பிரிவுகளுக்கு தொடர்ந்து செயல்பட பெரிதும் உதவியாக இருக்கும். ஏற்கனவே 13 எம் எஸ் இ பிரிவுகளுக்கு கோவிட்19 நோய்க்கு எதிரான தொழில்நுட்பங்கள் அளிக்கப்பட்டுவிட்டன.

நகர்ப்புறப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான மிக முக்கிய காரணம் கழிவுநீர்க் கால்வாய் அமைப்புகளில் ஏற்படும் அடைப்புகள் என்று டாக்டர் ஹிரானி கூறினார். கழிவுநீர்க் கால்வாய்களை, புதுமையான தொழில்நுட்பத் தீர்வுகள் மூலம் தூய்மைப்படுத்துவதற்காக இயந்திர மயமாக்கப்பட்ட கழிவுநீர்க் கால்வாய் சுத்திகரிப்புக் கருவியை சி எஸ் ஐ ஆர் – சி எம் இ ஆர் ஐ தயாரித்துள்ளது. பிஹாரில் நீர் மாசுபாட்டினால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, நீர் சுத்திகரிப்புத் தொழில்நுட்பங்கள், மத்திய அறிவியல் தொழிலக ஆராய்ச்சிக் குழுமம், மத்திய இயந்திரப் பொறியியல் ஆராய்ச்சி நிறுவன அமைப்பில் உள்ளன. ஹைஃப்ளோ ரேட் அயர்ன், ஆர்சனிக்,ஃப்ளோரைடு அகற்றும் தொழில்நுட்பம் ஆகியவை நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் நீர் வள மேலாண்மைக்கும், நீர் தூய்மைப்படுத்தும் பிரச்சினைக்கும் தீர்வுகாண வகைசெய்யும். மத்திய அறிவியல் தொழிலக ஆராய்ச்சிக் குழுமமும், மத்திய இயந்திரப் பொறியியல் ஆராய்ச்சி நிறுவன அமைப்பால் தயாரிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்புத் தொழில்நுட்பங்கள் 47 எம்எஸ்இ க்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. இந்தக் கருவிகளின் வரவேற்புக்கும், இவை ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கும் இதுவே சான்று. ஸ்பேஸ் ரேஷனலைஸ்ட் சூரியசக்தித் தொழில்நுட்பம்; ஸ்மார்ட் லைட்டிங் சிஸ்டம் ஆகியவை எரிசக்தித் திறன் கொண்ட மின் வள மேலாண்மையில் புதிய புரட்சியை உருவாக்க முடியும்.

வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கான உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் சுகாதார சவாலான கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மத்திய அறிவியல் தொழிலக ஆராய்ச்சிக் குழுமமும், மத்திய இயந்திரப் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனமும் முன்னோடியாக பல முயற்சிகளை அனைவருக்கும் நலம் பயக்கும் வகையில் மேற்கொண்டு வருவது குறித்து, டாக்டர் ஹிராணிக்கு, விஸ்வ மோகன் ஜா; பீகார் தொழில்துறை அமைப்பின் பிரதிநிதிகள்; போஜ்பூர் வர்த்தக மையம் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

நாட்டு வளர்ச்சிக்காக மத்திய அறிவியல் தொழிலக ஆராய்ச்சிக் குழுமம், மத்திய இயந்திரப் பொறியியல் ஆராய்ச்சி நிறுவன அமைப்புடன் தொடர்ந்து, இணைந்து செயலாற்ற, மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளதாக ஜா தெரிவித்தார்.