ஆறாம் நிலம் விமர்சனம்

0
156

ஆறாம் நிலம் விமர்சனம்

ஐபிசி தமிழ் தயாரித்து ஐபிசி யூ டியூப் சேனலில் ரிலீஸ் ஆகும் திரைப்படம் ஆறாம் நிலம்.இதனை எழுதி இயக்கியிருக்கிறார் ஆனந்தரமணன். இதில் நவயுகா, ராஜ்குமார் பாஸ்கி, மன்மதன், ஜீவேஸ்வரன்,தமிழரசி, தமிழ் கவி ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்;கள்:-இசை-சித்தங்கா ஜெயகொடி,எடிட்டர்-சஜித் ஜெயக்குமார்,ஒளிப்பதிவு-சிவசாந்தகுமார், பிஆர்ஒ-நிகில்.

போர்க்காலத்தில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை பத்தாண்டுகளுக்குப் பிறகும் பல இடங்களில் அகற்ற அதனை செயலிழக்க செய்ய ஈழமக்களை பயன்படுத்துகிறார்கள். அந்த வேலையைச் செய்ய புறப்படும் ஒரு தாய் தன் மகளை மாமியாரின் கவனிப்பில் விட்டுச் செல்கிறார். அந்தப் பெண்ணிக் கணவர் போராளியாக சரணடைந்தவர் என்பதால் எந்த இடத்தில் உயிரோடு இருக்கிறார் என்பதை கண்டறிய பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களை நாடுகிறார். ஆனால்  காலம் கடந்ததே தவிர தன் கணவரின் இருப்பிடம் தெரியாமல் தவிக்கும் அந்தப் பெண், அப்பாவின் நினைவாக ஏங்கும் மகள், நோயாளியாக இருக்கும் மாமியார் இவர்கள் தங்கள் வாழ்க்கையை எவ்வளவு கடினமாக வாழ்கிறார்கள் என்பதை சித்தரிக்கும் கதைக்களம் தான் ஆறாம் நிலம்.

இதில் நவயுகா, ராஜ்குமார், பாஸ்கி, மன்மதன், ஜீவேஸ்வரன்,தமிழரசி, தமிழ் கவி ஆகியோரின் இயல்பான, கனமாக நடிப்பு மனதில் ஆழந்த பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்.

இசை-சித்தங்கா ஜெயகொடி,எடிட்டர்-சஜித் ஜெயக்குமார்,ஒளிப்பதிவு-சிவசாந்தகுமார் ஆகியோர் அனைவரும் படத்தின் முதுகெலும்பாக இருந்து காட்சிக்கேற்ற இசையையும், காட்சிக்கோணங்களையும், படதொகுப்பையும் சிறப்பாக கொடுத்து கை தட்டல் பெறுகின்றனர்.

ஈழத்தில் நடக்கும் போர், போராளிகள், சண்டை என்று எப்போதும் பார்க்கும் திரைக்கதையை போன்று இல்லாமல் மாறுபட்ட கதைக்களம் போருக்கு பிறகு அந்த நிலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், வலிகள்,அவலங்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்கள், புலனாய்வாளர்களின் தொல்லைகள், சமகால நெருக்கடிகள் என்று பல பாதைகளை கடந்து கதை சொல்லி எழுதி இயக்கியிருக்கும் ஆனந்தரமணனுக்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில் ஈழத் தமிழர்களின் வலிகளையும், துயரங்களையும், அவர்கள் வாழ்வில் சந்தித்த சவால்களையும் சித்தரிக்கின்ற ஆறாம் நிலம் ஐபிசி யூ டியூப் சேனலில் ரிலீஸ் ஆகும் அருமையான திரைப்படம்.