விசிக்ஸ் ஏடிஜி இந்தியா தன்னுடைய முதல் சர்வதேச அலுவலகத்தை சென்னையில் தொடங்கியுள்ளது!
நெதர்லாந்து அரசு நிதி உதவியுடன் உருவாக்கப்பட்ட இந்த அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த மையமானது இந்திய கனரக தொழில்துறையில் கண்காணிப்பு, பாதுகாப்பு அம்சங்களை மேலும் வலிமைப்படுத்த, மேம்படுத்த உதவும்
சென்னை, மே 3, 2022: ஆக்சஸ் டெக்னாலஜி குழுமத்தின் ஒரு பிரிவும் தொழிலக பாதுகாப்பு தீர்வுகளை வழங்கும் புதுமையான கண்டுபிடிப்புகளை வழங்கி வரும் டச்சு கம்பெனியுமான விசிக்ஸ் ஏடிஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் தன்னுடைய முதல் சர்வதேச அலுவலகத்தை சென்னை காரப்பாக்கத்தில் இன்று தொடங்கியுள்ளது. இந்த புதிய சர்வதேச அலுவலகமானது 5500 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. டச்சு அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த சர்வதேச அலுவலகமானது விசிக்ஸின் இந்தியத் திட்டங்களில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கும்.
விசிக்ஸ் ஏடிஜியின் முதல் சர்வதேச அலுவலகத்தை மாண்புமிகு தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. மனோ தங்கராஜ், ஆக்சஸ் டெக்னாலஜி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ரெனே ஸ்லெகர்ஸ், விசிக்ஸ் ஏடிஜி இந்தியாவின் இயக்குநர் திரு மோகன் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் இந்தியாவிற்கான நெதர்லாந்து தூதர் திரு. மார்டன் வான் டென் பெர்க் அவர்கள் திறந்து வைத்தார்.
பெட்ரோலியம் சுத்திகரிப்பு, பெட்ரோகெமிக்கல், எரிவாயு, உலோகவியல் மற்றும் பிற செயல்முறைத் தொழில்கள் போன்ற அதிக ஆபத்துள்ள தொழில்களில் பராமரிப்பு காரணமாக பணிகள் நிறுத்தம், வேலை நிறுத்தம் ஆகியவற்றின் போது விசிக்ஸின் இந்த அதிநவீன அனுபவ மையம் முதன்மையாக உயர் தொழில்நுட்ப மற்றும் முழு டிஜிட்டல் மொபைல் தீர்வுகளை வழங்கும். வரையறுக்கப்பட்ட இடங்களுக்குள் செய்யப்படும் பணியின் தன்மை அதிக ஆபத்தானதாகத் தீவிர எச்சரிக்கை கொண்டதாக இருக்கும். எனவே, ஒவ்வொரு தொழிற்துறையும் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அனைத்து ஊழியர்களுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் அதிகபட்ச பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வழங்குவதை விரும்புகின்றன. எங்களின் தனித்துவமான முன்முயற்சியானது கேமராக்கள், சென்சார்கள் மற்றும் இண்டர்காம்கள் போன்ற கண்காணிப்பு மற்றும் தொடர்புகொள்ளும் சாதனங்களை வழங்குகிறது.
தொடக்க விழாவின் போது ஆக்சஸ் டெக்னாலஜி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ரெனே ஸ்லெகர்ஸ் அவர்கள் பேசுகையில், “விசிக்ஸ் ஏடிஜியில் உள்ள அனைவருக்கும் இது ஒரு பெருமையான தருணம், ஏனெனில் இந்த அதிநவீன விசிக்ஸ் அனுபவ மையம், இந்தியா போன்ற பரந்த மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் அதன் பெஞ்ச்மார்க்கை (benchmark) உருவாக்குவதற்கான அணுகல் தொழில்நுட்பத்தின் மற்றொரு சான்றாக இருக்கும்” என்றார்.
விசிக்ஸ் ஏடிஜி இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் இயக்குநர் திரு. மோகன் வெங்கடேசன் அவர்கள் கூறுகையில், “எங்களின் முதல் சர்வதேச அலுவலகம் இந்தியாவில் சென்னையில் இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். வரையறுக்கப்பட்ட மிகவும் அதிக ஆபத்து நிறைந்த அதீத ஆபத்துக்கள் கொண்ட தொழில்களில் பணியாளர்களைப் பாதுகாக்க உயர் தரத்திலான பாதுகாப்பு, கட்டுப்பாடு மற்றும் செயல் திறன் மிகவும் அவசியம் என்பதை நாங்கள் உறுதியாக உணர்ந்துள்ளோம். இந்த புதிய அலுவலகம் திறக்கப்பட்டிருப்பது தொழிலக பாதுகாப்பு மற்றும் தொழில்துறை 4.0 இன் ஒரு பகுதியாக டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகளுக்கு முக்கிய பங்களிப்பாக இருக்கும்” என்றார்.