முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் காலமானார்

0
255

முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் (82) காலமானார்

30 ஆண்டுகளுக்கு மேலாக நாடளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவரும், முன்னாள் அமைச்சருமான பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் உடல்நலக்குறைவால் காலமானார். ராணுவத்தில் மேஜராக பணியாற்றிய அவர், பாஜக கட்சியின் உருவாக்கத்தில் பெரும் பங்கு ஆற்றியவர்.

இந்தியா- பாகிஸ்தான் மற்றும் இந்தியா – சீனா போரின் போது சிறப்பாக செயல்பட்ட ஜஸ்வந்த் சிங்கிற்கு, கடந்த 2001 ஆம் ஆண்டு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது வழங்கப்பட்டது.
5 முறைக்கு மேல் ராஜ்ய சபா உறுப்பினராக பதவி வகித்த அவரின் இழப்பு பாஜக விற்கு மட்டுமல்லாது நாட்டிற்கே பெரும் இழப்பு என்று மோடி கூறியுள்ளார். அவரது உடலானது அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.